கால்பந்து விளையாட்டு ஜோதிடம்

பெனால்டியில் சொதப்பல்… பொருஷியா டார்ட்மண்ட் அதிர்ச்சித் தோல்வி!

கடந்த சில மாதங்களாக எல்லோரும் அவரை ஐரோப்பாவின் சூப்பர் சப் என்றே பாராட்டிவந்தனர். ஆனால், நேற்று… டார்ட்மண்ட் அணிக்கு எமனாக மாறினார் அல்கசர்.

கடந்த சில மாதங்களாக எல்லோரும் அவரை ஐரோப்பாவின் சூப்பர் சப் என்றே பாராட்டிவந்தனர். ஆனால், நேற்று… டார்ட்மண்ட் அணிக்கு எமனாக மாறினார் அல்கசர்.
ர்டர் ப்ரேமன் அணியுடனான போட்டியில், பெனால்டி ஷூட் அவுட்டில் சொதப்பியதால் டி.எஃப்.பி போகல் தொடரிலிருந்து வெளியேறியது பொருஷியா டார்ட்மண்ட். கடந்த ஆண்டு ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் பேயர்ன் மூனிச் அணியிடம் தோற்றிருந்த டார்ட்மண்ட், இந்த முறையும் அதே சுற்றில் வெளியேறியுள்ளது.
ஜெர்மன் கால்பந்தைப் பொறுத்தவரை எப்போதுமே பேயர்ன் மூனிச், பொருஷியா டார்ட்மண்ட் அணிகள்தான் பெரும் ஆதிக்கம் செலுத்தும். இவர்கள்தான் பெரும்பாலான கோப்பைகளை வெல்வார்கள். குறிப்பாக பேயர்ன் மூனிச், டார்ட்மண்ட் க்ளப்பைவிட பெரும் ஆதிக்கம் செலுத்தும். நன்றாக விளையாடும் டார்ட்மண்ட் வீரர்களைக்கூட பெரும் தொகைக்கு, விரைவில் ஒப்பந்தம் செய்து, வைரியைப் பலவீனமாக்கிவிடும். அதிலும், முன்னாள் டார்ட்மண்ட் பயிற்சியாளர்
இந்த சீசன், டார்ட்மண்ட் அணிக்கு மிகவும் சாதகமாக அமைந்தது. புதிய பயிற்சியாளர், சீனியர் வீரர்களின் வயது, முக்கிய வீரர்களின் காயம், டிஃபண்டர்களின் ஃபார்ம் அவுட் எனத்&ன்ப்ச்ப்;தொடர்ந்து பல பிரச்னைகளைச் சந்தித்தது பேயர்ன் மூனிச். இந்தச் சந்தர்ப்பத்தை டார்ட்மண்ட் மிகச் சிறப்பாகப் பயன்படுத்தி, புண்டஸ்லிகாவில் ஆதிக்கம் செலுத்தியது. இந்த சீசனில், 20 போட்டிகள் முடிந்துள்ள நிலையில் பேயர்ன் அணியைவிட 7 புள்ளிகள் முன்னிலை பெற்றுள்ளது.
சில பேயர்ன் வீரர்கள் இந்த சீசனுடன் ஓய்வு பெற்றுவிடுவார்கள் என்பதால், அடுத்த சீசன் அந்த அணி புதிய வீரர்களுடன் களமிறங்கும். `இந்த சீசன் கப் அடிச்சாதான் உண்டு’ என்பதுதான் டார்ட்மண்ட் ரசிகர்கள் பலரின் மைண்ட் வாய்ஸாக இருந்துவருகிறது. அதுவும் “டி.எஃப்.பி போகல் ஜெயிச்சி `டபுள்’ அடிக்கணும்” என்றுதான் பலரும் நினைத்திருந்தனர். இந்த ஆண்டுதான் அதற்கான சரியான வாய்ப்பாகவும் கருதப்பட்டது. இந்த நிலையில், அந்த வாய்ப்பைக் கோட்டை விட்டிருக்கிறது டார்ட்மண்ட்.
