இலங்கை செய்திகள் புதிய செய்திகள்

சிறுவன் உயிரிழப்பு…… வைத்தியர்களின் கவனயீனத்தால்

மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுவனுக்கு இரத்தத்தினை மாற்றி ஏற்றியதால் அச்சிறுவன் உயிரிழந்துள்ளதாக பெற்றோர் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இதேவேளை இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் இடம்பெற்றுவருவதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள வந்தாறுமூலை பலாச்சோலையைச் சேர்ந்த ஜெயக்காந்தன் விதுலஷ்சன் (9 வயது) கடந்த முதலாம் திகதி விபத்தில் காயமடைந்த நிலையில் வைத்திசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வந்துள்ளார். இதன்போது அவருக்கு இரத்தம் ஏற்றப்பட்டுள்ளது.

இதனையடுத்து குணமடைந்து வந்த சிறுவன், மீண்டும் நோய்வாய்ப்பட்டுள்ளார். அதன்பின்னர் அவரை அவசர சிகிச்சை பிரிவுக்கு மாற்றியுள்ளனர். இதன்போது சிறுவனின் கிட்னி பகுதியில் கசிவு ஏற்பட்டுள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து கடந்த 17ஆம் சிறுவன் அசைவற்று காணப்பட்டதை அவதானித்த பெற்றோர், வைத்தியர்களிடம் தெரிவித்துள்ளனர். இதன்போதே குறித்த சிறுவனுக்கு தவறான முறையில் இரத்தம் ஏற்றப்பட்டதை வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் இரத்தம் மாற்றி ஏற்றியதாலேயே கிட்னி இரண்டும் பாதிக்கப்பட்டதாக வைத்தியர் தம்மிடம் கூறியதாக பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

இந்த விடயம் தொடர்பாக தெரிவித்த சிறுவனின் தந்தை, “மகனுக்கு இரத்தம் ஏற்ற வேண்டிய தேவை இல்லாத போதிலும் அந்த பெண் வைத்தியர் வேறு நோயாளிக்கு ஏற்ற வேண்டிய இரத்தத்தை எனது மகனுக்கு ஏற்றியுள்ளார். இதனால் எனது மகன் கிட்ணி பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.

இதனையடுத்து பிரேத பரிசோதனை இடம்பெற்ற பின்னர், இரத்தம் மாற்றி ஏற்றப்பட்டதால் எனது மகன் மரணித்துள்ளதாகவும் விபத்தால் மரணிக்கவில்லை என்றும் பொலிஸாரிடம் அறிக்கை வழங்கியுள்ளதாக சட்டவைத்திய அதிகாரி என்னிடம் தெரிவித்தார்.

பயிலுனர்களாக வரும் வைத்தியர்களாலேயே இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுகின்றன. எனவே எனது மகனுக்கு நீதிவேண்டும். பிழை செய்தோர் தண்டிக்கப்படவேண்டும்” என அவர் கண்ணீர்மல்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதேவேளை இந்த குற்றச்சாட்டு தொடர்பாக மட்டு போதனா வைத்தயசாலை பணிப்பாளர் திருமதி கே. கணேசலிங்கத்துடன் எமது பிராந்திய செய்தியாளர் தொடர்பு கொண்ட போது,

“கடந்த 19ஆம் திகதி போதனா வைத்தியசாலையில் உயிரிழந்த 9 வயதுடைய விதுலஷ்சனின் சம்பவம் தொடர்பாக தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டு குறித்து உடனடியாக அதனுடன் தொடர்புடையவர்கள் அனைவருக்கும் முதலில் விளக்கம் கோரி கடிதம் அனுப்பியுள்ளேன்.

அவர்களிடமிருந்து கோரப்பட்ட அந்த விளக்க கடிதம் கிடைத்தவுடன் விசாரணைக்குழு அமைத்து உடன் விசாரணை செய்யப்பட்டு அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்படும். யாராக இருந்தாலும் பிழை இழைத்தவர்கள் தண்டிக்கப்படுவார்கள்” என அவர் தெரிவித்துள்ளார்.

