சிறுகதை மொழி இலக்கியம்

கவசத்திற்குள் இரு ஆவி.

வாயுவேக வீரர்கள் இருவர். அவர்தம் கொள்கைகளை நிலைநாட்டும் முகத்தான் போட்டி ஒன்றை துவக்கி மோதுகிறார்கள்!

சர். காரெய்ன் மற்றும் சர். டாரண்ட் ஆகிய இரு வீரர்கள் சாகும் வரையில் மோதுவது என முடிவெடுத்து கையில் ஈட்டியுடன் ஆங்கிலேய முறைப்படி குதிரையில் இருந்து கொண்டு நேரடியாக முட்டிக் கொள்கிறார்கள். டாரண்ட் ஒரு வலிமை வாய்ந்த எதிரி என்று காரெய்னின் காதலி அவனை எச்சரிக்கிறாள். அன்பே! நீ என் அருகில் இருக்கையில் மாமலையும் ஓர் சிறு கடுகாம்! எனவே அஞ்சாதே! என்று காரெய்ன் கூறிப் பாய்ந்து புறப்பட்டு களம் புகுகிறான்!

ஈட்டிகள் பாய்கின்றன! தாழ்வான உயரத்தில் வலுவான இரு ஈட்டிகள் இடியென பாய்ந்து ஓசை எழுப்புகின்றன!

அய்யகோ!! அந்தோ பரிதாபம்! காரெய்ன் வீழ்கிறார்! டாரண்ட் வெற்றிக் களிப்பில் அருகே நெருங்குகிறார்! பரவாயில்லை ! நான் நேருக்கு நேராக தரையில் நின்று போரிடுவேன் என்ற உறுதியுடன் மோதுகிறார் காரெய்ன்!

புல்வெளியில் மின்னலென பளிச்சிட்டுப் பாய்ந்தன வாட்கள்! கவசங்களின் உராய்வு ஓசைகள் கோட்டையின் சுவர்களில் பட்டு எதிரொலித்தன! காரெய்னின் தலைக் கவசம் டாரண்டின் வாள் வீச்சின் முன்பு நிற்க முடியாமல் தெறித்து வீழ்கிறது!

வேறு ஒரு வீரனை காக்க நீ மோதினாய்! அவனைப் போன்று வீர மரணம் எய்த எண்ணுகிறாயா? இல்லை உனதருமை உயிருக்காக என்னிடம் உயிர்ப்பிச்சை கோரப் போகிறாயா?டாரண்ட்

ஒரு வீரனாக என் கடமை என்னவென்றால், உனக்கு ஒரு வாய்ப்பு அளிக்கிறேன். ஒன்று, நீ வீரனாக உனதருமை உயிரை கௌரவமான முறையில் விடு! அல்லது உன் உயிரைக் காத்துக் கொள்ள நான் தோற்று விட்டேன் என்று கதறு! டாரண்ட். அந்தோ! நான் இறந்து விட்டால் என்னருமைக் காதலி லேடாவை இழந்து விடுவேன் ஆகவே நான் தோற்று விட்டேன், விட்டு விடுகிறேன் என்று காரெய்ன் தன் தோல்வியை ஒப்புக் கொள்கிறார்.

நான் வாழ்வதே லேடாவுக்காகதான்! காரெய்ன்

நீ நிச்சயமாகத்தான் சொல்கிறாயா? உன்னைப் போன்ற கோழையை அவள் விரும்புவாளா இல்லை என்னைப் போன்ற மாபெரும் வீரனை விரும்புவாளா? லேடா நீ என்ன சொல்கிறாய்? டாரண்ட்

சில மணித்துளிகள் சென்றதும் லேடா தான் தேர்ந்து கொண்டவருடன் குதிரையில் விரைகிறாள்! ஏன் இப்படி செய்தாய் லேடா? என்று காரெய்ன் புலம்ப, பெண்கள் வீரரையே விரும்புவர்! கோழைகள் விட்டுக்கொடுத்து தான் ஆகா வேண்டும் என்று டாரண்ட் சொல்லிச் செல்கிறார்! ஹீ! ஹீ ! ஹீ ! கண்ணுங்களா! நான்தான் கருப்புக் கிழவி ஹெப்சிபா க்ரிம்! கதை இத்தோட முடிஞ்சிதுன்னு நடையைக் கட்டிடாதீங்க! சினிமால காட்டற மாதிரி ஆரேழு நூற்றாண்டுக்கு அப்புறமா லண்டன்ல,

ஒரு பழம்பொருள் கடையில் ஜின்னி என்கிற பெண் குட்டி தன் அப்பாகிட்ட இன்னொரு கவசமா அப்பா?

