தமிழ், சிங்கள புதுவருடத்திற்கான பஞ்சாங்கம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி செயலகத்தில் இன்று(செவ்வாய்கிழமை) முற்பகல் அமைச்சர் சஜித் பிரேமதாச ஜனாதிபதி செயலகத்தில் வைத்து அதனை ஜனாதிபதியிடம் கையளித்துள்ளார்.
பாரம்பரியங்களுக்கேற்ப சுபநேரங்களை அடையாளப்படுத்திய பத்திரம் இதன்போது ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
புதுவருடப் பிறப்பு புண்ணிய காலம், உணவு சமைத்தல், அடுப்பு மூட்டுதல், உணவு பரிமாறுதல் மற்றும் தொழிலுக்காக புறப்படுதல் ஆகிய விடயங்கள் சுபநேர பத்திரத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் பர்னாட் வசந்த, கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் அனுஷா கோகுல ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.