Recent posts

கனடா புதிய வர்த்தக கூட்டணிகளை அமைக்கும் நிலையில் ட்ரம்பிற்கு கார்னி எச்சரிக்கை

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் வர்த்தக அச்சுறுத்தல்களுக்கு மத்தியில், கனடா பிரதமர் மார்க் கார்னி தனது நாட்டின் பொருளாதார உத்தியில் முக்கியமான மாற்றத்தை அறிவித்துள்ளார். அமெரிக்காவை சார்ந்திருப்பதில்...
Thamil Paarvai

கனடா அலுமினிய விலை உயர்வு: அமெரிக்க தொழில் துறையில் அதிர்ச்சி!

அமெரிக்காவிற்கு கனடா அலுமினியத்தின் புதிய விலை நிர்ணயம் அமெரிக்க தொழில் துறையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 50% இறக்குமதி வரி மற்றும் உலகளாவிய விநியோக தடங்கல்கள் காரணமாக...
Thamil Paarvai

உலகப் பொருளாதாரம் திரும்பியது

உலகப் பொருளாதாரம் திரும்பியது: BRICS இப்போது G7-ஐ விடப் பெரியது! உலகப் பொருளாதாரத்தில் ஒரு வரலாற்று மாற்றம் நிகழ்ந்துள்ளது. இரண்டாம் உலகப் போருக்குப் பின் மேற்கத்திய நாடுகளால்...
Thamil Paarvai

“இதுதான்”

“இதுதான்”: கனடா $1 டிரில்லியன் திட்டத்தை உறுதிப்படுத்துகிறது – கார்னி டிரம்பின் வர்த்தகப் போரை முடக்குகிறார் ஒட்டாவா, செப்டம்பர் 5: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் வர்த்தக...
Thamil Paarvai

அமெரிக்க நிறுவனங்கள் என்று நீங்கள் நினைக்கும் கனடிய நிறுவனங்கள்

“அமெரிக்கர் எதிர்வினையாற்றுகிறார்: அமெரிக்க நிறுவனங்கள் என்று நீங்கள் நினைக்கும் 7 கனடிய நிறுவனங்கள்” என்ற தலைப்பில் ஒரு குறிப்பிட்ட ஆழமான தமிழ்க் கட்டுரை இல்லை. இருப்பினும், இந்தத்...
Thamil Paarvai

கனடா டிரம்பிற்கு கட்டணம் விதிக்கிறது

‘இலவசத் தண்ணீர் இல்லை’: கனடா டிரம்பிற்கு ஒவ்வொரு துளி தண்ணீருக்கும் கட்டணம் விதிக்கிறது ஒட்டாவா, செப்டம்பர் 5: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடனான வர்த்தகப் போர் மேலும்...
Thamil Paarvai

ஒரு புதிய அமெரிக்காவை உருவாக்கும் அதிர வைக்கும் திட்டம்.

அமெரிக்காவின் Project 2025: ஒரு புதிய அமெரிக்காவை உருவாக்கும் அதிர வைக்கும் திட்டம்! 2024 ஆம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக, அமெரிக்க அரசியல் வட்டாரங்களில்...
Thamil Paarvai

சீன-ரஷ்யா-இந்திய கூட்டணி: டிரம்பிற்கு ஆபத்தா?

2025 ஆம் ஆண்டு, உலக அரசியலில் ஒரு முக்கிய திருப்புமுனை ஏற்பட்டுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் கடுமையான வரிக் கொள்கைகளும், ஏகபோக போக்கும், உலகின் மூன்று...
Thamil Paarvai

ஒன்டாரியோவில் கடும் புயல்: சேதம் விளைவிக்கும் காற்று, கனமழை, மற்றும் சூறாவளி அபாயம்

தெற்கு ஒன்டாரியோவில் செப்டம்பர் 2, 2026 அன்று கடுமையான புயல்கள் தாக்கின. இந்தப் புயல்கள் கனமழை, சேதம் விளைவிக்கும் காற்று, பெருங்கற்கள், மற்றும் சூறாவளி (tornado) அபாயத்தை...
Thamil Paarvai

Leave a Comment