யாழ்ப்பாணம் பேரூந்து நிலையத்தில் உள்ள கழிப்பறைகளைக்கூட பராமரிக்கத் தெரியாத சபைதான் யாழ்ப்பாணம் மாநகரசபை உள்ளது என சுதந்திரக் கட்சியின் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தமை அவரிற்கு வரலாறும் தெரியாது நாட்டில் என்ன நடக்கின்றது என்பதும் தெரியாது கட்சியில் என்ன நடக்கின்றது என்பதும் தெரியாது என்பதனையே எடுத்துக்காட்டுகின்றது என மாநகர முதல்வர் இ.ஆனல்ட் தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் இடம் பெற்ற நிகழ்வில் உரையாற்றும்போது யாழ்ப்பாணம் பேரூந்து நிலையத்தில் உள்ள கழிப்பறைகளைக் கூட பராமரிக்கத் தெரியாத சபைதான் யாழ்ப்பாணம் மாநகரசபை உள்ளது எனத் தெரிவித்தமை தொடர்பில் கருத்து தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்
இது தொடர்பில் மாநகர முதல்வர் மேலும் கருத்து தெரிவிக்கையில்
யாழ்ப்பாணம் பேரூந்து நிலையத்தில் உள்ள கழிப்பறைகளைக்கூட பராமரிக்கத் தெரியாத சபைதான் யாழ்ப்பாணம் மாநகரசபை உள்ளது என சுதந்திரக் கட்சியின் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தமை அவரிற்கு வரலாறும் தெரியாது நாட்டில் என்ன நடக்கின்றது என்பதும் தெரியாது. கட்சியில் என்ன நடக்கின்றது என்பதும் தெரியாது. என்பதனையே எடுத்துக்காட்டுகின்றது. ஏனெனில் அந்த பேரூந்து நிலையச் சூழல் கடந்த காலத்தில் மாநகர சபையின் அதிகாரத்தின் கீழ் இல்லாமல் போனதற்கு இந்த சுதந்திரக் கட்சியினரும் காரணம்.
அன்றிலிருந்து அங்கேயுள்ள பேரூந்து சேவையை விட வியாபார சேவையை நடாத்துவதனால் எழுந்த சர்ச்சையால் அப் பகுதியில் உள்ள கழிப்பறை பராமரிப்பும் பேரூந்து நிலையத்தின் கீழேயே உள்ளது. இவரின் கூற்றுமூலம் ஒன்று தெளிவாகியுள்ளது இவ்வாறான சேவைகளை போக்குவரத்து சபை நடாத்த முடியாது என்பதனை ஒப்புக்கொள்கின்றார்.
இதேபோன்றே இந்த நாட்டில் தமிழர்களை கொன்றொழித்தவர்கள் ஐ.தே.கட்சியே அன்றி சுதந்திரக் கட்சி அல்ல எனவும் கூறியுள்ளார். சந்திரிகா அம்மையாரின் 10 வருட ஆட்சி எந்த அரசின் ஆட்சி மகிந்த ராஜபக்சவின் 11 வருட ஆட்சி எந்தக் கட்சியின் ஆட்சி பண்டாரநாயக்கா சிறீமா ஆகியோரின் ஆட்சிக் காலத்தில் தமிழர்களை தங்கத் தாம்பூலத்திலா வைத்தீர்கள் வகை தொகை இன்றி கொனறொழித்தமையை மறந்து அல்லது மறைத்து பேச முற்படக்கூடாது .
செம்மணி முதல் நவாலி எனத் தொடர்ந்து இறுதி யுத்த காலத்தில் ஒரு லட்சம் பேர் வரையில் கொன்றொழித்தது உங்கள் கட்சி ஐ.தே.கட்சியும் சரி சுதந்திரக் கட்சியும் சரி இரண்டுமே கறை படிந்த கட்சியாகவே உள்ளது. இதில் யார் கூட கொன்றொழித்தீர்கள் என்பதே உங்கள் பிரச்சனை நீங்கள் அவர்களை மோதகம் என்றால் நீங்கள் கொழுக்கட்டை இதுதான் வேறுபாடே அன்றி இரண்டுமே ஒரு குட்டையில் ஊறிய மட்டைதான். அதாவது டட்லி – செல்வா ஒப்பந்தத்தினை கிழித்தமை எந்தக் கட்சி அதற்கு பிரதி உபகாரமாக ஐ.தே.க பண்டா செல்வா ஒப்பந்தத்தை கிழித்தனர்.
