இந்திய சினிமா சினிமா சினிமா செய்திகள்

2020ல் கூகுளில் அதிகம் தேடப்பட்ட டாப் 10 படங்கள்.. சூரரைப் போற்று படத்துக்கு என்ன இடம் தெரியுமா?

2020ம் ஆண்டு கூகுளில் அதிகம் தேடப்பட்ட படங்களில் சூர்யாவின் சூரரைப் போற்றுக்கு 2வது இடம் கிடைத்துள்ளது. 2020 டாப் 10 தமிழ் படங்கள் இதோ..! டாப் 9 படங்களில் இந்தி படங்களே இடம்பெற்றுள்ள நிலையில், சூர்யாவுக்கு கிடைத்த மிகப்பெரிய பெருமையாகவே இது பார்க்கப்படுகிறது. என்ன என்ன படங்கள் எந்த எந்த இடத்தில் இடம்பிடித்துள்ளன என்பதை இங்கே காண்போம்.

அமிதாப் பச்சன் படம்

அமிதாப் பச்சன், ஆயுஷ்மான் குரானா நடிப்பில் இந்த ஆண்டு அமேசான் பிரைமில் வெளியான படம் குலாபோ சித்தபோ. இயக்குநர் சுஜித் சர்கார் இயக்கத்தில் வெளியான இந்த படத்தை கூகுளில் அதிகமான ரசிகர்கள் தேடி உள்ளனர். கூகுள் வெளியிட்டுள்ள அதிகம் தேடப்பட்ட 2020 படங்கள் பட்டியலில் இந்த படத்துக்கு 10வது இடம் கிடைத்துள்ளது.

தோர் நடிகர் படம்

அவெஞ்சர்ஸ் படத்தில் தோர் கடவுளாக நடித்த பிரபல ஹாலிவுட் நடிகர் கிறிஸ்ஹெம்ஸ்வொர்த் மற்றும் பாலிவுட் நடிகர் ரந்தீப் ஹூடா இணைந்து நடித்து நெட்பிளிக்ஸில் இந்த ஆண்டு வெளியான Extraction படம் கூகுள் தேடலில் 9வது இடத்தை பிடித்துள்ளது. சாம் ஹார்கிரேவ் இயக்கிய இந்த படம் உலகளவில் கலெக்‌ஷனை அள்ளியது.

வேட்டை இந்தி ரீமேக்

தமிழில் லிங்குசாமி இயக்கத்தில் ஆர்யா, மாதவன், அமலாபால், சமீரா ரெட்டி நடிப்பில் வெளியான வேட்டை படத்தை அதிகாரப்பூர்வமாக பாலிவுட்டில் இயக்குநர் அகமது கான் பாகி 3 என ரீமேக் செய்தார். டைகர் ஷெராஃப், ஷ்ரத்தா கபூர், திஷா பதானி உள்ளிட்டோர் நடித்த இந்த படம் தியேட்டரில் ரிலீசானதும் தியேட்டர்கள் மூடப்பட்டன. பின்னர் ஓடிடியில் வெளியானது. கூகுள் தேடலில் 8வது இடத்தை பிடித்த இந்த படம் விமர்சன ரீதியாக அடிவாங்கியது.

ஆலியா பட் படம்

ஐஎம்டிபி ரேட்டிங்கில் ஒரு ஸ்டார் பெற்று, இந்த ஆண்டின் படு மோசமான படம் என ஒதுக்கப்பட்ட ஆலியா பட்டின் சடக் 2 திரைப்படத்தையும் இந்த ஆண்டு கூகுளில் அதிகமான ரசிகர்கள் தேடி உள்ளனர். சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரணத்தின் எதிரொலியாக இந்த படம் பாக்ஸ் ஆஃபிஸில் பல்பு வாங்கினாலும் கூகுள் தேடலில் 7ம் இடத்தை பிடித்துள்ளது.

