ஆன்மீகம் இந்து சமயம்

தைப்பூசத்திருநாளில் தொட்டதெல்லாம் துலங்கும்”

தைப்பூசத்தின் சிறப்புகள்

பூச நட்சத்திர நாள் முருகப்பெருமானுக்கு மிகவும் விசேஷமான நாள் ஆகும். இந்நாளில் தான் முருகப்பெருமான் தாரகாசுரனை வதம் செய்ய தாய் பார்வதியிடம் வேல் வாங்கினார்.

முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம் என்றாலும் அந்நாளில் முருகப்பெருமானுடன், சிவபெருமானையும் வழிபடுதல் வேண்டும்.

சிவபெருமான் தனது அம்பிகை உமாதேவியுடன் ஞானசபையான சிதம்பரத்தில் ஆனந்த நடனம் ஆடி, தரிசனம் அளித்த புண்ணிய திருநாள் தைப்பூசம் ஆகும். ஆகவே தைப்பூச திருநாள் சிவசக்திக்கு உகந்த நாளாகும்.

தைப்பூச நாளில் வள்ளலார் முக்தி அடைந்தார். இறைவன் ஒளிமயமானவர் என்பதை உணர்த்தும் வகையிலேயே தைப்பூச நாளில் ஜோதி தரிசனம் நடைபெறுகிறது.

தைப்பூச தினத்தன்று பக்தர்கள் காவடி எடுத்தல், கற்பூரச்சட்டி எடுத்தல் போன்ற நேர்த்திக்கடன்களை நிறைவேற்றுவார்கள். மேலும் இந்நாளில் அனைத்து முருகன் கோயில்களிலும், சிவபெருமான் கோயில்களிலும் திருவிழாக்கள் நடைபெறும்.

அத்துடன் வாயு பகவானும், வருண பகவானும், அக்னி பகவானும் சிவபிரானின் அதீத சக்தியை உணர்ந்த நாளாகவும் இந்நாள் போற்றப்படுகின்றது. அதாவது இயற்கையை கட்டுப்படுத்தும் சக்தியாக இறைவனே உள்ளமையை உணர்த்தப்பட்ட புண்ணிய நாள் தான் இந்த தைப்பூச நன்னாளாகும்.

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் பழனிக்கு மக்கள் முக்கியத்துவம் கொடுத்து தைப்பூச திருவிழாவிற்கு அங்கு நடைபயணமாக செல்வது தொன்றுதொட்ட வழக்கமாக உள்ளது.

தைப்பூசத்தன்று கோயில்களில் தெப்ப உற்சவம் நடைபெறும். அதாவது கோயிலில் இருக்கும் கடவுளை தேரில் வைத்து ஊர்வலமாக ஊர் முழுவதும் அழைத்து வருவர்.

“தைப்பூசத்திருநாளில் தொட்டதெல்லாம் துலங்கும்” என்பது பழமொழியாக அமைவதால் ஏடு தொடக்கம், புதிர் எடுத்தல், புதிதுண்ணல், பெண் குழந்தைக்கு காது, மூக்கு குத்துதல், திருமண பேச்சுக்கள் ஆரம்பித்தல், ஏதேனும் ஒப்பந்தம் செய்தல் போன்ற நற்செயல்களை மேற்கொள்கின்றனர்.

தைப்பூச நாளில் முருகப்பெருமானிற்கு படைக்கும் காணிக்கைகளை காவடிகளாக எடுத்துக் கொண்டு நடைபயணமாக சென்று அவற்றை முருகனுக்கு செலுத்தி பூஜை செய்வார்கள்.

தைப்பூச வரலாறு

தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் இடையே ஏற்பட்ட போரில் தேவர்களால் அசுரர்களை அழிக்க முடியவில்லை. ஆகையால் அசுரர்களை அழிக்க வேண்டி சிவபெருமானிடம் தேவர்கள் முறையிட்டனர்.

கருணைக் கடலான சிவபெருமான், தேவர்களின் முறையீட்டை ஏற்று தனது தனிப்பட்ட சக்தியால் உருவாக்கிய அவதாரமே முருகப்பெருமான் ஆவார்.

