2022ஆம் வருடமானது கடக ராசி அன்பர்களுக்கு புதுவிதமான அனுபவங்களை உருவாக்கக்கூடிய காலக்கட்டங்களாக அமையும். சாதுர்யமான பேச்சுக்களின் மூலம் இழுபறியான தனவரவுகளை பெறுவீர்கள். உறவினர்கள் வழியில் எதிர்பார்த்திருந்த சில ஒத்துழைப்புகளின் மூலம் மனதிற்கு மகிழ்ச்சி ஏற்படும்.
பொருளாதாரம் :
தனவரவுகளில் ஏற்ற, இறக்கங்கள் இருந்தாலும் தேவைக்கேற்றபடி பண வரவுகள் அமையும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறைவதற்கான வாய்ப்புகள் ஏற்படும். நெருக்கமானவர்களிடம் விவேகத்தை கையாளுவது நல்லது. புதிய வீடு மற்றும் மனை வாங்குவது தொடர்பான எண்ணங்கள் கைகூடும்.
பெண்களுக்கு :
பெண்கள் சில முக்கிய முடிவுகளை எடுக்கும் பொழுது பெரியோர்களின் கருத்துக்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பது உங்களின் மீதான நன்மதிப்பை மேம்படுத்தும். தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். புதிய நபர்களின் அறிமுகங்கள் புதிய மாற்றத்தையும், முன்னேற்றத்தையும் ஏற்படுத்தும்.
மாணவர்களுக்கு :
மாணவர்களுக்கு கல்வி சார்ந்த பணிகளில் புதுவிதமான ஆர்வமும், எண்ணங்களும் உண்டாகும். உயர்கல்வி சார்ந்த ஆலோசனைகள் நல்ல ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும். கவிதை, கட்டுரை தொடர்பான போட்டிகளில் பங்கு பெற்று பரிசுகளையும், பாராட்டுகளையும் பெறுவீர்கள்.
உத்தியோகஸ்தர்களுக்கு :
பணிபுரியும் இடத்தில் உயரதிகாரிகளிடம் சற்று பொறுமையை கையாளுவது நல்லது. மற்றவர்களின் பணிகளையும் சேர்த்து பார்க்க வேண்டிய சூழ்நிலைகளும் ஏற்படலாம். நீண்ட நேரம் கண்விழிப்பதை தவிர்ப்பது உத்தியோக பணிகளில் ஏற்படும் சோர்வினை குறைக்கும்.
வியாபாரிகளுக்கு :
வியாபார பணிகளில் சிறு சிறு தடைகளுக்குப் பின்பே சாதகமான வாய்ப்புகள் உண்டாகும். பிறமொழி பேசும் மக்களின் அறிமுகங்கள் மூலம் முன்னேற்றமான வாய்ப்புகள் ஏற்படும். வேலையாட்களின் ஒத்துழைப்பு மனதிற்கு திருப்தியை ஏற்படுத்தும்.
அரசியல்வாதிகளுக்கு :
அரசியல் சார்ந்த துறைகளில் இருப்பவர்கள் மற்றவர்கள் பற்றிய கருத்துக்களை கூறும்போது தகுந்த கோப்புகளை கையாளுவது நல்லது. கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி வைப்பதற்கான தருணங்கள் உண்டாகும்.
கலைஞர்களுக்கு :
கலை சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு புதுவிதமான சிந்தனைகளும், அதற்கான வாய்ப்புகளும் கிடைக்கும். உடல் தோற்றத்தில் மாற்றங்கள் காணப்படும். ஆன்மிகம் தொடர்பான பணிகளில் முன்னேற்றம் ஏற்படும்.
நன்மைகள் :
உறவினர்களின் ஒத்துழைப்பும், நண்பர்களின் ஆதரவும், தொழில் சார்ந்த துறைகளில் புதிய இலக்குகளை அமைத்து முன்னேறுவதற்கான வாய்ப்புகளை உருவாக்கக்கூடிய காலக்கட்டமாக கடக ராசி அன்பர்களுக்கு இந்த புத்தாண்டு அமையும்.
கவனம் :
வாழ்க்கைத்துணைவரிடத்தில் அனுசரித்தும், பணிபுரியும் இடத்திலும் மற்றும் சக ஊழியர்களிடத்திலும் பொறுமையை கையாளுவது நல்லது.
வழிபாடு :
செவ்வாய்க்கிழமைதோறும் வராகி அம்மனை வழிபாடு செய்துவர எண்ணங்களில் தெளிவும், புரிதலும் உண்டாகும்.