ஆமா ஆனா இது ரொம்ப ஸ்பெஷல் ஜின்னி! என்கிறார் அவளது தந்தை! அந்த கவசத்தை ஒரு பாட்டுக்கு பரிசாகப் பெற்றதாகவும், அந்த கவசத்தின் உரிமையாளர் உண்மையில் சர். காரெய்ன் பயன்படுத்தியது என்பதை அறியாமல் தூக்கிக் கொடுத்து விட்டார் என்று கூறுகிறார். இடைக்காலப் பாடல்களில் டாரண்ட்டிடம், காரெய்ன் தோற்று விட்டார் என்று உள்ளதே சரியா அப்பா! ஜின்னி சரிதான்! துல்லியமாக சொல்லணும்னா டாரண்ட்டின் கவசம் கூட இங்கேதான் மேலே இருக்கிறது!அப்பா

அவர்கள் இப்போ ஒன்று சேர்ந்தாச்சு! நான் இந்த இரு கவசங்களுக்கும் சேர்த்து மிக மிக அதிகமான தொகையைப் பெறுவேன்! இலண்டனில் உள்ள பழம்பொருள் சேகரிப்பவர் ஒருவரை நான் நாளைக்கு அழைத்து வருகிறேன்! என்று கூறி கிளம்புகிறார் அவர்!

அன்றிரவு அகால வேளையை நோக்கி நிமிடங்கள் நகர்ந்தன. எங்கோ ஒரு ஆந்தை தின்ற எலி செரிக்காமல் அலறும் சப்தம்! தூர ஒரு நாயில் ஊளை ஓசை காதைக் கிழித்தது! வினாடிகள், நிமிடங்களாகின! நிமிடங்கள் மணித் துளிகளாயின! திடீரென ஏதோ ஒன்று நகரும் சப்தம்! நெஞ்சு படபடவென அடித்துக் கொள்ள சின்னி மாடியில் இருந்து இறங்கி வருகிறாள்! க்ரீச்! க்ரீச்! க்ரீச்! காலடியில் படிகள் நசுங்கின! இருளில் ஒரு உருவம் நிற்பதைக் கண்டு உற்று நோக்கிய சின்னி டாரண்ட்டின் கவசம் கண்டிப்பாக தனது இடத்தில் இருந்து நகர்ந்து இருக்கிறது என்பதைக் காண்கிறாள்!

மெல்லிய ஒளி என்னை ஏய்க்க முடியாது! அந்த கவசம் உள்ளே அவையின்றி நகர்ந்திருக்க முடியாது என்ற திட நம்பிக்கையுடன்,

ஈ!ஈ! இன்னொரு பேயா?

டாரண்ட் அடேய்பயந்தாங் கோலி!

காரெய்ன் நான் ஒன்றும் பயந்தாங்கோலி அல்ல! நீ என்னை அவமதிப்பதை நான் பொறுத்துக்கொள்ள மாட்டேன்!

நிறுத்துங்கள்ஜின்னி

முடியாது! என்னை கோழை என்றெண்ணும் இவனை விடமாட்டேன்! இவன் என்னை வீரன் என்று ஏற்கும் வரை போராடுவேன் காரெய்ன் உண்மையை மறுப்பதா? நீ கோழைதான் அதை ஒருபோதும் மாற்றிக்கொள்ள மாட்டேன்! டாரண்ட்

ஜின்னியின் பயம் ஆர்வமாக மாறியது கண்ணுங்களா! யாரவது அடிச்சிட்டு செத்தா யாரு கேக்குறா? வேடிக்கைதானே பார்க்கிறீங்க! ஹீ! ஹீ! ஹீ!

