கவிதை

கவிதைகள் 01

வெற்றிபெறும் நேரத்தைவிட
நாம் மகிழ்ச்சியுடனும் நம்பிக்கையுடனும்
வாழும் நேரமே நாம் பெறும்
பெரிய வெற்றி…

நித்திரை மறந்திட முத்திரை பதித்த சித்திரமே..
மொட்டாய் பிறந்து பூவாய் மலர்ந்த பூஞ்சரமே..
கூவும் குயிலென உன்தன் குரலொலி புதுமொழி பேசட்டுமே..
இதழ் விரியும் புது அசைவில் இன்னிசை பிறக்கட்டுமே
புது இசையாக மாறட்டுமே..
இன்பங்கள் தொடர்ந்திட
என் மனம் நிறைந்திட
வரும் காலம் ஆகட்டுமே
என் அன்பும் தொடரட்டுமே..

வசந்தம் மீண்டும் தொடங்கிட காண்போம்..
சோலை மீண்டும் துளிர்வதை காண்போம்..
மலர்ந்த இதயம் துடிப்பதை காண்போம்..
இசையின் கதவு திறப்பதை காண்போம்..
சுற்றும் உலகின் விட்டத்தை காண்போம்..
சூரியன் தூரத்தை அளவிட காண்போம்..
கங்கை நதியின் நீளத்தை காண்போம்..
வங்க கடலின் ஆழத்தை காண்போம்..
விரும்பியது யாவும் கிடைப்பதை காண்போம்..
மனதில் சந்தோசம் நிலவிட காண்போம்..
மொழியின் அழகை தமிழில் காண்போம்..

வெற்றி வெறும் வார்த்தையல்ல உன்னை பொறுத்தவரை….
அதுவே உன் வாழ்க்கை அல்லவா….
சீறிப்பாய்ந்து சிகரம் அடைந்திடு……..️!!!!!!!

அழகு புன்னகை பூக்கட்டும்..
மௌன நேரம் விலகட்டும்..
பூ போல் முகம் மலரட்டும்
தரணியில் குலம் தலையட்டும்..
பிறந்த இத்தருணம் தொடரட்டும்..
சிகரம் தொட்டிட தொடங்கட்டும்..

நிலவில் காணாத ஒளியொன்று பூமியில் கண்ட நாள் இன்று..
இரவில் கண்ட நிலவொன்றை பகலிலும் கண்ட நாள் இன்று
வானம் சேராத நிலவொன்று மண்ணில் உதித்த நாள் இன்று..
பூவினம் சேராத பூ ஒன்று பூமியில் பூத்த நாள் இன்று..
பூச்செண்டே உன் முகம் கண்டு..
வாழ்த்துக்கள் கூறும் நாள் இன்று..

சிலையாடும் நடனம் கண்டு சிலைப் போல அமர்ந்திருந்தேன் ..
பாட்டுக்குப் போட்டியாக பாதமிடும் நாட்டியத்தை கண் கூர்ந்து பார்த்திருந்தேன்..
கொஞ்சிடும் சலங்கைகளின் கொஞ்சலை கேட்டிருந்தேன்..
தாளத்தோடு உடல் அசையும் நளினத்தை கண்டிருந்தேன்..
தலாங்கு தக்க திக்கு என்று தாளத்திற்கு தலையாட்டும்
காதனி குண்டலத்தின் நடனத்தையும் கண்டிருந்தேன்..
தட்டு கலி ஓசையுடன் தாளமிடும் உன் சலங்கையின்
ஒலி கேட்டு அமர்ந்திருந்தேன்..
மிருதங்க நாதத்துடன் வாதமிடும் உன் பாத ஒலியை கண்டிருந்தேன்..
இடியிசையில் தொடங்கிய உன் நடனத்தை..
மழையிசை வாழ்த்தியதை கண்டு மகிழ்ந்திருந்தேன்..