சிவனின் நெற்றிக்கண்ணில் இருந்து வெளியான ஆறு தீப்பொறிகள் ஆறு அழகான குழந்தைகளாயின. கார்த்திகை பெண்களால் அக்குழந்தைகள் வளர்க்கப்பட்டு பின் ஆறுமுகங்களுடன் அவதரித்தார்.

அன்னை பார்வதிதேவி ஆண்டி கோலத்தில் பழனி மலையில் வீற்றிருக்கும் முருகப்பெருமானுக்கு ஞானவேல் வழங்கியது தைப்பூச நாளில் தான்.

அம்பாள் அளித்த வேலை ஆயுதமாக கொண்டே, தேவர்களுக்கு தொல்லை கொடுத்த அசுரர்களை திருச்செந்தூரில் வதம் செய்தார். அதனால் முருகப்பெருமானை போலவே அவரது வேலுக்கும் தனி சக்தி உண்டு என கூறுகின்றனர்.

அசுரர்களை வதம் செய்ய உதவிய முருகப்பெருமானின் வேலை பூஜிப்பதாலேயே தீய சக்திகள் நம்மை தாக்காமல் இருப்பதுடன், அந்த சக்திகள் நமக்கு அடிபணிந்து நல்லருளை தந்தருளும் என்பது ஐதீகம்.

முருகனுக்கு காவடி எடுக்கும் பழக்கம் எப்படி வந்தது?

‘குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம்’ என்று அனைவரும் சொல்லக் கேட்டிருப்போம். நாம் காவடி எடுப்பதற்கும் இரண்டு குன்றுகள் தான் காரணமாக இருந்திருக்கின்றது.

அகஸ்திய முனிவருக்கு ‘இடும்பன்’ என்ற ஒரு சீடர் இருந்தார். ஒருமுறை இடும்பனை அழைத்த அகஸ்தியர், கயிலைக்குச் சென்று அங்கு முருகனின் மலையான கந்தமலையிலுள்ள சிவசக்தி சொரூபமான ‘சிவகிரி’, ‘சந்திரகிரி’ என்னும் இரண்டு மலைகள் வழிபாட்டிற்கு தேவைப்படுகிறது கொண்டு வா என்றார்.

குருவின் கட்டளையை ஏற்று இடும்பன், கந்தமலைக்குப் புறப்படுகிறார். இருமலைகளையும் சுமந்து வருவதற்கு வசதியாக காவடியாகக் கட்டி, அதைத் தன் தோளில் தாங்கிக் கொண்டு புறப்படுகிறார்.

இதனைக் கண்ட முருகப் பெருமானோ, தனது விளையாட்டைத் தொடங்குகிறார். இரண்டு மலைகளையும் திருவாவினன்குடியில் நிலைபெறச் செய்துவிட வேண்டும் என்ற முடிவுக்கும் வருகிறார் முருகன். மேலும் இடும்பனுக்கும் அருள் புரிய வேண்டும் என்றும் எண்ணினார்.

இந்த இரு மலைகளையும் தாங்கி வரும் இடும்பனுக்கோ நடுவில் வழி தெரியாமல் நின்றபோது ஓர் அரசனைப் போல் தோற்றம் எடுத்து வந்த முருகன், இடும்பனை ஆவின்குடிக்கு அழைத்து வந்து சற்று ஓய்வெடுக்குமாறு கூறுகிறார்.

இடும்பனும் காவடியை இறக்கி வைத்து ஓய்வெடுத்து விட்டுப் புறப்படும் போது காவடியைத் தூக்க முடியாமல் திண்டாடினான். ஏன் இப்படி காவடியைத் தூக்க முடியாமல் போனது என்று சுற்றிப் பார்க்கும் போது சிவகிரியின் மேல் ஒரு சிறுவன் கோவணாண்டியாய் கையில் தண்டுடன் நிற்பதைக் கண்டான். இடும்பனும் சிறுவனை மலையிலிருந்து கீழே இறங்கும்படி வேண்டினான். ஆனால் அச்சிறுவனோ, இந்த மலை எனக்கே சொந்தம் என்கிறான்.

கோபம் கொண்ட இடும்பன் சிறுவனைத் தாக்க முயல, அப்படியே சாய்ந்து விழுகிறான் இடும்பன். இதனை அறிந்த அகஸ்தியர், முருகனிடம் வேண்ட இடும்பனுக்கு ஆசிவழங்குகிறார் முருகன். இடும்பனைத் தன் காவல் தெய்வமாகவும் நியமனம் செய்கிறார். அன்று முதல் முருகனுக்கு காவடி எடுக்கும் பழக்கம் உருவானது.

