👉 பொதுவாகவே நாம் சாப்பிடும் உணவுகளாக இருந்தாலும் சரி பழமாக இருந்தாலும் சரி அனைவரும் சத்துகள் நிறைந்துள்ள பழத்தை தான் அதிகமாக எடுத்துக்கொள்ள விரும்புவார்கள். அதில் ஒன்று தான் ரம்புட்டான். இந்த பழத்தில் பலவகையான ஊட்டசத்துகள் நிறைந்து இருகின்றது. இது பற்றி விரிவாக பார்க்கலாம்.

👉 ரம்புட்டான் பழத்தின் அறிவியல் பெயர் நெபிலியம் லப்பாசியும் (Nephelium lappaceum) ஆகும். இது பெரும்பாலும் தென்கிழக்கு ஆசியாவில் தான் அதிகமாக பயிரிடப்படும்.
ரம்புட்டானில் உள்ள சத்துக்கள்:
👉 100 கிராம் ரம்புட்டான் பழத்தில் 1.3 முதல் 2 கிராம் வரை நார்ச் சத்து உள்ளது. இது ஆப்பிள், ஆரஞ்சு அல்லது பேரீச்சம்பழங்களில் உள்ள நார்ச் சத்துக்கு சமமாகும்.
👉 100 கிராம் ராம்புட்டான் பழத்தில் 0.5 கிராம் கொழுப்பு இருகின்றது. 100 கிராம் ரம்புட்டான் பழத்தில் ஒரு கிராமுக்கும் குறைந்த அளவில் புரதச் சத்து உள்ளது. மேலும், இதில் மாங்கனீசு, பாஸ்பரஸ், பொட்டாசியம், மெக்னீசியம், இரும்பு மற்றும் துத்தநாகச் சத்தும் காணப்படுகிறது.
ரம்புட்டான் பழத்தின் நன்மைகள்:
🍒 வைட்டமின் சி தேவையை பூர்த்தி செய்கிறது.
🍒 அனீமியாவை தடுக்கிறது.
🍒 காய்ச்சலில் இருந்து பாத்துக்காகிறது.
🍒 உடல் எடை குறைக்க உதவுகிறது.
🍒 எலும்புகளைப் பலப் படுத்துகிறது.
🍒 சிறுநீரக கல் உருவாகாமல் தடுக்கிறது.
🍒 இதய ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது.
🍒 உடனடி ஆற்றலை தருகிறது.
🍒 நீரிழப்பை தடுக்கிறது.
🍒 சிறுநீரக ஆரோக்கியத்தில் உதவுகிறது.

யாரெல்லாம் ரம்புட்டான் பழம் சாப்பிடக் கூடாது?
👉 கர்ப்பிணி பெண்கள் பெரும்பாலும் இந்த பழத்தினை சாப்பிடுவதனை தவிர்த்து கொள்ள வேண்டும். ஏனென்றால் இந்த பழம் சாப்பிடுவதனால் வயிற்றில் வெப்பம் உண்டாகிய கருச்சிதைவு ஏற்படும் வாய்ப்புகள் உள்ளது.
👉 மேலும், ரம்புட்டான் பழம் தோல்களில் அலர்ஜியினை ஏற்படுத்துகிறது. அதுமட்டுமல்லாமல் டைப் 2 நீரிழிவு நோயாளிகள் இந்த பழத்தினை சாப்பிடுவதனால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவினை அதிகரிக்க செய்கிறது.
👉 உயர் இரத்த அழுத்தம் பிரச்சினை இருப்பவர்கள் இந்த பழங்களை உணவில் சேர்த்துக்கொள்வதற்கு முன் வைத்தியரிடம் ஆலோசனையை பெற்றுக்கொள்ள வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.