பாலிவுட் நடிகர் ஷாருககான் பற்றிய ரகசியத்தை விருது விழா மேடையில் தெரிவித்துள்ளார் அவரின் மனைவி கவுரி. பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மற்றும் அவரின் மனைவி கவுரிக்கு மிகவும் ஸ்டைலான தம்பதி விருது அண்மையில் கொடுக்கப்பட்டது. அந்த மகிழ்ச்சியை ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்ட கவுரி தனது கணவர் பற்றிய ரகசியம் ஒன்றை தெரிவித்துள்ளார்.
ஏதாவது நிகழ்ச்சிக்கு கிளம்பினால் யார் வெகுநேரம் எடுத்துக் கொள்வீர்கள் என்று விருது விழா மேடையில் கவுரியிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் கூறியதாவது, நான் ஒரு ரகசியத்தை கூறுகிறேன். எப்பொழுது நாங்கள் பார்ட்டிக்கு கிளம்பினாலும் நான் 20 நிமிடங்களில் தயாராகி விடுவேன். ஆனால் ஷாருக்கான் 2 அல்லது 3 மணிநேரம் எடுப்பார்.
இந்த விருது விழாவுக்கு வர நான் 3 மணிநேரம் எடுத்துக் கொண்டேன். அதனால் அவர் 6 மணிநேரம் எடுத்தார் என்றார். விழா மேடையில் மனைவி தனது குட்டை எல்லாம் உடைப்பதை பார்த்த ஷாருக்கான் கவுரியின் கையில் இருந்த மைக்கை வாங்கி நீ இன்று ரொம்ப அழகாக இருக்கிறாய் என்று கூறி சமாளித்தார்.