நித்திரை மறந்திட முத்திரை பதித்த சித்திரமே..
மொட்டாய் பிறந்து பூவாய் மலர்ந்த பூஞ்சரமே..
கூவும் குயிலென உன் குரலொலி ஒலிக்கட்டும் புதுமொழி பேசட்டும்..
இதழ் அசையும் இசை கேட்டு இன்னிசை பிறக்கட்டும் புது இசையாக மாறட்டும்..
இன்பங்கள் தொடர்ந்திட உள்ளம் நிறைந்திட கேட்பது கிடைக்கட்டும்..
இந்த உலகமும் உனதாகட்டும்..
இத்தரணியில் உன் புகழ் பரவட்டும்..
வாழ்த்தும் உள்ளங்களும் பெருகட்டும்..
அன்பும், வாழ்த்தும் ஓயாமல் உன் புகழ் பாடட்டும்..
பிறந்த நாள் வாழ்த்துக்கள் மென் மேலும் தொடரட்டும்..

கார்மேக நிறத்திற்கு சொந்தமானவர்..
கனிவாக கதைத்திட பாசமானவர்..
தடுமாற்றம் இல்லாத அறிவானவர்..
மனதோடு ஒன்றிடும் உண்மையானவர்..
கண் சிமிட்டா அழகுக்கு உரிமையானவர்..
திகட்டாத சிரிப்பிற்கு சூத்திரமானவர்..
செந்தேன் பாசத்தில் செழிப்பானவர்..
இன்று பிறந்தநாள் வாழ்த்துக்கு சொந்தமானவர்..

அழகிய பெண்ணின் ஜனனம் கண்டேன்..
விஷ்வா என்னும் பெயரில் கண்டேன்..
செந்தேன் நிறத்தில் ஜொலிக்க கண்டேன்..
புதியதாய் பூத்த புது முகம் கண்டேன்..
கபடம் இல்லா அன்பை கண்டேன்..
இமை மூடா விழியின் அழகை கண்டேன்..
செதுக்கிய புருவத்தில் நேர்த்தியை கண்டேன்..
வானவில்லை போல் வளைந்ததை கண்டேன்..
இணைந்து பார்க்கும் இருவிழி கண்டேன்..
இருமுனை கொண்ட ஈட்டியாய் கண்டேன்..
சிவந்து மிளிர்ந்த இதழ்களைக் கண்டேன் செதுக்கிய சிற்பியின் அழகை கண்டேன்..
அழகாய் மின்னும் உன் முகம் கண்டேன் ஆண்டவன் படைப்பின் அற்புதம் கண்டேன்..
தோழி பதிவிட்ட வாழ்த்தை கண்டேன்..
வாழ்த்திட நானும் இணைந்து கொண்டேன்..
வாழ்க வளமுடன் என்பதை கண்டேன்..
அதில் வானவனும் உம்மை வாழ்த்துவதை கண்டேன்..
அழகாய் மலர்ந்த உன் முகம் கண்டேன்..
வாழ்த்தும் என்னையும் ஏர்ப்பதை கண்டேன்..
காணாத உன்னை காணும் முன்னே வாழ்த்திட இதயம் துடித்ததை கண்டேன்..
தேடிடும் கடினம் சேர்ந்திடும் முன்னே ஏற்றிடும் துணிவை உன்னிடம் கண்டேன்..
வாழ்ந்திடு வையகம் உள்ளவரை என்று வாழ்த்திட உள்ளம் துடிப்பதை கண்டேன்..

