
👉சுத்தமான சமையல் அறையில் சமைக்க வேண்டும் என்றால் எல்லோருக்கும் பிடிக்கும். எனவே நீங்கள் சுத்தமான சமையல் அறையைப் பெற உங்களுக்காக சில குறிப்புகள்.
👉 சமையலறையை சுத்தமாக பராமரிப்பதற்கு வாரமொரு முறையாவது சமையலறையில் உள்ள ஜன்னல், கதவு, சுவர் இவற்றினை சுத்தம் செய்யுங்கள்.
👉 சுத்தம் செய்வதற்கு தனித்தனி துணிகளைப் பயன்படுத்த வேண்டும். ஒரே துணியினைக் கொண்டு அனைத்து பொருட்களையும் சுத்தம் செய்யாதீர்கள். துடைத்த துணிகளை சுடுநீருடன் சோப்பு சேர்த்து ஊற வைத்து, பின் நன்கு துவைத்து அலச வேண்டும்.
👉 சமையலறை வாஷ்பேசின் கீழ் ஒரு மிதியடி போட்டுக் கொண்டால் தண்ணீர் பட்டு அழுக்காவதை தவிர்க்கலாம். அதுமட்டுமின்றி அருகில் ஒரு டவலை வைத்துக் கொண்டால் கழுவிய பின்பு கைகளை துடைக்க வசதியாக இருக்கும்.
👉 சமைத்த பாத்திரங்களை உடனுக்குடன் கழுவிவிடுவது சமையல் அறை தூய்மைக்கு அழகு சேர்க்கும்.
👉 வெதுவெதுப்பான நீருடன் சோப்பினை சேர்த்து பாத்திரங்களை சுத்தம் செய்வது சிறந்தது.

👉 தினசரி உணவிற்குப் பிறகு, தவறாமல் பாத்திரங்கள், சமையல் மேடை, அடுப்பு இவற்றை கழுவி சுத்தப்படுத்த வேண்டும்.
👉 சமையலுக்கு உபயோகித்த பாத்திரங்களை இரவு முழுதும் சிங்கில் போட்டு வைக்காமல், அவைகளை இரவிலேயே கழுவி வைத்து விட வேண்டும்.
👉 மாவு, ஊறுகாய் மற்றும் பருப்பு வகைகளை நன்கு மூடிய ஜாடியில் வைத்திருந்தால், அவற்றில் பு+ச்சிகளின் தொல்லை இருக்காது.
👉 சமையல் செய்யும் பொழுது உங்களது கைகளை சுத்தமாய் வைத்துக்கொள்ள வேண்டும். கையில் புண் காயத்தோடு சமையல் பொருட்களை கையாளுவது தவறாகும்.
👉 சமையல் செய்யும் முன்னர் உங்கள் தலைமுடியினை நன்கு வாரி முறைப்படுத்திவிட்டு சமையலை மேற்கொள்ளுங்கள்.
👉 சமையலைத் தொடங்குவதற்கு முன்பு கைகளை சோப்பு கொண்டு முழங்கை வரை சுத்தம் செய்ய வேண்டும்.