யாழ்ப்பாணம் மல்லாகம் பங்களா வீதியில் உள்ள வீடு ஒன்றில் இனந்தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வீட்டுக்குள் புகுந்த நபர்கள் வீட்டின் கண்ணாடிகளை அடித்து நொருக்கியுள்ளனர்.
பெற்றோல் குண்டுத்தாக்குதலையும் நடத்தி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
இது தொடர்பாக தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது .