Featured உலகம் செய்திகள் தலைப்பு புதிய செய்திகள்

பிப்-22ம் தேதி பூமிக்கு மிக அருகில் பறக்கவுள்ள அபாயகரமான சிறுகோள்.

பூமியைக் கடந்த விண்கற்கள் பற்றி பல அறிக்கைகள் கடந்த 2020-ம் ஆண்டில் வெளியாகியுள்ளன. மேலும் சிறுகோள்கள் என்று அழைக்கக்கூடிய பல விண்வெளி பாறைகள் இந்த ஆண்டிலும் நமது கிரகத்திற்கு மிக நெருக்கமாக பறக்க இருப்பதாக வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது, 2020 XU6 என்ற ஒரு சிறுகோள் பூமியை நோக்கி நகர்ந்து வருவதாகவும், இந்த கோள் பூமிக்கு மிக அருகில் கடந்து செல்லும் எனவும் கூறப்பட்டுள்ளது. இந்த சம்பவம் பிப்ரவரி 22-ம் தேதி அன்று நடக்க இருப்பதாக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

இதுதொடர்பாக Daily Express-ல் வெளியான அறிக்கையின்படி, இந்த சிறுகோள் 213 மீட்டர் நீளம் கொண்டதாகும். இது நியூயார்க்கில் அமைந்துள்ள ஸ்டாச்சு ஆப் லிபர்ட்டி சிலையை (93 மீட்டர்) விட இரண்டு மடங்கு பெரியது. இது தற்போது சூரிய குடும்பத்தின் வழியாக ஒரு மணி நேரத்திற்கு 30,240 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது. அதாவது வெறும் ஒரு மணி நேரத்தில் பூமியைச் சுற்றி வரும் அளவுக்கு இதன் வேகம் இருக்கிறது.

நாசா, இந்த 2020 XU6 என்ற சிறுகோளை ‘Near Earth Object’ என்று வர்ணித்துள்ளது. மேலும் இதை அபாயகரமானவை என்றும் அழைத்துள்ளது. இருப்பினும், அதிர்ஷ்டவசமாக இந்த சிறுகோள் பறக்கும் போது நமது பூமியைத் தாக்கும் என்று அச்சப்படத் தேவையில்லை என நாசா குறிப்பிட்டுள்ளது. இதுகுறித்து நாசா தனது ஜெட் ப்ராபல்ஷன் லேபரேட்டரி (JPL) இணையதளத்தில், “பூமிக்கு மிக அருகில் பறக்கும் பொருட்கள் என்றால் அது வால்மீன்கள் மற்றும் சிறுகோள்கள் தான். அவை அருகிலுள்ள கிரகங்களின் ஈர்ப்பால் பூமியின் சுற்றுப்பாதையில் நுழைய முற்படுகின்றன.

வால்மீன்கள் மற்றும் விண்கற்கள் மீதான விஞ்ஞான ஆர்வத்திற்கு பெரும்பாலும் அவற்றின் நிலையே காரணமாக அமைகின்றன. ஏனெனில் இவை சுமார் 4.6 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு சூரிய குடும்பத்தை உருவாக்கும் செயல்முறையிலிருந்து வெளியான மீதமுள்ள துண்டுகள் என்பதால் அதன் மீதான ஆர்வம் அதிகரித்திருக்கிறது’ என தெரிவித்துள்ளது. கோடிக்கணக்கான வால்மீன்களின் தொகுப்பிலிருந்து உருவான மாபெரும் கிரகங்கள் தான் வியாழன், சனி, யுரேனஸ் மற்றும் நெப்டியூன் ஆகியவை. இவற்றின் உருவாக்க செயல்முறையிலிருந்து வெளியான மீதமுள்ள துண்டுகள் தான் இன்று நாம் காணும் வால்மீன்கள் என்று நாசா தெரிவித்துள்ளது.

