தமிழகத்தில் தொடர்ச்சியாக சின்னத்திரை நடிகர்கள் தற்கொலை செய்துகொள்வது நடந்து வருகிறது. அந்த வரிசையில் சித்ராவின் மரணமும் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.. சித்ராவின் தற்கொலை சம்பந்தமாக விசாரணை இன்னும் முழுமையாக முடிவடையாத நிலையில், தமிழகத்தின் சில நடிகைகளின் தற்கொலைகள் ஏன் மர்மமாகவே நடந்து முடிந்துவிடுகிறது என்ற சந்தேகமும் நமக்குள் வலுத்து வருகிறது.

அன்று முதல் இன்று வரை, திரையில் பார்த்தபோது நம் மனதில் கனவு கன்னிகளாக நின்றவர்கள்.. தேவதைகளாக ஒளிர்ந்தவர்கள்.. கண்ணிமைக்கும் நேரத்தில் முடிவை தேடி கொண்டதன் மர்மம் இதுவரை விலகவே இல்லை.. இது சில்க் முதல் சித்ரா வரை தொடர்ந்து நடந்து வருகிறது.
ஸ்ரீதேவியும் இந்த லிஸ்ட்டில்தான் வருகிறார்.. பாத் டப்பில் குளிக்க சென்றவர் மயங்கி விழுந்து இறந்தார் என்ற தகவலை அடுத்து வேறு எந்த தகவலும் இதுவரை வெளிவரவில்லை.. சில்க், விஜி, படாபட் ஜெயலட்சுமி, மோனல் உட்பட பலரும் இவர்களின் தற்கொலைகளுக்கு பின்னே மறைந்திருக்கும் நபர்கள் வெளிச்சத்துக்கு கடைசிவரை வரவே இல்லை. அந்த முடிச்சுகளும் அவிழ்க்கப்படவே இல்லை.
டிவி சீரியல்
கடந்த ஜூன் மாதம் பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை செய்து கொண்டார். இவரது மரணம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.. இது டிவி சீரியலையும் விட்டுவைக்கவில்லை.. 2006ல் வைஷ்ணவி, காதல் பிரச்சினை காரணமாக தற்கொலை செய்து கொண்டார்.. அதேபோல, மிக குறுகிய காலத்தில் புகழின் உச்சிக்கு சென்ற ஷோபனா உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு நடிக்க முடியாமல் போனதால் மன இறுக்கத்திற்கு ஆளாகி தன் வாழ்வை முடித்துக் கொண்டார்.
மதுரவாயல்
நடிகை சபர்ணா மதுரவாயலில் உள்ள அவரது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்… நிர்வாணமாக, அழுகிய நிலையில் அவரது பிணம் மீட்கப்பட்டது.. அந்த வரிசையில்தான் சித்ராவும் இணைந்துள்ளார். பணம், புகழ், பேர், அந்தஸ்து என அனைத்தும் கிடைத்தபிறகும் இவர்கள் ஏன் தற்கொலையை நாடுகிறார்கள்? இளைஞர்கள் பிரச்சனைகளை கையாள தெரியாமல், தன்னம்பிகையுடன் எதிர்கொள்ள முடியாமல் இப்படி முடிவெடுத்து விடுகிறார்கள் என்பதே பதிலாக கிடைக்கிறது.

தற்கொலைகள்
இதைவிட ஆச்சரியம், தற்கொலைக்கு உள்ளான பெண்கள் மன அழுத்தம் காரணமாகவே உயிரிழந்தனர் என்றாலும், இவர்களின் பின்னணியில், அவரவர்களின் ஆண் நண்பர்களே பிரதான காரணமாக இருந்திருக்கிறார்கள்… ஏதோ ஒரு வகையில், அவர்களிடம் பெரிதாக எதிர்பார்த்து ஏமாந்து, கடைசியில் தற்கொலை என்ற ஆயுதங்களை கையில் எடுத்துள்ளனர்.. இந்த ஆண் நண்பர்கள், சிலருக்கு நேரடியான காரணமாக இல்லாவிட்டாலும், மறைமுமாக அவர்களின் தற்கொலைகளுக்கு காரணமாக இருந்துள்ளனர்.
விசாரணை
ஆனால், நடிகைகளின் தற்கொலைகளுக்கு பிறகு இவர்கள் என்ன ஆனார்கள் என்பதும் தெரியவில்லை.. ஒவ்வொரு நடிகைகளின் தற்கொலை சமயங்களில் அது சம்பந்தமான வழக்கு விசாரணை நடக்கிறது, புது புது தகவல்கள் வருகின்றன.. அத்துடன் காலப்போக்கில் அந்த நடிகையின் தற்கொலையே மறக்கடிக்கப்பட்டு விடுகிறது.
நடிகைகள்

இதுவரை இந்த பெண்களின் தற்கொலையில் தொடர்புடைய ஒருவரும் கைதாகி சிறைக்கு சென்ற வரலாறே இல்லை.. மாறாக, அந்த நடிகைகளின் மட்டற்ற புகழையும், கணக்கிலடங்கா பணத்தையும், அந்த நடிகைகளுடன் சேர்த்தே அனுபவித்ததுடன், இப்போதுவரை சமுதாயத்தில் மிடுக்காக நடமாடி வருகிறார்கள்.
மறதி
காதல், நட்பு என்று பழகி வந்த நிலையிலும், இவர்களின் நிஜஇயல்பு இதுதான் என்றுகூட தெரியாமல், அப்பாவி பெண்கள் தற்கொலையில் தங்கள் விலைமதிப்பில்லா உயிரை மாய்த்து கொண்டுள்ளது காலத்தின் கோலம்தான்.. அதைவிட, “மறதி ஒரு தேசிய வியாதி” என்பது நடிகைகளின் உயிருக்கே உலை வைக்கும் சிலருக்கு எத்துணை சாதகமாக போய்விடுகிறது!