வெர்டர் ப்ரேமன் அணியுடனான அந்தப் போட்டியில் டார்ட்மண்ட் அணியின் டிஃபன்ஸ் சற்று மோசமாகவே இருந்தது. ஆட்டம் தொடங்கிய 5-வது நிமிடத்திலேயே கோல் வாங்கி, நெருக்கடி ஏற்படுத்திக்கொண்டவர்கள், கூடுதல் நேரத்தின் கடைசி நிமிடத்திலும் கோல் வாங்கி வெற்றியை நழுவவிட்டனர். இங்கிலாந்தைச் சேர்ந்த இளம் நட்சத்திர வீரர் ஜேடன் சான்சோ ஆடாதது அவர்களுக்குச் சற்றுப் பின்னடைவாக அமைந்துவிட்டது.
90 நிமிடங்கள் முடிவில் இரு அணிகளும் 1௧ எனச் சமநிலையில் இருக்க, கூடுதலாக வழங்கப்பட்ட 30 நிமிடங்களில், இரு அணிகளும் தலா 2 கோல்கள் அடித்தன. 3௩ எனப் போட்டி முடிய, பெனால்டி ஷூட் அவுட் நடந்தது. வழக்கமாக டார்ட்மண்ட் அணி ஏதேனும் இக்கட்டில் இருந்தால், அணியைக் கரைசேர்ப்பது பகோ அல்கசர்தான். சப்ஸ்டிட்யூட்டாக வந்து கோல் அடித்தே, பல போட்டிகளில் அணியை வெற்றி பெறவைத்துள்ளார். சில போட்டிகளில் தோல்விகளைத் தவிர்க்க உதவியுள்ளார். அதனால், கடந்த சில மாதங்களாக எல்லோரும் அவரை ஐரோப்பாவின் சூப்பர் சப் என்றே பாராட்டிவந்தனர். ஆனால், நேற்று… தன் அணிக்குஎமனாக மாறினார் அல்கசர்.முதல் பெனால்டி… வலது புறம் அடித்தார். போஸ்டின் கார்னருக்கும் செல்லாமல், கோல் கீப்பருக்கு மேலேவும் செல்லாமல், டைவ் அடித்த கோல் கீப்பரின் கைகளுக்கு மெதுவாகச் சென்றது. அதை எளிதாகத் தடுத்தார் வெர்டர் கோல்கீப்பர் பாவ்லென்கா. டார்ட்மண்ட் மீது உச்சகட்ட நெருக்கடி. வெர்டர் அணியின் முதல் வாய்ப்பில் கோல். அடுத்த வந்த டார்ட்மண்ட் வீரர் மேக்சிமிலியன் பில்ப்ஸ், அல்கசர் போலவே அடிக்க, அதுவும் தடுக்கப்பட்டது. டார்ட்மண்ட் அணியின் வெற்றிக் கனவு அங்கேயே முடிந்தது. இரு அணிகளும் 4 பெனால்டிகள் அடித்த நிலையில் 2௪ எனத் தோற்றது டார்ட்மண்ட்.
இந்தத் தோல்வியை எதிர்பார்த்திராத டார்ட்மண்ட் ரசிகர்கள், சொந்த மைதானத்தில் விரக்தியின் உச்சத்துக்கே சென்றனர். இனி புண்டஸ்லிகா மட்டுமே அவர்களுக்கான மருந்து!

