
♦ எலுமிச்சைச் சாறு, ரோஜா பன்னீர் சம அளவு எடுத்து அதனை கலந்து முகத்தில் பூசி அரை மணிநேரம் ஊறவைத்து, பின்னர் வெது வெதுப்பான நீரில் கழுவவும். வாரம் மூன்று முறை இதனை செய்தால் முகப்பரு மறைந்துவிடும். எந்த காரணம் கொண்டும் எலுமிச்சைச் சாற்றினை தனியாக முகத்தில் தேய்க்கக் கூடாது.
♦ பப்பாளிச் சாற்றினை முகத்தில் பூசி வர பருவுக்கு இயற்கையான சிகிச்சை கிடைக்கும். ஆப்பிள் பழத்தை நன்றாக மசித்து அதில் சிறிது தேன் கலந்து முகத்தில் பூசி வர பரு மறையும்.
♦ துத்தி இலையை அரைத்துப் பருக்கள் மீது தடவிவரப் பருக்கள் மறையும்.
♦ நன்னாரி வேர் கஷாயத்தால் பருக்கள் தீரும்.
♦ வெட்டி வேர், சந்தனம் ஆகிய இரண்டையும் தூள் செய்து நீர்விட்டுக் கலந்து கட்டிகள் மீது தடவிவர, முகப் பருக்கள் மாறும்.
♦ பாசிப் பருப்புப் பொடியுடன் நெல்லிக்காய் தூள் கலந்து சோப்புக்குப் பதில், தினசரிக் குளிக்கப் பயன்படுத்தினால் பரு மாறைந்து உடல் ஒளிபெறும்.
♦ சாதிக்காய், சந்தனம், மிளகு ஆகிய மூன்றையும் அரைத்துப் பற்று போட, பரு மறையும்.
♦ தேனுடன் சிறிது லவங்க பட்டையின் தூளை சேர்த்து முகத்தில் தடவலாம்.
♦ கடுகுடன் சிறிது தேனை கலந்து முகத்தில் தடவ முகப்பரு நீங்கும்.

♦ தக்காளி சாற்றினை முகத்தில் தடவி வர முகப்பரு நீங்கும்.
♦ முட்டையின் வெள்ளை கருவை முகத்தில் தடவி வர முகப்பரு நீங்கும்.
♦ முகபரு வராமல் இருக்க வேப்பிலையை தண்ணீரில் போட்டு காலையில் முகம் கழுவினால் முகத்தில் பரு வராது, முகம் பளிச்சிடும்.
♦ பாசிப்பயறு மாவை தேவையான அளவு எடுத்து அதில் எலுமிச்சம் பழச்சாறு பிழிந்து நன்கு கலக்கி முகத்தில் தடவி 15 நிமிடங்கள் காயவைத்து பின் முகத்தை கழுவி வந்தால் முகப்பரு நீங்கும். பருவினால் உண்டான தழும்புகள் மாறும்.
♦ பூண்டினை நசுக்கி சாற்றினை பயன்படுத்தினால் முகப்பரு நீங்கும்.
♦ மூன்று மணி நேரத்திற்கு 1 முறை முகத்தை குளிர்த நீரால் கழுவினால் முகப்பரு நீங்கும்.
♦ சோற்று கற்றாழையின் ஜெல்லை முகத்தில் தடவி வர பருக்கள் மறையும்.
♦ காய்ச்சாத பாலினை முகத்தில் தடவிவர முகபரு நீங்கும்.