டிப்ஸ் பொது மருத்துவம்

வாசலில் கோலம் போடுவதால் ஏற்படும்நன்மைகள்

🌟 கோலம் – இப்பெயரை கேட்டவுடன் அனைவரின் மனதிலும் தோன்றக்கூடிய ஒரே விஷயம் எதுவென்றால் அது அழகுதான். ஆனால், அழகிற்காக மட்டும் கோலம் போடுகிறார்கள் என்றால் கிடையாது. பல மருத்துவ காரணங்களுக்காகவும், காலம் காலமாக கடைபிடித்து வரும் சம்பிரதாயத்திற்காகவும் கோலம் போடுகிறார்கள். வாசலில் கோலம் போடுவதால் ஏற்படும் நன்மைகளை பற்றி தெரிந்து கொள்வோம்.

கோலம் போடுவதால் ஏற்படும் நன்மைகள் :

🌟 காலையிலேயே குனிந்து, நிமிர்ந்து கோலம் போடுவதால் உடலில் இருக்கும் இரத்த ஓட்டமானது சீராகிறது.

🌟 கோலத்தின் ஒரு மூலையிலிருந்து இன்னொரு மூலை, ஒரு புள்ளியிலிருந்து இன்னொரு புள்ளி என கோடுகளால் இணைக்கும் கோலம் உங்கள் சிந்தனையை ஒருநிலைப்படுத்துவதோடு உங்கள் சிந்தனை சிதறல்களை குறைக்கும் ஒரு பயிற்சியாகும்.

🌟 மேலும் புள்ளிக்கோலத்தை போடும்;போது உங்களது கண் ஒரு புள்ளியை கூர்ந்து கவனிப்பதால் உங்களின் கண்பார்வையும் அதிகரிக்கின்றது. இது உங்கள் கண்களுக்கு நீங்கள் கொடுக்கும் இன்னொரு பயிற்சியாகும்.

🌟 பசு சாணத்தாலோ, தண்ணீராலோ வாசலை தெளிக்கும்போது, வாசலில் இருக்கும் கிருமிகள் விலகுகிறது. இதனால் ஆரோக்கியமான சூழல் உருவாகிறது.

🌟 விரல்களால் கோல மாவை எடுத்து, வளைத்து கோலம் போடும்போது, அது நம் கைவிரல்களுக்கு நல்ல பயிற்சியாக அமைகிறது. இதனால் நரம்பு மண்டலங்கள் நன்றாக வேலை செய்கின்றன. புத்துணர்ச்சியும் கிடைக்கிறது.

🌟 கோலம் போடுவதால் நம் கற்பனை திறனும், நினைவாற்றலும் வளர்கிறது.

🌟 அழகாக கோலம் போடுபவரின் கையெழுத்து பார்க்க அழகாக இருக்கும்.

🌟 குனிந்து பெருக்குதல், குனிந்து கோலமிடுதல் இவையெல்லாம் யோகாசனத்தில் ஒரு நிலையாக வருகிறது. இடுப்பு பகுதியை வளைத்து, கழுத்தை வளைத்து, குனிந்து கரங்களால் மாவை எடுத்து கோலமிடுதல் என்பது யோகாசன அடிப்படையில் ஆரோக்கியமான சூழலை தரக்கூடியது.

🌟 கோலமிடுதல் என்பது வீட்டை நல்ல முறையில் அலங்கரித்தல் மற்றும் வரவேற்றல், உபசரிக்கும் குணம், மேலும் வீடு மங்களகரமாக இருக்கிறது என்பதற்காகவும் போடப்படுகிறது.

🌟 தினமும் விடியற்காலையில் கோலம் போடுவதால் வீட்டிற்கு மட்டும் நன்மை கிடைப்பதில்லை. அதை போடும் பெண்களுக்கும் புத்திக்கூர்மை, ஞாபகசக்தி, உற்சாகம், செயலில் கவனம், பொறுமை, பிரச்சனைகளை கையாளும் திறன் ஆகியவையும் கிடைக்க பெறுகிறது.

🌟 கோலத்தால் இவ்வளவு நன்மைகள் இருக்கிறது. அதனால் கோலம் போடுவதை ஒரு கடமையாக செய்யாமல் நமக்கும், இந்த பூமிக்கும் நன்மை கிடைக்கிறது என்ற நோக்கத்தோடு செய்வோம்.பிறந்தது மார்கழி மாதம்…அனைவரின் வீட்டு வாசலிலும் கோலங்கள் அழகழகாக காட்சி அளிக்கும்.