Recent posts

தோல்விக்கு காரணமும் கிரகங்களே!

தோல்விக்கு காரணமும் கிரகங்களே!ஒரு மனிதனின் அன்றாட வாழ்க்கையில் ஏற்படுக்கூடிய தடை, தடங்கல், தோல்விகள் ஏற்படுவதற்கும் கிரக திசா புத்திகள், கோச்சார கிரக நிலைகளே காரணமாக இருக்கின்றன. பலம்...
Thamil Paarvai

இருவிதமான திருமண தோஷங்கள்

திருமணம் பார்க்கும்போது இருவிதமான தோஷங்கள் மக்கள் மத்தியில் நடைமுறையில் உள்ளது. அவைகள்1.செவ்வாய் தோஷம்2.ராகு-கேது தோஷம் செவ்வாய் தோஷம் : செவ்வாய் தோஷம் என்னவென்பதை அறிந்து கொண்டால் அதற்கு...
Thamil Paarvai

திருமணமும், ஜாதகமும்…!!

திருமணம் பற்றியும், அதன் முக்கியத்துவம் பற்றியும், அதில் நடைபெறும் சடங்குகள் சம்பிரதாயங்கள் பற்றியும், நாம் இதுவரை விரிவாக பார்த்தோம். இனி திருமணத்தில் மணமக்களின் ஜாதகத்தின் முக்கியத்துவம் யாது...
Thamil Paarvai

உலக கோப்பையை 6வது முறையாக வென்றது ஆஸ்திரேலியா..இறுதி போட்டியில் இந்தியா தோல்வி..

ஐசிசி உலக கோப்பை சாம்பியன் பட்டத்தை ஆறாவது முறையாக ஆஸ்திரேலிய அணி என்று சாதனை படைத்துள்ளது. அகமதாபாத்தில் நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் இந்திய அணியை ஏழு விக்கெட்...
Thamil Paarvai

2023 உலகக்கோப்பை இறுதி போட்டியில் இந்திய அணி தோல்வி சோக கடலில் ரசிகர்கள்

ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 2023 உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா தோல்வி அடையக் காரணமே இந்திய அணிக்கு எதிராக போன ஒரு முடிவு தான். இந்தியா –...
Thamil Paarvai

நிதானமான செயல்பாடுகளின் மூலம் எண்ணிய இலக்கை அடையும் திறமை கொண்ட மகர ராசி அன்பர்களே…!!

2022ஆம் வருடமானது மகர ராசி அன்பர்களுக்கு மனதில் புதுவிதமான தன்னம்பிக்கையும், நுட்பமான செயல்பாடுகளின் மூலம் பலரின் கவனத்தையும் ஈர்க்கக்கூடிய ஒரு சாதகமான வாய்ப்புகளை உருவாக்கும் காலமாக அமையும்....
Thamil Paarvai

சவாலான செயல்களையும் செய்து முடிக்கும் வல்லமை கொண்ட மீன ராசி அன்பர்களே…!!

2022ஆம் வருடமானது மீன ராசி அன்பர்களுக்கு தோற்றப்பொலிவில் புதிய மாற்றத்தையும், புத்துணர்ச்சியையும் ஏற்படுத்தும். குடும்ப விவரங்களை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்வதை குறைத்துக் கொள்ளவும். சுபகாரியம் தொடர்பான முயற்சிகள்...
Thamil Paarvai

கனிவான பேச்சுக்களின் மூலம் அனைவரையும் ஈர்க்கும் வல்லமை கொண்ட கன்னி ராசி அன்பர்களே…!!

2022ஆம் வருடமானது கன்னி ராசி அன்பர்களுக்கு வித்தியாசமான சிந்தனைகளின் மூலமும், புதுமையான வியூகங்களின் மூலமும் திறமைகளை வெளிப்படுத்தி தங்களுக்கென புதிய அத்தியாயத்தை உருவாக்குவதற்கான வாய்ப்புகள் ஏற்படும். வாக்கு...
Thamil Paarvai

பெருந்தன்மையான பேச்சுக்களின் மூலம் அனைவரையும் கவரக்கூடிய கும்ப ராசி அன்பர்களே…!!

2022ஆம் வருடமானது கும்ப ராசி அன்பர்களுக்கு குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை அறிந்து சூழ்நிலைக்கேற்ப செயல்படுவதன் மூலம் ஒத்துழைப்பு கிடைக்கும். நண்பர்களின் வழியில் ஆதரவு கிடைக்கப் பெறுவீர்கள். நெருக்கமானவர்களை...
Thamil Paarvai

Leave a Comment