எமது சபையின் செயல்பாடுகளை திறம்பட நடாத்த முடியாமல் தற்போது இருப்பதற்கு தங்கள் கட்சியும் ஓர் காரண கர்த்தா. இவ்வாறுள்ள நிலையில் வரலாறும் தெரியாது நாட்டில் என்ன நடக்கின்றது என்பதும் தெரியாது. கட்சியில் என்ன நடக்கின்றது என்பதும் தெரியாது. வாயில் வந்தவற்றை உரையாற்ற முடியாது. இவ்வாறான தேசிய வாதக் கட்சிகளின் கூற்றை நம்பிச் செல்லும் எமது கோடாரிக் கம்புகளையும் எண்ணி மனம் நோக வேண்டியுள்ளது. அதேநேரம் யாழ்ப்பாணம் மாநகர சபை எப்போது கூட்டமைப்பின் பிடியில் வரும் என காத்திருந்த எமது புலம்பெயர் உறவுகள் தற்போது அழைத்து நிலமையை உணர்கின்றனர் என்றார்.
next post
Recent posts
10 ஆவது நாடாளுமன்றத்தில் இடம்பெறவுள்ள தமிழ் எம்.பிக்கள்
பொதுத்தேர்தலில் மக்கள் ஆணை மூலம் 25 தமிழ் எம்.பிக்கள் தெரிவாகி இருந்தனர்.இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு கிடைக்கப்பெற்ற தேசியப் பட்டியல் ஆசனம் ஊடாக வைத்தியர் ப. சத்தியலிங்கமும் தேசிய...
ஜனாதிபதி அனுரகுமார தலைமையிலான புதிய அமைச்சரவை இன்று பதவியேற்பு
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் ஆட்சியின் புதிய அமைச்சரவை சற்று முன்னர் அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய நிதி, பாதுகாப்பு மற்றும் டிஜிட்டல் அமைச்சுக்களை சமகால ஜனாதிபதி அநுகுமார திசாநாயக்க தன்வசம்...
தமிழரசு கட்சி சஜித்துக்கு ஆதரவு வழங்கும் தீர்மானத்தில் எனக்கு உடன்பாடு இல்லை..
தமிழரசு கட்சியின் மத்திய சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு வழங்குவதாக எடுத்த முடிவு எனக்கு உடன்பாடு இல்லை என தமிழரசு கட்சியின் கொழும்பு கிளை தலைவரும் மத்திய குழு...
தமிழ்ப் பொதுவேட்பாளர் தமிழரசுக்கட்சிக்கு உதவி
இன்று வவுனியாவில் தமிழரசுக்கட்சியின் மத்திய குழுக்கூட்டம் நடப்பதாக அறிவிக்கப் பட்டிருந்தது. ஆனால் இன்று நடந்த கூட்டத்தில் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா கலந்து கொள்ளவில்லை. அதன் முக்கிய...
பிரேஸிலின் வோபாஸ் விமான சேவைக்கு சொந்தமான விமானம் சாவோ போலா நகரில் விழுந்து விபத்து ஏற்பட்டதில் 62 பேர் உயிரிழந்தனர்.
இரட்டை எஞ்சின் கொண்ட அந்த விமானம் தெற்கு மாநிலமான பரானாவில் உள்ள காஸ்கேவலில் இருந்து சாவோ பாலோ நகரிலுள்ள குவாருல்ஹோஸ் விமான நிலையத்திற்குப் பறந்து கொண்டிருந்தபோது, வின்ஹெடோ...
138 ரன்னில் சுருண்ட இந்தியா: 27 ஆண்டுக்கு பிறகு தொடரை வென்ற இலங்கை
இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி தற்போது 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி டையில்...
இலங்கைக்கு 3 வது இடம்
2024 பாரிஸ் ஒலிம்பிக் தொடக்க விழாவிற்கான 11 சிறந்த கலாச்சார ஆடைகள் பெயரிடப்பட்டுள்ளன. அவற்றுள் இலங்கையின் கலாசாரத்தை வெளிக்காட்டி உருவாக்கப்பட்ட ஆடையானது மூன்றாம் இடத்தைப் பெற முடிந்துள்ளது....
பென்சில்வேனியாவில் நடந்த பிரசார கூட்டத்தில் டிரம்ப் காதில் காயத்துடன் தப்பினார்.
பென்சில்வேனியாவில் நடந்த பிரசார கூட்டத்தில் டிரம்ப், பேசிக் கொண்டு இருந்த போது மர்ம நபர் திடீரென துப்பாக்கியால் சுட்டார். இதில் டிரம்ப் காதில் காயத்துடன் தப்பினார். மருத்துவமனையில்...
வரலாற்றில் முதல் முறையாக மட்டு. ஆயர் இல்லத்தினால் அருட்தந்தையர்களுக்கு எதிராக வழக்கு
மட்டக்களப்பு (Batticaloa) ஆயர் இல்லத்தில் இடம்பெற்ற ஒன்று கூடலை திருட்டுத்தனமாக வீடியோ செய்து முகநூலில் பதிவேற்றம் செய்த சம்பவம் தொடர்பாக ஆயர் இல்லத்தினால் இருவருக்கு எதிராக தொடரப்பட்ட...