Recent posts

அடிக்கடி சளி தொல்லையா?

🤧 சளி பிடித்தல் என்பது பொதுவான பிரச்சனையாகும். சிலருக்கு கால சூழ்நிலையின் காரணமாகவோ, அருகில் இருப்பவருக்கு சளி பிடித்திருந்து நோய்த்தொற்று ஏற்பட்டாலோ சளி பிடிக்கலாம். ❄️ குளிர்காலம்...
Thamil Paarvai

பெரியோர்களை பார்த்தால் காலில் விழுந்து வணங்க சொல்வது ஏன்?

ஆசீர்வாதம் என்றால் என்ன? 🙇 ஆசீர்வாதம் என்பது நமது கலாச்சாரத்தோடு ஒன்றிணைந்து வரும் ஒரு பழக்கம். விசேஷ தினங்கள் எதுவாக இருந்தாலும் பெரியோர்களின் காலில் விழுந்து ஆசீர்வாதம்...
Thamil Paarvai

இரத்தத்தை சுத்தமாக்க உதவும் சில உணவு வகைகள்

எமது உடலில் ஓடும் இரத்தமானது உடல் ஆரோக்கியத்தில் பெரும் பங்குவகிக்கிறது. இதனால் இரத்தத்தை சுத்தமாக வைத்திருத்தல் மிகவும் அவசியமாகிறது. உடலின் எல்லா செயற்பாடுகளுக்கும் இரத்தம் இன்றியமையாதது. இரத்தத்தில்...
Thamil Paarvai

புகைபிடிக்கும் சிகரெட்டுகளின் ஆரோக்கிய விளைவுகள்.

சிகரெட் புகைப்பதால் உடல்நல பாதிப்புகள் இருப்பதை எல்லோருக்கும் தெரியும். புகைபிடித்தல் மூக்குக்கு வெறுக்கத்தக்கது, மூளைக்கு தீங்கு விளைவிக்கும் மற்றும் நுரையீரலுக்கு ஆபத்தானது. புகைபிடித்தல் என்பது உங்களுக்கு ஏற்படக்கூடிய...
Thamil Paarvai

உணவுக்கு முன்னும், பின்னும் தண்ணீர் குடிப்பது.. நல்லதா?.. கெட்டதா?..

தண்ணீர் குடித்தல்:உடல் ஆரோக்கியத்திற்கு தண்ணீர் மிக இன்றியமையாதது. இதனால்தான் தினமும் 3-4 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும் என்று சுகாதார நிபுணர்களும் பரிந்துரைக்கின்றனர்.ஆனால் உணவு உண்பதற்கு முன்பு...
Thamil Paarvai

ரம்புட்டான் பழத்தில் இத்தனை நன்மைகள் இருக்கா?

👉 பொதுவாகவே நாம் சாப்பிடும் உணவுகளாக இருந்தாலும் சரி பழமாக இருந்தாலும் சரி அனைவரும் சத்துகள் நிறைந்துள்ள பழத்தை தான் அதிகமாக எடுத்துக்கொள்ள விரும்புவார்கள். அதில் ஒன்று...
Thamil Paarvai

இரவு நேரங்களில் மரத்தின் அடியில் தூங்கக்கூடாது ஏன்?

😴 இரவு நேரங்களில் நாம் நல்ல உறக்கத்தை மேற்கொள்வது மிகவும் அவசியம். அதாவது 8 மணிநேரம் உறக்கம், கட்டாயம் தேவையான ஒன்றாகும். பெரும்பாலானோர் பகல் நேரத்தில் மரத்தின்...
Thamil Paarvai

ஆரோக்கியமான இதயம் வேண்டுமா, வெண்டிக்காய் சாப்பிடுங்கள்:

வெண்டிக்காய் என்பது ஒரு வகை பச்சை காய்கறி. இது நீண்ட விரல் போன்றது என்பதால் ஆங்கிலத்தில் லேடீஸ் ஃபிங்கர் என்று அழைக்கப்படுகிறது.  இலங்கையில் இது பொதுவாக வெண்டிக்காய்...
Thamil Paarvai

தூய்மையான சமையலறையை பெறுவதற்கான வழிகள்

சுத்தமான சமையல் அறையில் சமைக்க வேண்டும் என்றால் எல்லோருக்கும் பிடிக்கும். எனவே நீங்கள் சுத்தமான சமையல் அறையைப் பெற உங்களுக்காக சில குறிப்புகள். 👉 சமையலறையை சுத்தமாக...
Thamil Paarvai

Leave a Comment