ஆகையால் வேண்டுதல் நிறைவேறிய பின் முருகனுக்கு காவடி எடுத்து பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றுகின்றனர்.

தைப்பூச விரதமுறை

தைப்பூசத்தன்று அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு திருநீறு, ருத்ராட்சம் அணிந்து சிவபெருமானை வழிபடுவர். பின்பு தேவாரம், திருவாசகம் போன்றவற்றை பாராயணம் செய்வர்.

தைப்பூசத்தன்று உணவு உண்ணாமல் 3 வேளைகளிலும் பால், பழம் சாப்பிடலாம். முருகப்பெருமானுக்கு உகந்த தைப்பூச விரதத்தை கடைபிடித்தால் வறுமை நீங்கி செல்வ செழிப்பு ஏற்படும். மேலும் துன்பங்கள் நீங்கி இன்பம் பெருகும்.

தைப்பூசத்திருநாளில் வேலுக்கு பூஜை செய்வதும். வேலுக்கு அபிஷேகங்கள் செய்வதும், வேலுக்கு செவ்வரளி கொண்டு அர்ச்சித்து வழிபாடுகள் மேற்கொள்வதும் உன்னதமான பலன்களை கொடுக்கவல்லது.

இந்நாளில், முருகப்பெருமானுக்கு விரதம் மேற்கொள்வதும், வீட்டில் முருகப்பெருமானுக்கு பூஜைகள் மேற்கொள்வதும், வீட்டிற்கு அருகில் உள்ள முருகப்பெருமான் தலங்களுக்கு சென்று தரிசிப்பதும் தோஷங்களையெல்லாம் போக்கக்கூடியது. குறிப்பாக, செவ்வாய் தோஷத்தை போக்கி சந்தோஷத்தை பெருக்கி தரும்.

தைப்பூச நாளை காணிக்கை செலுத்தும் நாளாக முருக பக்தர்கள் கொண்டாடுகிறார்கள். பழங்கள், நெல், காய்கறிகள் என எது விளைந்தாலும் அதை இறைவனுக்கு அர்ப்பணிக்க வேண்டும் என்பதற்காகவே காவடிகளில் அவற்றை வைத்து எடுத்து செல்வார்கள்.

தைப்பூச விரத பலன்கள்

தைப்பூச நாளில் முருகப்பெருமானை விரதமிருந்து வழிபட்டால் நினைத்தது நிறைவேறும். மேலும் குடும்பத்தில் செல்வம் பெருகும், கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமையும், பாசமும் அதிகரிக்கும்.

இந்நாளில் முருகனுக்குரிய வேலை வழிபடுவதன் மூலம் தீய சக்திகள் நம்மை அண்டாது. மேலும் இந்நாளில் விரதத்தை கடைபிடித்தால் வறுமை நீங்கி செல்வ செழிப்பு ஏற்படும்.

தேவர்களின் குருவாகிய பிரகஸ்பதியின் நட்சத்திரம் பூசம் என்பதால் தைப்பூசத்தன்று குரு வழிபாடு செய்வது மிகுந்த பலனை தரும்.

தைப்பூசத்தன்று பழனி முருகப்பெருமானின் அபிஷேக ஆராதனையை தரிசிப்பதால் நம்முடைய சகல பாவங்களும் தீரும்.

திருமணத்தடை உள்ளவர்கள் மற்றும் வரன் தேடுபவர்கள் தைப்பூச நன்னாளில் வரன் தேடினால் நல்ல வரன் கிடைக்கும்.

தைப்பூசத்திருநாளில் பழனி முருகப்பெருமானுக்கு காவடி எடுத்தால் எந்த தீய சக்தியும், மாந்திரீகமும், பில்லி, சூனியம், ஏவல் என எதுவும் நம்மை நெருங்காது.

Recent posts

சிலுவையில் இயேசு கிறிஸ்து கூறிய கடைசி ஏழு வார்த்தைகள் யாவை, மற்றும் அவற்றின் அர்த்தம் என்ன?