சிறுகோள்கள்:

ஒரு சிறுகோள் என்பது சூரிய குடும்பம் பிறக்கும்போது முழுமையாக உருவாகாத ஒரு சிறிய கிரகம் ஆகும். தற்போது சூரியனைச் சுற்றிவரும் மில்லியன்கணக்கான சிறுகோள்கள் இருந்தாலும் அவற்றில் பெரும்பாலானவை செவ்வாய் மற்றும் வியாழனின் சுற்றுப்பாதைகளுக்கு இடையிலான பகுதியில் காணப்படுகின்றன. அவை ஒரே அளவிலும் வடிவத்திலும் இருப்பதில்லை. ஏனெனில் அவை சூரியனில் இருந்து வெவ்வேறு தூரங்களில் வெவ்வேறு இடங்களில் உருவாகின்றன. அவை வெவ்வேறு வகையான பாறைகளால் ஆனவை. ஆனால் சிலவற்றில் களிமண் அல்லது உலோகம், நிக்கல் மற்றும் இரும்பு போன்றவை உள்ளன. அவை பூமிக்கு அச்சுறுத்தலாக இருக்கின்றன.உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

Recent posts

ட்ரம்பின் $5,000 அறிவிப்பு பரபரப்பு

2026 செப்டம்பர் 11 — இன்று அமெரிக்கா 9/11 தாக்குதலின் 25 ஆவது ஆண்டு நினைவு தினத்தை அனுசரிக்கிறது. இந்த நினைவு தினத்தை முன்னிட்டு அதிபர் டொனால்ட்...
Thamil Paarvai

நூற்றாண்டு கூட்டாண்மை பிறந்தது

2026 செப்டம்பர் 10 ஆம் தேதி, கனடாவின் ஆல்பர்ட்டா மாகாணத்தில் உள்ள கல்கரி நகரில் ஒரு வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வு நடைபெற்றது. கனடா பிரதமர் மார்க் கார்னியும்,...
Thamil Paarvai

டிரம்பின் வர்த்தகப் போர் உடைந்து விழுகிறது

டொனால்ட் டிரம்பின் வர்த்தகப் போர் முன்பு நினைத்ததைப் போல வெற்றிகரமாக நடக்கவில்லை. “பெரிய புலி எப்போதும் வெற்றி பெறும்” என்ற அவரது கோட்பாடு தோல்வியடைந்து வருகிறது. கனடா...
Thamil Paarvai

கனடா அமைச்சர்கள் முக்கிய ஆலோசனை

அமெரிக்காவுடனான வர்த்தகப் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், பிரதமர் மார்க் கார்னி தலைமையிலான கனடிய அமைச்சரவை, ஆல்பர்ட்டா மாகாணத்தின் பான்ஃப் நகரில் இரண்டு நாள் ஆலோசனைக் கூட்டத்தை...
Thamil Paarvai

கனடா புதிய வர்த்தக கூட்டணிகளை அமைக்கும் நிலையில் ட்ரம்பிற்கு கார்னி எச்சரிக்கை

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் வர்த்தக அச்சுறுத்தல்களுக்கு மத்தியில், கனடா பிரதமர் மார்க் கார்னி தனது நாட்டின் பொருளாதார உத்தியில் முக்கியமான மாற்றத்தை அறிவித்துள்ளார். அமெரிக்காவை சார்ந்திருப்பதில்...
Thamil Paarvai

கனடா அலுமினிய விலை உயர்வு: அமெரிக்க தொழில் துறையில் அதிர்ச்சி!

அமெரிக்காவிற்கு கனடா அலுமினியத்தின் புதிய விலை நிர்ணயம் அமெரிக்க தொழில் துறையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 50% இறக்குமதி வரி மற்றும் உலகளாவிய விநியோக தடங்கல்கள் காரணமாக...
Thamil Paarvai

உலகப் பொருளாதாரம் திரும்பியது

உலகப் பொருளாதாரம் திரும்பியது: BRICS இப்போது G7-ஐ விடப் பெரியது! உலகப் பொருளாதாரத்தில் ஒரு வரலாற்று மாற்றம் நிகழ்ந்துள்ளது. இரண்டாம் உலகப் போருக்குப் பின் மேற்கத்திய நாடுகளால்...
Thamil Paarvai

“இதுதான்”

“இதுதான்”: கனடா $1 டிரில்லியன் திட்டத்தை உறுதிப்படுத்துகிறது – கார்னி டிரம்பின் வர்த்தகப் போரை முடக்குகிறார் ஒட்டாவா, செப்டம்பர் 5: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் வர்த்தக...
Thamil Paarvai

அமெரிக்க நிறுவனங்கள் என்று நீங்கள் நினைக்கும் கனடிய நிறுவனங்கள்

“அமெரிக்கர் எதிர்வினையாற்றுகிறார்: அமெரிக்க நிறுவனங்கள் என்று நீங்கள் நினைக்கும் 7 கனடிய நிறுவனங்கள்” என்ற தலைப்பில் ஒரு குறிப்பிட்ட ஆழமான தமிழ்க் கட்டுரை இல்லை. இருப்பினும், இந்தத்...
Thamil Paarvai

Leave a Comment