Featured உலகம் செய்திகள் தலைப்பு புதிய செய்திகள்

அமெரிக்கா அதிரடி-மியான்மர் ராணுவ தலைவர்கள் மீது பொருளாதார தடை

மியான்மரில் நடந்த நாடாளுமன்ற தேர்தலுக்கு பின்னர் அந்த நாட்டின் நாடாளுமன்றம் கடந்த 1-ந்தேதி கூடவிருந்த நிலையில் ராணுவம் அதிரடியாக ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது. அந்த நாட்டின் தலைவர் ஆங் சான் சூ கி உள்ளிட்ட தலைவர்கள் கைது செய்யப்பட்டு வீட்டுச்சிறையில் வைக்கப்பட்டுள்ளனர்.

இதை வல்லரசு நாடான அமெரிக்கா கடுமையாக கண்டித்தது. அங்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தியது.

மியான்மர் மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்துகின்றனர். ஆனால் அங்கு ராணுவ ஆட்சி ஏற்படுத்தப்பட்டதை அந்த நாட்டின் ராணுவ தளபதி மின் ஆங் ஹலேங் நியாயப்படுத்தினார். இந்த நிலையில் மியான்மர் ராணுவ தலைவர்கள் மீது அமெரிக்கா அதிரடியாக பொருளாதார தடை விதித்து நடவடிக்கை எடுத்துள்ளது.

இதையொட்டி வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடன் நேற்று முன்தினம் நிருபர்களிடம் பேசியபோது, “மியான்மரில் நடந்த சதித்திட்டத்தின் மீதான விளைவுகளை சுமத்த தொடங்குவதற்கான தொடர்ச்சியான நடவடிக்கைகளை அறிவிக்கிறேன். அமெரிக்காவில் மியான்மர் அரசாங்க நிதியில் இருந்து 1 பில்லியன் டாலர்களை எடுப்பதற்கான முறையற்ற அணுகல்களை தடுக்க அமெரிக்க அரசு நடவடிக்கை எடுக்கிறது. மியான்மரில் ஆட்சி கவிழ்ப்பில் தொடர்புடைய ராணுவ தலைவர்கள், அவர்களது வணிக நலன்கள், நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் மீது பொருளாதார தடை விதிக்கும் நிர்வாக உத்தரவுக்கு ஒப்புதல் அளித்துள்ளேன்” என கூறினார். “இந்த நடவடிக்கைக்கு முதல் கட்டமாக இலக்கு ஆகிறவர்கள் இந்த வாரம் அடையாளம் காணப்படுவார்கள். மியான்மர் அரசு சொத்துகளை முடக்குகிறோம்” எனவும் அவர் அறிவித்தார்.

Recent posts

ஒரு புதிய உலக ஒழுங்கின் தொடக்கம்

நாடுகள் இதைச் செய்ய வேண்டிய அவசியமில்லை’: டிரம்பிற்கு கனடா, இந்தியா, ஆஸ்திரேலியா, கென்யா அமெரிக்க மண்ணிலிருந்து அனுப்பிய வலுவான செய்தி 2026 ஆம் ஆண்டு செப்டம்பர் 21...
Thamil Paarvai

நீதிக்கான நீண்ட பயணம்

ஈஸ்டர் தாக்குதல் வழக்கு தீர்ப்பு: 15 பேர் குற்றவாளிகள், 9 பேர் விடுதலை – முழு விவரம் 2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறன்று இலங்கையை உலுக்கிய...
Thamil Paarvai

பாதுகாப்பான சாலைகளை நோக்கி

ஒன்டாரியோவில் வணிக டிரக் ஓட்டுநர் பயிற்சியில் புதிய மாற்றங்கள்: 103 மணிநேர கட்டாயப் பாடத்திட்டம் அறிமுகம். கனடாவின் ஒன்டாரியோ மாகாண அரசு, வணிக டிரக் ஓட்டுநர்களுக்கான பயிற்சி...
Thamil Paarvai

அடையாளத்தின் புதிய வரையறை

மைத்ரேயி ராமகிருஷ்ணன் (Maitreyi Ramakrishnan) என்பவர் கனடாவைச் சேர்ந்த தமிழ்-கனடிய நடிகை. நெட்ஃபிளிக்ஸ் தளத்தின் ‘நெவர் ஹேவ் ஐ எவர்’ (Never Have I Ever) என்ற...
Thamil Paarvai

தமிழர் DNA ஆய்வுகள் குறித்த அதிர்ச்சிகரமான உண்மைகள்

தமிழர்களின் மரபணு வரலாறு குறித்து உலகம் முழுவதும் உள்ள விஞ்ஞானிகள் தொடர்ச்சியாக ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்தியாவின் தமிழ்நாடு மற்றும் இலங்கையில் வாழும் தமிழ் மக்களின் DNA-க்களை...
Thamil Paarvai

கனேடிய தரை எல்லையில் ஐரோப்பா: “விஸ்கி போரின்” விளைவு

டென்மார்க்குடனான 49 ஆண்டு கால ஹான்ஸ் தீவு பிரச்சினை முடிவுக்கு வந்ததன் மூலம், கனடா-ஐரோப்பா இடையே முதல் தரை எல்லை உருவாகியுள்ளது. இந்த வரலாற்று சம்பவம், தற்போது...
Thamil Paarvai

கனடாவின் “இரும்புத் தண்டுவடம்” வாஷிங்டனை அதிரவைக்கிறது

கனடியப் பிரதமர் மார்க் கார்னி, நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்தவும், அமெரிக்காவைச் சார்ந்திருப்பதைக் குறைக்கவும் $1 டிரில்லியன் (C$1 டிரில்லியன்) மதிப்பிலான முதலீட்டை ஈர்க்கும் மகத்தான திட்டத்தை அறிவித்துள்ளார்....
Thamil Paarvai

ட்ரம்பின் $5,000 அறிவிப்பு பரபரப்பு

2026 செப்டம்பர் 11 — இன்று அமெரிக்கா 9/11 தாக்குதலின் 25 ஆவது ஆண்டு நினைவு தினத்தை அனுசரிக்கிறது. இந்த நினைவு தினத்தை முன்னிட்டு அதிபர் டொனால்ட்...
Thamil Paarvai

நூற்றாண்டு கூட்டாண்மை பிறந்தது

2026 செப்டம்பர் 10 ஆம் தேதி, கனடாவின் ஆல்பர்ட்டா மாகாணத்தில் உள்ள கல்கரி நகரில் ஒரு வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வு நடைபெற்றது. கனடா பிரதமர் மார்க் கார்னியும்,...
Thamil Paarvai

Leave a Comment