இயேசு கிறிஸ்து சிலுவையில் கூறிய ஏழு கூற்றுக்கள் இவை தான் (இங்கே எந்த குறிப்பிட்ட வரிசையிலும் இவை கொடுக்கப்படவில்லை): (1) மத்தேயு 27:46 கூறுகையில், ஒன்பதாம் மணி...
Thamil Paarvai

சிலுவையில்இயேசுகூறியஏழுஉபதேசங்கள்

முன்னுரை: கர்த்தராகிய இயேசு கிறிஸ்து சிலுவையில் கூறிய ஏழு வார்த்தைகளை இங்கு உபதேசங்களாக உங்களுக்கு வெளிப்படுத்திக் கொடுக்க விரும்புகிறேன். அவர் சொன்ன ஒவ்வொரு வார்த்தைகளும் ஒவ்வொரு கருத்தை...
Thamil Paarvai

புனித வெள்ளி என்ற பெயர் வருவதற்கான காரணம் என்ன தெரியுமா?

கிறிஸ்தவர்களால் அனுஸ்டிக்கப்படும் ஒரு புனித நாளாக இந்த புனித வெள்ளி எனும் நாள் அனுஸ்டிக்கப்படுகிறது. இது பொதுவாக கத்தோலிக்க மக்களால் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் இயேசுபிரான் உயிர்...
Thamil Paarvai

இயேசு ராஜாவாக வருகிறார்

எருசலேமுக்கு அருகிலுள்ள ஒரு சின்ன கிராமத்திற்கு இயேசு வருகிறார். தம்முடைய சீஷரில் இருவரிடம், நீங்கள் கிராமத்துக்குள் போங்கள், அங்கே ஒரு கழுதைக்குட்டியைப் பார்ப்பீர்கள். அதை அவிழ்த்து என்னிடம்...
Thamil Paarvai

முருகனுக்கு உகந்த தைப்பூச நாளின் சிறப்புகள்..

🦚 முருகப்பெருமானின் அருளை பெற்றுத்தரும் விரதங்களில் தைப்பூசம் விரதமே முதன்மையானதாக கருதப்படுகிறது. சக்தியின் வெளிப்பாடும், தெய்வாம்சமும் பொருந்திய காலம்தான் தை மாதம். தை மாதத்தில் பௌர்ணமியன்று பூசம்...
Thamil Paarvai

கோவில்களில் மறந்து கூட இந்த தவறை மட்டும் செய்யாதீர்கள்

1. கோயிலில் தூங்கக் கூடாது.2. தலையில் துணி, தொப்பி அணியக்கூடாது.3. கொடிமரம், நந்தி, பலிபீடம், இவைகளின் நிழல்களை மிதிக்கக் கூடாது.4. விளக்கு இல்லாமல் (எரியாத பொழுது) வணங்கக்...
Thamil Paarvai

வரவிருக்கிறது கிருஷ்ண ஜெயந்தி கிருஷ்ணரை வரவேற்க தயாராவோம்.

கிருஷ்ணஜெயந்தி…!!  ஒவ்வொரு பண்டிகைக்கும் ஒரு புராண கதை உண்டு. அதுபோலவே கோகுலாஷ்டமிக்கும் ஒரு கதை உண்டு. கோகுலாஷ்டமி குழந்தை கிருஷ்ணனின் புகழை சொல்லக்கூடியது.  தசாவதாரத்தில் ஓர் அவதாரம்...
Thamil Paarvai

நாளை சிறப்புமிகு ஆனி உத்திரம் நடராஜருக்கு அபிஷேகம் செய்யப்படுவது ஏன்?

சிவபெருமானின் 64 மூர்த்தி வடிவங்களில் மிகவும் அற்புதமான திருமேனி நடராஜர் திருவுருவம். நடராஜ பெருமானின் திருவுருவில் பஞ்சபூதங்கள், அஷ்ட மூர்த்திகள், அனைத்து தெய்வ அம்சம், அண்ட சராசரங்கள்,...
Thamil Paarvai

தூத்துக்குடியில் பனிமயமாதா ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

உலக பிரசித்தி பெற்ற தூத்துக்குடி பனிமயமாதா பேராலய திருவிழா ஆண்டு தோறும் ஜூலை 26-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி ஆகஸ்ட் மாதம் 5-ந்தேதி வரை நடக்கும். ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பொதுமக்கள் கலந்து...
Thamil Paarvai

Leave a Comment