அவன்தான் கோழையாச்சே! அவனுக்கு எதுக்கு நீ ஆர்வமூட்டுறே? டாரண்ட் அவர் ஒண்ணும் கோழையல்ல! தான் தோத்தா சக வீரர்களிடம் அவமானப்பட வேண்டியிருக்கும்னு தெரிஞ்சும் காதலுக்காக சண்டையில விட்டுக் கொடுத்தார்! காதலுக்காக வாழ்ந்த அப்படி ஒரு மனுசன்தான் எனக்கு கணவனா வரணும்! அப்படி ஒருத்தரைத்தான் நான் கல்யாணம் பண்ணிப்பேன்! ஜின்னியின் இந்த வார்த்தைகளைக் கேட்டதும் விக்கிரமாதித்தன் கதையில் வரும் வேதாளம் முருங்கை மரம் ஏறுன கணக்கா ஆவிங்க ரெண்டும் வீரர்களின் சொர்க்கம் புகுந்தன! ஹீ! ஹீ! ஹீ! பெரிய எழுத்து விக்கிரமாதித்தன் கதையெல்லாம் படிச்சிருக்கீங்களா கண்ணுகளா? ஜின்னி தன்னோட அப்பாகிட்ட என்ன சொல்வா? அவ சொல்றதை அவளோட அப்பா நம்புவாரா? ஹீ! ஹீ! ஹீ! மண்டை ஒட்டு சூப் காத்திருக்கு கண்ணுகளா! அப்புறமா கனவில கதை சொல்ல வாறேன்! ஹீ! ஹீ! ஹீ!

Recent posts

என்னோட சீட் .

சேலத்திலிருந்து கோயமுத்தூருக்கு பஸ் கிளம்ப போகிறது. அதற்குள் உட்கார்ந்திருந்த சாமியப்பனுக்கு ஒரு தண்ணீர் பாட்டில் வாங்கி வந்துவிட்டால் நன்றாக இருக்கும் என்று நினைத்துக்கொண்டார். பஸ்ஸைவிட்டு இறங்க வேண்டும்....
Thamil Paarvai

கடல் அலை.

இருள் சூழ்ந்து கொண்டிருந்த வேளையிலும் கடலையே வெறித்து பார்த்து உட்கார்ந்து கொண்டிருந்த வயதானவரை நேரமாகிவிட்டது என்று குழந்தைகளையும், ஒருசிலர் தங்களுடைய கணவன்மார்களையும் இழுத்துக் கொண்டு சென்றவர்கள் வியப்பாய்...
Thamil Paarvai

காவி உடைக்குள் ஒரு காவியம்.

இலங்கையில் வடமேல் மாகாணத்தில் அமைதியான ஒரு சிங்களக் கிராமம். பசுமையான வயல்வெளிகளும் தென்னந்தோப்புகளும் பாக்கு, கித்துல், மா, பலா, வாழை மரங்களும் செழித்து வளரும் விவசாயக்கிராமம். முன்னாள்...
Thamil Paarvai

குருவி குஞ்சு.

கஞ்சப்பனுக்கு பசி உயிரடுத்தது,காலையில் விழித்து எழுந்தவனுக்கு பசி வயிற்றை கிள்ளவும், ஏதோ கத்தியபடி பாத்திரங்களை உருட்டிக்கொண்டிருந்த அம்மாக்காரியிடம் கஞ்சிக்கு போய் நின்றபோது, இவன் அப்பன்காரன் அவள் மறைத்து...
Thamil Paarvai

தமிழர்களின் விருந்தோம்பல்

விருந்து என்ற சொல்லுக்குப் புதுமை என்பது பொருள். உறவினரும் நண்பரும் அல்லாதவராய் புதியராக நம்மிடம் வரும் மக்களை விருந்து என்றனர் தமிழர். நம் வீட்டுக்கு வரும் ஒவ்வொரு...
Thamil Paarvai

Leave a Comment