இலங்கையில் இன்று முதல் நாம் வெளியில் வாங்கி சாப்பிடும் சில பொருட்களுக்கு நிறக் குறியீடு கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பொதுவாக நாம் வெளியில் வாங்கி சாப்பிடும் உணவும் பொருட்களின் பெரும்பான்மையானவைகளில் சரியான அளவிற்கு அதில் இருக்கும் கொழுப்பு, உப்பு, இனிப்புத்தன்மை போன்றவை இருப்பதில்லை.
இதையடுத்து இலங்கையில் இன்று முதல் நாம் வாங்கும் உணவுப் பொருட்கள், குளிர்பானங்கள், பிஸ்கட்கள், இனிப்பு பண்டங்கள் போன்றவைகளில் நிறக்குறியீடு (Colour Code System) இருக்கும் என்று கூறப்படுகிறது.
அதாவது குறித்த உணவுப் பொருட்களில் கொழுப்பு அதிகமாக இருந்தால் ஒரு நிறம், உப்பு அதிகமாக இருந்தால் ஒரு நிறம் என்று இப்படி குறித்த உணவு வகைகளில் குறிக்கப்பட்டிருக்கும்.
அது இன்று முதல் கட்டாயமாக்கப்படுகிறது. ஆனால் அதே சமயம் இது குழந்தைகளின் உணவு பொருட்கள், போத்தலில் இருக்கும் தண்ணீர், கோப்பி பழங்கள், மருத்துவ பரிந்துரைக்கப்பட்ட உணவுப் பொருட்கள், பால், அரிசி, சிறிய பைக்கெட்களில் விற்கப்படும் உணவும் பொருட்கள், டீ, காய்கள் போன்றவைகளில் இது கட்டாயம் கிடையாது என்று தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.