கனடாவின் சுகாதாரச் சட்டங்களை அனைத்து மாகாணங்களும் பின்பற்ற வேண்டியதனை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கனடியப் பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடே தெரிவித்துள்ளார்.
ஒன்டாரியோவின் சுகாதாரத் திட்டமானது தனியார் மயப்படுத்துதல்களை நோக்கி நகர்ந்து செல்வதாக அச்சம் வெளியிடப்பட்டு வரும் நிலையில் பிரதமர் ரூடோ இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.
மிகவும் அத்தியாவசியமான மருத்துவ சேவைகளை தனியார் மயப்படுத்துவனை தவிர்க்கும் நோக்கில் கனேடிய சுகாதாரச் சட்டம் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். இதற்கிடையில், இந்த மாத இறுதியில் ஒன்டாறியோ மாகாணசபையில் சுகாதாரத்துறை தொடர்பில் பாரிய அடிப்படை மாற்றங்கள் செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
முதல்வர் டக் ஃபோர்ட் தலைமையிலான புறோகிரசிவ் கொன்சர்வேட்டிவ் அரசாங்கத்தின் சுகாதாரத் திட்டங்களில் தனியார் துறையினருக்கு பாரியளவில் பங்கு உண்டு என்று என்.டி.பி கட்சி குற்றம் சுமத்தியுள்ளதுடன் முக்கிய ஆவணம் ஒன்றையும் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது