
நம்மில் சிலர் பழங்களில் உப்பை சேர்த்து சாப்பிடுவார்கள். உதாரணத்திற்கு நவாப்பழம், மாங்காய், கொய்ய போன்ற பழங்களை நாம் ருசித்ததுண்டு. இப்படி பழங்களில் உப்பு தூவி சாப்பிடுவதால், பழங்களின் சுவை அதிகரிப்பதோடு, வேறு சில காரணங்களும் இதில் அடங்கியுள்ளன. அது என்ன என்பதைப் பற்றி பார்க்கலாம்….
பாக்டீரியாக்களை அளிக்கும் :
🍇 பழங்களில் எண்ணற்ற நுண்கிருமிகளான பாக்டீரியாக்கள் இருக்கக்கூடும். அதனைத் தடுத்து, பழங்களை பிரஷ்ஷாகவும், பழங்களில் உள்ள பாக்டீரியாக்களின் வளர்ச்சியைத் தடுக்கவும் உப்பு பயன்படும்.
இரசாயணங்கள் நீங்கும் :
🍉 இக்காலக்கட்டத்தில் பழங்களை பழுக்க வைப்பதற்கு காந்தக் கல் பயன்படுத்தப்படுகிறது. பொதுவாக பழவகைகளின் பழுக்கும் திறனை மேம்படுத்த அவை திரண்ட காயாக இருக்கும் போது, அவற்றின் மீது எத்ரெல் தெளித்தல் அல்லது திரண்ட காய்களை எத்ரெலில் முக்கி எடுத்தல் போன்ற முறைகள் பின்பற்றப்படுகின்றன. அதேபோல பழங்களை பதப்படுத்த பொருட்கள் பயன்படுத்தப்படுகிறது. மேலும் கடையில் வாங்கி வந்த பழங்களை உப்பு கலந்த நீரில் ஊற வைத்தால், அதில் உள்ள பூச்சிக் கொல்லிகள் மற்றும் இதர இரசாயணங்கள் நீங்கிவிடும்.
செரிமானம் பிரச்சனையைத் தடுக்கிறது :
🍍 அசிட்டிக் அமிலங்கள் நிறைந்த பழங்கள் நிறைய உள்ளன. குறிப்பாக, எலுமிச்சை, திராட்சை, ஆரஞ்சு ஆகிய பழங்களில் அசிட்டிக் அமிலங்கள் நிறைந்துள்ளன. இவை உடலுக்கு ஆரோக்கியமானது என்றாலும் கூட, அதிகமாக சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். அதேபோல் இந்த பழங்களை வெறும் வயிற்றில் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.

🍒 அமிலங்கள் அதிகமாக நிறைந்த பழங்களில் உப்பு சேர்த்து சாப்பிட்டு வந்தால் வயிற்றில் சுரக்கும் அமிலத்தை சமநிலைப்படுத்தி, செரிமானம் சம்பந்தப்பட்ட பிரச்சனையைத் தடுக்கிறது.
புளிப்புச் சுவையுள்ள பழங்கள் :
🍊 மிகவும் புளிப்புச் சுவையுள்ள பழங்கள் அமிலத்தன்மை உடையது. பசிக்காத பொழுது எந்த உணவு சாப்பிட்டாலும் அது அமிலத்தன்மையுள்ள உணவாக மாறிவிடும். ஒரு நாள் உண்ணா நோன்பு இருந்து புளிக்கும் சுவையுள்ள நெல்லிக்காய் சாப்பிட்டாலும் அது இனிக்கும். அப்போது நமது உமிழ் நீர்ச்சுரப்பிகள் அமிலத் தன்மையுள்ள பழங்களைக் கூட காரத்தன்மையுள்ள உணவாக மாற்றி விடுகின்றன.
🍓 புளிப்புச் சுவையுள்ள பழங்களில் உப்பு தூவி சாப்பிடுவதால், அந்த பழங்களின் புளிப்பு குறைந்து மிகவும் சுவையாக இருக்கும். மேலும் சில கனியாத பழங்களை சாப்பிடும் போது, அதில் உள்ள பச்சை வாசனை வராமல் இருப்பதற்கு உப்பை தூவி சாப்பிடலாம்.
எவ்வளவு ருசியான சாப்பாடாக இருந்தாலும், அதில் உப்பு இல்லை என்றால் அந்த உணவை நம்மால் சாப்பிடவே முடியாது. ஆனால் அதே வகையில் நாம் சாப்பிடும் உணவில் உப்பு அதிகமாக இருந்தாலும் அதை சாப்பிடவே முடியாது. எனவே எந்த உணவாக இருந்தாலும் அதை அளவாக பயன்படுத்துவதே மிகவும் சிறந்தது.