பூ என்ற ஒரு எழுத்து நார் என்ற இரு எழுத்துடன் சேர்ந்து
பூமாலை என்ற மூன்று எழுத்தில்
கழுத்து என்ற நான்கு எழுத்தில் தொடங்கி
திருமணம் என்ற ஐந்து எழுத்தில் தொடங்கி
முதல் இரவு என்ற ஆறு எழுத்தில் அறிமுகமாகி
குடும்ப வாழ்வு என்ற ஏழு எழுத்தில் நுழைந்து
பிள்ளைச்செல்வம் என்ற எட்டு எழுத்தைப்பெற்று
தாய்சேய்தகப்பன் என்ற ஒன்பது எழுத்தில்
குடும்பமாகஇணைந்து பல்லாண்டு காலம் வாழ என்ற பத்து எழுதோடு வாழ்த்துகிறோம்.

களங்கம் இல்லா வெள்ளை நிலா
என் வீட்டில் கடவுள் தந்த பிள்ளை நிலா
சிறகே இல்லா பறவை நீ
சிரித்தால் பறக்கும் கவலை
வாசம் இல்லாத மலர்கள் உண்டு
உன் மேல் பாசம் இல்லாத‌ மனிதர்கள் இல்லை
பூக்களின் வாசமாக புன்னகையின் தேசமாக
இந்த வையகம் உள்ள வரை வாழ
என் அன்பு மகளுக்கு வாழ்த்துக்கள்.
இதயம் கூட விட்டு விட்டு துடிக்கும்
அந்த இடைவெளியில் கூட உன் நினைவுகள் மட்டுமே.

பூக்களின் வாசமாக
புன்னகையின் தேசமாக
கண்ணில் இமையாக
வானில் நிலவாக
கைகளில் ரேகையாக
வண்ண மயிலின் தோகையாக .
உங்கள் வாழ்க்கை என்ற‌ வானத்தில் .
என்றும் சந்தோசம் எனும் சிறகினை விரித்துப் பறக்க வேண்டும்.

தோட்டத்தில் பூத்த மல்லிகை கூட ஒரு நாளில் மணம் இழத்து விடும் இந்த நாளில் பூத்த மல்லிகையே நீ மன நிறையோடு வாழ்க.

மாணவர்கள் வாழ்வில் வசந்தம் வர தடை கல்லை படி கட்டாக மாற்றி, மாணவர்கள் முன்னேற்றத்தை கண்டு மகிழ்ச்சி காணூம் ஆசிரியர்கள் நமக்கு பெற்றோர்கள் தான்.

சுதந்திர காற்றை சுவாசிக்க பல உயிர்களின் மூச்சுக்காற்று நின்றது. உழைப்பாலும், உண்மையாலும் உயர்ந்து நாமும் காட்டுவோமே! அயல்நாடு, அசந்து பார்க்கும் அளவுக்கு நம் தேசத்தை உயர்த்திக் காட்டுவோமே!

நல்லதோருக்குடும்பம் என்பேன்
நன்றியுள்ளக்குடும்பம் என்பேன்
சொந்தமெல்லாம் சேர்ந்திடவே!
சொர்க்கம் கதவை தட்டுமே!
ஒன்றுசேர்ந்து வாழும் போது மரணம் எட்டி நிற்குமே!
மனம் நிறைந்திருக்கையிலே என்றும் இளமை சூழுமே!
அன்றெடுத்தப்புகைப்படமோ கதைகள் பலச்சொல்லுமே!

நிராகரிப்பும் நிபந்தனையும் நிலையில்லாதது..
நிகரானவரை நிராகரித்த பின் தான்
அவருடைய இல்லாமையை உணர வைக்கும்..
நிபந்தனையிட்டவர் விலகிய பின்தான்
அவருடைய நிர்பந்தத்தை உணர வைக்கும்..
தவறாகி விடுமோ என்ற எண்ணம் தான்
நிராகரிக்க வைக்கும் ஏமாந்து விடுவோம்
என்ற பயம் தான் நிபந்தனை வைக்கும்..
நிராகரிக்க நிலையில்லாத நிபந்தனையே பல வாய்புகளை தவறிட வைக்கும்..

