பேட்ட படத்தில் சான்ஸ் மிஸ்சிங்… இப்ப முருகதாஸ் படத்தில் கிடைத்துள்ளது யோகிபாபுவுக்கு என்று கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகும் ரஜினியின் 166-வது படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க காமெடி நடிகர் யோகி பாபுவிடம் படக்குழு பேச்சுவார்த்தை நடத்தி உள்ளது.
‘பேட்ட’ படத்தை தொடர்ந்து ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவாகும் படத்துக்கு தேதிகள் ஒதுக்கியுள்ளார் ரஜினி. முதல்கட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இந்த படத்துக்கான நடிகர்கள் தேர்வை தொடங்கியுள்ளது படக்குழு.
இதில் படம் முழுக்க ரஜினியுடனே வரும் முக்கிய காமெடி கதாபாத்திரத்துக்கு யோகி பாபுவிடம் பேசியுள்ளனர். யோகிபாபு தற்போது ‘தளபதி 63’ படத்தில் நடித்து வருகிறார். படப்பிடிப்பு எப்போது என முடிவானவுடன் கண்டிப்பாக நடிக்கிறேன் என்று கூறியுள்ளாராம்.
இதன் மூலம் ரஜினியுடன் முதன்முறையாக நடிக்க உள்ளார் யோகிபாபு. முன்னதாக ‘பேட்ட’ படத்தில் முனீஸ்காந்த் கதாபாத்திரத்தில் நடிக்க முதலில் யோகிபாபுவிடம் தான் பேசினார்கள். தேதிகள் பிரச்னையால் அவரால் நடிக்க முடியாமல் போனது. இந்த மாத இறுதிக்குள் ஒட்டுமொத்த நடிகர்கள் தேர்வையும் முடித்துவிட்டு, மார்ச் இறுதியில் படப்பிடிப்புக்குச் செல்ல தயாராகி வருகிறது படக்குழு.
முருகதாஸ் திரைக்கதை வடிவத்தை இறுதி செய்யும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்.