🤧 சளி பிடித்தல் என்பது பொதுவான பிரச்சனையாகும். சிலருக்கு கால சூழ்நிலையின் காரணமாகவோ, அருகில் இருப்பவருக்கு சளி பிடித்திருந்து நோய்த்தொற்று ஏற்பட்டாலோ சளி பிடிக்கலாம்.

❄️ குளிர்காலம் வந்தாலே சளி பிடிக்கும் என்று நினைப்பவர்களுக்கு மத்தியில் சிலருக்கு கால நேரம் தெரியாமல் அடிக்கடி சளி பிடித்துவிடுகிறது. அதற்கு என்ன காரணம் என்று தெரியாமல் சிலர் குழம்பி விடுகிறார்கள். அதுபற்றி உங்களுக்கு உதவும் சில தகவல்களை பார்க்கலாம் வாங்க!
காரணங்கள்:
🦠 தற்போது உடல் சூட்டால் சளி, இருமல் போன்ற தொந்தரவுகள் சிலருக்கு ஏற்படுவதுண்டு. இதற்கு பல காரணங்கள் உண்டு. உங்கள் உடலை பாதுகாக்கும் உரிமை உங்களுக்கு உண்டு என்பதை மறந்துவிடாதீர்கள்.
☀️ வெயிலின் தாக்கம், நீர்ச்சத்து இழப்பு, சுற்றுப்புற மாசுபாடு போன்ற காரணங்களும் அடங்கும்.
🧹 அழற்சியினால் கூட சிலருக்கு சளி பிடிக்கலாம். அதனால் வீட்டை அடிக்கடி சுத்தம் செய்து பராமரிக்க வேண்டும்.
😴 சிலருக்கு நல்ல தூக்கம் இல்லை என்றாலும் சளி பிடிக்கலாம். ஏனெனில் நல்ல தூக்கம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும்.
💡சளியோ, இருமலோ அது எத்தனை நாட்களுக்கு இருக்கிறதோ, அந்த அளவுக்கு நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாக இருக்கிறது என்று புரிந்துகொள்ளலாம்.
என்ன செய்யலாம்?
🥤 உங்களுக்கு உடல் சூட்டால் சளி பிடிக்கிறது என்றால் உங்கள் உடலை குளிர்விக்க உதவும் வழிமுறைகளை முதலில் கையாளுங்கள்.
🍉 உடல் சூடு அதிகமாக இருப்பதாக உணர்ந்தால் முன்கூட்டியே வெள்ளரி, தர்பூசணி போன்ற உடலுக்கு குளிர்ச்சி கொடுக்கும் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பழங்களை சாப்பிடுவது நல்லது. இளநீர், பழச்சாறுகள் போன்ற நீர்ச்சத்து நிறைந்த பானங்களை அருந்தலாம்.

🚫 அடிக்கடி ஐஸ்கிரீம், ஐஸ் வாட்டர் போன்ற குளிர்பானங்கள் சாப்பிடுவதை தவிர்ப்பது உடலுக்கு மிகவும் நல்லது.
🏠 வெளியில் கிடைக்கும் உணவுகளை தவிர்த்து வீட்டில் தயாரிக்கும் உணவுகளை சாப்பிடுவது உடலை சீராக பாதுகாக்க உதவும்.
🧼 சாப்பிடுவதற்கு முன்போ, கழிவறையை பயன்படுத்திய பின்னோ, வெளியில் சென்று வீட்டிற்கு வந்த பிறகோ, வீட்டு செல்லப்பிராணிகளுடன் விளையாடிய பிறகோ கைகளை நன்றாக சோப்பு போட்டு கழுவுவது நல்லது.
💧 சளி, காய்ச்சல் இருக்கும்போது தண்ணீர் நிறைய குடிப்பது நல்ல பலன் கொடுக்கும்.
🤒 சளி பிடித்துவிட்டால், ஐயோ, எனக்கு சளி பிடித்துவிட்டது! என்று வீட்டில் இருக்கும் மருந்து, மாத்திரைகளை எல்லாம் சாப்பிட வேண்டாம்.
💊 இந்த மாதிரியான சாதாரண சளிக்கு எல்லாம் மருந்து தேவையில்லை.
🛡️ நம் உடலே சாதாரண நோய்த்தொற்றை எதிர்த்து போராடும் தன்மை கொண்டது.
🤧 அந்த எதிர்வினை தான் சளி, இருமலாக வெளிப்படும்.
⏳ பொதுவாக சளி பிடித்தால் ஒரு வாரத்தில் தானாகவே சரியாகிவிடும். ஆனால், ஒரு வாரத்திற்கு மேல் சளி தொடர்ந்தால் மருத்துவரை அணுக வேண்டும்.
💪 ஆரோக்கியமாக இருப்பதும்.. செல்வத்திற்கு ஈடான ஒன்றுதான்.. மறந்துவிடாதீர்கள்..!