இந்திய சினிமா இந்தியா சினிமா தலைப்பு புதிய செய்திகள்

முடிஞ்சா தொடச் சொல்றா பார்ப்போம் ‘மாஸ்டர்’ விஜய்?

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு, அர்ஜுன் தாஸ் உள்ளிட்டோர் நடித்துள்ள மாஸ்டர் படம் பொங்கல் பண்டிகை ஸ்பெஷலாக வரும் 13ம் தேதி தியேட்டர்களில் வெளியாகவிருக்கிறது.

இந்நிலையில் மாஸ்டரை கொண்டாட தயாரிப்பு தரப்பு ப்ரொமோ வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறது. மாஸ்டர் படத்தில் வரும் வாத்தி கமிங் பாடலுக்கு யூடியூபில் 100 மில்லியன் வியூஸ் கிடைத்துள்ளதை கொண்டாடும் வகையில் விஜய் சூப்பராக ஸ்டெப்ஸ் போடும் ப்ரொமோ வீடியோவை நேற்று வெளியிட்டார்கள்.

இதையடுத்து மாஸ்டர் பேசி இன்னும் பாக்கலைல? இன்னைக்கு பாப்பீங்க. மாலை 6 மணி வரை காத்திருக்கவும் என்று தயாரிப்பு தரப்பு ட்வீட் செய்தது. அறிவித்தபடி 6 மணிக்கு இரண்டாவது ப்ரொமோ வீடியோ வெளியாகியுள்ளது.

அந்த வீடியோவில், இதுக்கு முன்னாடி இங்க வந்தவன்லாம் உயிர் பயத்துல ஓடிப் போயிருக்கலாம், ஆனால் என் கதையே வேற. முடிஞ்சா தொடச் சொல்றா பார்ப்போம் என்று கெத்து காட்டுகிறார் விஜய்.

ப்ரொமோ வீடியோவை பார்த்த ரசிகர்கள் கூறியிருப்பதாவது,

ப்ரொமோவே இப்படி இருக்கே, அப்படி என்றால் படத்தை பற்றி சொல்லவா வேண்டும். இத்தனை மாதங்களாக வாத்திக்காக காத்திருந்து வீண் போகவில்லை. நீ வா வாத்தி என்று தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே மாஸ்டர் படத்தின் சென்சார் சான்று வெளியாகி வைரலாகியுள்ளது. மாஸ்டருக்கு யு/ஏ சான்று கிடைத்துள்ளது. படம் 178 நிமிடங்கள் 35 நொடிகள் ஓடுமாம். சுமார் 3 மணிநேரம் விஜய், விஜய் சேதுபதியை பெரிய திரையில் பார்த்து ரசிக்கலாம். நெய்வேலியில் படப்பிடிப்பு நடந்தபோது விஜய் தன் ரசிகர்களுடன் சேர்ந்து எடுத்துக் கொண்ட செல்ஃபியை படத்தின் கடைசியில் சேர்த்திருக்கிறாராம் லோகேஷ் கனகராஜ். சாதனை படைத்த அந்த செல்ஃபி நிச்சயம் விஜய் ரசிகர்களுக்கு ட்ரீட்டாக இருக்கும். மாஸ்டர் படம் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி ஆகிய நான்கு மொழிகளில் ரிலீஸாகவிருக்கிறது. இந்நிலையில் அடிக்கடி அப்டேட் கிடைப்பதால் விஜய் ரசிகர்கள் செம ஹேப்பியாக இருக்கிறார்கள்.

Recent posts

10 ஆவது நாடாளுமன்றத்தில் இடம்பெறவுள்ள தமிழ் எம்.பிக்கள்

பொதுத்தேர்தலில் மக்கள் ஆணை மூலம் 25 தமிழ் எம்.பிக்கள் தெரிவாகி இருந்தனர்.இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு கிடைக்கப்பெற்ற தேசியப் பட்டியல் ஆசனம் ஊடாக வைத்தியர் ப. சத்தியலிங்கமும் தேசிய...
Thamil Paarvai

ஜனாதிபதி அனுரகுமார தலைமையிலான புதிய அமைச்சரவை இன்று பதவியேற்பு

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் ஆட்சியின் புதிய அமைச்சரவை சற்று முன்னர் அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய நிதி, பாதுகாப்பு மற்றும் டிஜிட்டல் அமைச்சுக்களை சமகால ஜனாதிபதி அநுகுமார திசாநாயக்க தன்வசம்...
Thamil Paarvai

தமிழரசு கட்சி சஜித்துக்கு ஆதரவு வழங்கும் தீர்மானத்தில் எனக்கு உடன்பாடு இல்லை..

தமிழரசு கட்சியின் மத்திய  சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு வழங்குவதாக எடுத்த முடிவு எனக்கு உடன்பாடு இல்லை என தமிழரசு கட்சியின் கொழும்பு கிளை தலைவரும் மத்திய குழு...
Thamil Paarvai

தமிழ்ப் பொதுவேட்பாளர் தமிழரசுக்கட்சிக்கு உதவி

இன்று வவுனியாவில் தமிழரசுக்கட்சியின் மத்திய குழுக்கூட்டம் நடப்பதாக அறிவிக்கப் பட்டிருந்தது. ஆனால் இன்று நடந்த கூட்டத்தில் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா கலந்து கொள்ளவில்லை. அதன் முக்கிய...
Thamil Paarvai

பயமா? சோர்வா?..டிமான்ட்டி காலனி 2: திரை விமர்சனம்

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அருள்நிதி, ப்ரியா பவானி சங்கர் உள்ளிட்டோர் நடிப்பில் சாம் சி.எஸ் இசையில் உருவாகியிருக்கும் படம் டிமான்ட்டி காலனி 2. இதன் முதல் பாகம்...
Thamil Paarvai

தன் மக்களுடன் சேர்ந்து தொடங்குகிறார் தங்கலான். இந்த முயற்சியில் அவர் வெற்றி பெற்றாரா ? இல்லையா ?

இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் சீயான் விக்ரம் நடிப்பில் உருவாகி, உலகளவில் வெளிவந்துள்ள திரைப்படம்  தங்கலான். இப்படத்தை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார். பெரிதும்...
Thamil Paarvai

பிரேஸிலின் வோபாஸ் விமான சேவைக்கு சொந்தமான விமானம் சாவோ போலா நகரில் விழுந்து விபத்து ஏற்பட்டதில் 62 பேர் உயிரிழந்தனர்.

இரட்டை எஞ்சின் கொண்ட அந்த விமானம் தெற்கு மாநிலமான பரானாவில் உள்ள காஸ்கேவலில் இருந்து சாவோ பாலோ நகரிலுள்ள குவாருல்ஹோஸ் விமான நிலையத்திற்குப் பறந்து கொண்டிருந்தபோது, ​​வின்ஹெடோ...
Thamil Paarvai

138 ரன்னில் சுருண்ட இந்தியா: 27 ஆண்டுக்கு பிறகு தொடரை வென்ற இலங்கை

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி தற்போது 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி டையில்...
Thamil Paarvai

இலங்கைக்கு 3 வது இடம்

2024 பாரிஸ் ஒலிம்பிக் தொடக்க விழாவிற்கான 11 சிறந்த கலாச்சார ஆடைகள் பெயரிடப்பட்டுள்ளன. அவற்றுள் இலங்கையின் கலாசாரத்தை வெளிக்காட்டி உருவாக்கப்பட்ட ஆடையானது மூன்றாம் இடத்தைப் பெற முடிந்துள்ளது....
Thamil Paarvai

Leave a Comment