பேட்ட படத்தை தொடர்ந்து, நடிகர் ரஜினிகாந்த் முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கிறார். இப்படத்திற்கு தர்பார் என பெயரிட்டு, பர்ஸ்ட் லுக் போஸ்டரை நேற்று வெளியிட்டனர். ரஜினி போலீஸாக ஐபிஎஸ் அதிகாரியாக நடிக்கிறார்.
ரஜினி ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். அனிருத் இசையமைக்க, சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார். ரஜினியின் 167-வது படமாக உருவாகும் இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது.
இப்படத்தின் படப்பிடிப்பு மும்பையில் இன்று(ஏப்., 10) முதல் பூஜையுடன் துவங்கியது. தொடர்ந்து ஒரு மாதத்திற்கும் மேலாக மும்பையில் படப்பிடிப்பை நடத்துகின்றனர். அடுத்தாண்டு பொங்கல் தினத்தில் படத்தை ரிலீஸ் செய்யப்போவதாக அறிவித்துள்ளனர்.