14 வயது சிறுவன், 11 வயது சிறுமி என இரண்டு குழந்தைகளுக்கு ஏற்பட்டுள்ள கறுப்புப் பூஞ்சை தொற்று மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் முதன்முறையாக இரண்டு குழந்தைகளுக்கு கறுப்புப் பூஞ்சை நோய் கண்டறியப்பட்டுள்ளது. 14 வயது சிறுவன், 11 வயது சிறுமி என இரண்டு குழந்தைகளுக்கு ஏற்பட்டுள்ள கறுப்புப் பூஞ்சை தொற்று மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா மாநிலம் சித்திரதுர்கா மாவட்டத்தைச் சேர்ந்த 14 வயது சிறுவனுக்கும், பெல்லாரி மாவட்டத்தைச் சேர்ந்த 11 வயது சிறுமிக்கும் கறுப்புப் பூஞ்சை எனப்படும் மியூகோர்மைகோசிஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் பண்ணையில் பணிபுரிந்து வருகின்றனர். கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வந்த இவர்களுக்கு கறுப்புப் பூஞ்சை தொற்று ஏற்பட்டுள்ளது.
இந்த இரண்டு குழந்தைகளும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்கள் கடுமையான சிறார் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்” என்று மூத்த சுகாதார அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வெளிவந்த அறிக்கையில், இருவரும் மிகவும் மோசமான நிலையில் இருக்கும் தங்கள் கண்களில், குறைந்தது ஒன்றை இழக்க நேரிடும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் இரண்டு குழந்தைகளுக்கும் டைப் 1 நீரிழிவு நோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது மட்டுமல்லாமல் கறுப்புப் பூஞ்சை தொற்று அவர்களின் மூளை மற்றும் கண்களுக்கு பரவியுள்ளது என்று அவர்களுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.
பல்லாரி நகரில் சிகிச்சை பெற்று வந்த சிறுமி, போரிங் மருத்துவமனைக்கு கொண்டு வரப்படுவதற்கு முன்பாக அவள் கண்களில் வலி ஏற்பட்டுள்ளது. சிறுவனுக்கு காய்ச்சல் ஏற்பட்டதைத் தொடர்ந்து துமகுருவில் சிகிச்சை பெற்று வந்தார். அவருக்குக் கறுப்புப் பூஞ்சை இருப்பதாக மருத்துவர்கள் சந்தேகிதத்தை தொடர்ந்து சிறுவன் போரிங் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
கர்நாடக மாநிலத்தில் குழந்தைகளுக்கு மியூகோர்மைகோசிஸ் தொற்று ஏற்படுவது இது முதல் முறை. இதுவரை கர்நாடகாவில் 1,250 மியூகோர்மைகோசிஸ் நோய் பாதிப்புகள் பதிவாகியுள்ளன. அவர்களில் 18 பேர் குணமடைந்த நிலையில்கூட 39 நோயாளிகள் பூஞ்சை நோயால் தங்கள் உயிரை இழந்துள்ளனர். மொத்தம் 1,193 நோயாளிகள் தற்போது கர்நாடகாவில் மியூகோர்மைக்கோசிஸ் சிகிச்சையில் உள்ளனர். பெங்களூரு நகர மாவட்டத்தில் மட்டும் 521 நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளன.
கறுப்புப் பூஞ்சை நோயை தவிர்க்க, கொரோனா வைரஸுக்கு சிகிச்சையளிக்கும் முதல் வாரத்தில், மருத்துவர்கள் நோயாளிகளுக்கு ஸ்டீராய்டுகளைப் பயன்படுத்த வேண்டாம் என்று கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சர் மருத்துவர் கே. சுதாகர் வலியுறுத்தியுள்ளார். மேலும் அவர் மத்திய அரசிடமிருந்து பூஞ்சை நோய் சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் ஆம்போடெரிசின்-பி மருந்தை சுமார் 10,000 குப்பிகள் வரை கர்நாடகா பெற்றுள்ளதாகத் தெரிவித்தார். கர்நாடகாவைச் சேர்ந்த மத்திய அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான சதானந்த கவுடாவுடன் மியூகோர்மைகோசிஸுக்கு சிகிச்சையளிப்பதற்கான மருந்துகளுக்காக எட்டு நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தார்.