
நாளுக்கு நாள் விஞ்ஞானம் வளர்ந்து கொண்டே போகிறது. நமது வாழ்வுக்கு தீமை அமைக்கும் கார்பனீராக்சைடையை விஞ்ஞானிகள் புதிய முறையில் ஆராய்ந்து அவற்றை ஜெட் விமானங்களுக்கு பயன்படுத்தலாம் என்று கண்டுப்பிடித்துள்ளனர். அப்படி என்ன முயற்சியைக் கையாண்டார்கள் என்பதை வாங்கப் பார்க்கலாம்.
கார்பனீராக்சைடு:
கார்பனீராக்சைடு (Carbon dioxide) என்பது CO2 என்ற %லக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு நிறமற்ற வாயுவாகும். காபனீரொக்சைட்டு, கார்பன்-டை-ஆக்சைடு, கரியமிலவாயு என்று பல்வேறு பெயர்களாலும் இதை அழைக்கிறார்கள். கார்பனீராக்சைடு உலர் காற்றைக் காட்டிலும் 60% அடர்த்தி மிகுந்ததாகும்.

ஜெட் விமானங்களில் பயன்படுத்தும் திரவங்கள்:
📌 ஜெட் எரிபொருள் என்பது பல்வேறு வகையான ஹைட்ரோகார்பன்களின் கலவையாகும். அவற்றின் அளவுகளின் வரம்பு (%லக்கூறு எடைகள் அல்லது கார்பன் எண்கள்) உறைபனி அல்லது புகை புள்ளி போன்ற தயாரிப்புக்கான தேவைகளால் வரையறுக்கப்படுகிறது.
📌 மண்ணெண்ணெய் வகை ஜெட் எரிபொருள் (ஜெட் ஏ மற்றும் ஜெட் ஏ-1 உட்பட) சுமார் 8 முதல் 16 வரை கார்பன் எண் விநியோகத்தைக் கொண்டுள்ளது (ஒரு %லக்கூறுக்கு கார்பன் அணுக்கள்); பரந்த-வெட்டு அல்லது நாப்தா வகை ஜெட் எரிபொருள் (ஜெட் பி உட்பட), சுமார் 5 முதல் 15 வரை கார்பன் எண் விநியோகத்தைக் கொண்டுள்ளது.

ஜெட் விமானங்களில் எப்படி உபயோகிப்பது:
💫 உலக அளவில் வளிமண்டலத்தில் வெகுவாக அதிகரித்து வரும் காபனீரொட்சைட்டு உயிரினங்களுக்கு பெரிய அச்சுறுத்தலாக மாறி வருகின்றது.
💫 இவ் அதிகரிப்பைக் குறைப்பதற்கு விஞ்ஞானிகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
💫 இவற்றில் காபனீரொட்சைட்டு வாயுவினை பிறிதொரு வடிவத்திற்கு மாற்றுவதையும் பரீட்சித்து வருகின்றனர்.
💫 இப்படியான நிலையில் காபனீரொட்சைட்டினை ஜெட் விமானங்களின் எரிபொருளாக மாற்ற முடியும் என தற்போது கண்டறிந்துள்ளனர்.
💫 ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களே இதனைக் கண்டுபிடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
💫 Organic Combustion Method (OCM) to reverse the natural process of burning fossil fuel அல்லது இயற்கை வாயு எனும் பொறிமுறையினை இதற்கு பயன்படுத்துகின்றனர்.

💫 அதாவது படிமங்களில் இருக்கும் ஹைட்ரோ கார்பன்கள் எரிவடைந்து காபனீரொட்சைட்டினை உருவாக்குகின்றன. இதன்போது அவை சக்தியை வெளிவிடுகின்றன.
💫 இதில் OCM பொறிமுறையினைப் பயன்படுத்தி மேற்கண்ட செயற்பாட்டினை பின்னோக்க மேற்கொள்ள முடியும் என அவர்கள் கண்டறிந்துள்ளனர்.
💫 அதாவது காபனீரொட்சைட்டு வாயுவினை திரவ எரிபொருளாக மாற்ற முடியும்.
💫 இவ்வாறு மாற்றப்பட்ட எரிபொருளை ஜெட் விமானங்களில் பயன்படுத்த முடியும் என கூறுகின்றனர்.
‘விஞ்ஞான ஆராய்ச்சி என்பது தொழில்களில் மிகவும் உற்சாகமாகவும் மற்றும் பலனளிக்கும் ஒன்றாகும்.”