பெண்ணின் அழுகையில் ஆணின் கோபம் மறைந்து போகுது.. ஆணின் அன்பில் பெண்ணின் கோபம் கரைந்து போகுது.. சொல்வதும், கேட்பதும் மனதில் வந்து போகுது.. கேட்டதும், கிடைத்ததும் மனதில் நின்று போகுது..

அதிகபட்ச தேவையை குறைத்துக்கொண்டால்.. குறைந்தபட்ச தேவையே திருப்தியை தரும்.. திருப்தி தற்காலிகமான மகிழ்ச்சியை தரும்.. மகிழ்ச்சி நிரந்தரமான திருப்தியை தரும்..

உறவுகள் என்னை எவ்வளவு தூரத்தில் வைத்தார்களோ அந்த தூரத்திலேயே வாழ பழகிக் கொண்டதால் வாழ்க்கை இனித்தது.. தூரத்தில் வைத்த உறவுகள் சில தேவைக்காக என்னை அருகில் வைத்துக் கொள்ள நினைத்ததால் வாழ்க்கை கசக்கிறது..

பொருமை சில விவாதத்திற்கு தற்காலிகமான தீர்வை தரும்.. விவாதம் யார் சரியாக சொல்கிறார் என்பதை கணிக்கும்.. கலந்துரையாடல் எது சரியானது என்பதை தீர்மானிக்கும்..

சொந்தம் என்று நூறு வரும்
கஷ்டம் என்று வந்தால்தான் நூறின் உண்மை தெரிய வரும்..
கண்ணீர் பொய்யாய் வழிந்து வரும்
சொன்னது எல்லாம் நினைவில் வரும்..
நூறில் பாதி குறைந்து விடும்
மிஞ்சிய சொந்தம் வேசமிடும்..
கண்ணில் காணாமல் மறைந்து விடும்
அழைத்துப் பேசவும் மறந்து விடும்..
மனமும் இரும்பாய் மறுத்து விடும்
கண்டும் காணாமல் இருந்து விடும்..
நேரில் காண்பதை தவிர்த்து விடும்
சொந்தம் என்பதையும் மறந்து விடும்..

மன வலி ஆயிரம் உடன் இருக்கும்..
மனசுக்குள் அதில் பாதி மறைந்திருக்கும்..
பகிர்ந்திடவும் சொந்தமின்றி தனித்திருக்கும்..
கண்ணீரை மொழியாக்கி தவித்திருக்கும்..
வலி குறைய வழி தேடி அலைந்திருக்கும்..
பெற்றெடுத்த சொந்தமும் விலகிருக்கும்..
பணம் கேட்கும் சொந்தங்கள் மறைந்திருக்கும்..
கைபேசி கையில் தான் வைத்திருக்கும்..
நலமா என்று கேட்கவும் மறந்திருக்கும்..
உடன் பிறந்த சொந்தங்கள் சூழ்ந்திருக்கும்..
மேலேறி வாவென்று கை கொடுக்கும்..
தனியில்லை நீ என்று சூளுரைக்கும்..
நாங்கள் இருக்கோம் உனக்கென்று குரல் கொடுக்கும்..
சாய்ந்து கொள் என்று தோள் கொடுக்கும்..

தினம் காணும் நிலவு மறைந்தாலும் தோன்றிடும் தேய்ந்தாலும் வளர்ந்திடும்..
மீண்டும் திரும்பிடும் முன்பு கண்டதை போலவே..
ஆனால் சொந்தம்..! வளர்ந்தால் விலகிடும்..
தேய்ந்தால் விலக்கிடும்..
மறைந்தால் மறந்திடும்..
மீண்டும் திரும்பாது முன்பு இருந்ததை போல..

சொல்ல முடியாத வார்த்தைகளில் ,,, எண்ணிலடங்காத அன்புகடலில்,,,, விழும் போது தூற்றி விடும் உதடுகள் போல் அன்றி, துயரிலும் துணை நிற்கும் உறவு

Leave a Comment