காஞ்சனா இந்தி ரீமேக்

இயக்குநர் ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் பாலிவுட்டில் அக்‌ஷய் குமார், கியாரா அத்வானி நடிப்பில் வெளியான லக்‌ஷ்மி படம் கூகுள் தேடலில் இந்த ஆண்டு 6ம் இடத்தை பிடித்துள்ளது. தீபாவளிக்கு வெளியான இந்த படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்த நிலையில், படம் வெளியானதும் விமர்சன ரீதியாக மிக மோசமான படம் என அறிவிக்கப்பட்டு பாக்ஸ் ஆஃபிஸ் கலெக்‌ஷனையும் பறிகொடுத்தது.

கஞ்சன் சக்சேனா

கார்கில் போரை மையமாக வைத்து உருவான கஞ்சன் சக்சேனா படம் 2020ல் கூகுளில் அதிகம் தேடப்பட்ட திரைப்படங்கள் பட்டியலில் 5வது இடத்தை பிடித்துள்ளது. கரண் ஜோஹர் தயாரிப்பில் சரண் சர்மா இயக்கத்தில் நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் நடிப்பில் இந்த படம் உருவானது குறிப்பிடத்தக்கது.

சகுந்தலாதேவி

நடிகை வித்யாபாலன் நடிப்பில் ஒடிடி தளத்தில் வெளியான ஹியூமன் கம்ப்யூட்டர் சகுந்தலாதேவியின் பயோபிக் திரைப்படத்தை கூகுளில் ஏராளமானோர் தேடி உள்ளனர். அமேசான் பிரைமில் வெளியான இந்த படத்தை அனு மேனன் இயக்கி இருந்தார். சகுந்தலாதேவியாக வித்யாபாலன் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டுக்களை அள்ளினார்.

தன்ஹாஜி

இயக்குநர் ஓம் ராவத் இயக்கத்தில் அஜய் தேவ்கன், சைஃப் அலி கான், கஜோல், நேகா சர்மா உள்ளிட்டோர் நடித்திருந்த சுதந்திர போராட்ட வீரர் தன்ஹாஜி படம் கூகுளில் அதிகம் தேடப்பட்டோர் பட்டியலில் 3வது இடத்தை பிடித்துள்ளது. இயக்குநர் ஓம் ராவத் அடுத்ததாக பிரபாஸை வைத்து ஆதிபுருஷ் படத்தை இயக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

சூரரைப் போற்று

இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் அமேசான் பிரைமில் வெளியான சூரரைப் போற்று திரைப்படம் இந்தியளவில் அதிகம் தேடப்பட்ட படங்களின் பட்டியலில் 2வது இடத்தை பிடித்துள்ளது. இந்த ஆண்டு ஒடிடியில் அதிகம் பார்க்கப்பட்ட படத்திலும் சூர்யாவின் சூரரைப் போற்று படத்துக்கு மிகப்பெரிய இடம் கிடைத்துள்ளது. தென்னிந்திய படங்களிலேயே தமிழ்ப்படமான சூரரைப் போற்று படத்திற்குத் தான் இந்த அங்கீகாரம் கிடைத்துள்ளது.

சுஷாந்தின் தில் பெச்சாரா

இளம் பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மறைவு எதிரொலியாக அவரது நடிப்பில் வெளியான கடைசி படமான தில் பெச்சாரா படத்தை தான் கூகுளில் இந்த ஆண்டு கோடிக்கணக்கான ரசிகர்கள் தேடி உள்ளனர். டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியான இந்த படத்தை அதிகமானோர் பார்த்ததும் குறிப்பிடத்தக்கது.

Recent posts

அடிமை எண்ணத்திற்கும் ஆதிக்க வர்க்கத்தினரை எதிர்த்தும் நடத்தப்படும் போர்

Captain Miller கேப்டன் மில்லர் நடிகர்கள்: தனுஷ், சிவ ராஜ்குமார் பிரியங்கா மோகன் இசை: ஜி.வி. பிரகாஷ் குமார் இயக்கம்: அருண் மாதேஸ்வரன் கேப்டன் மில்லர் டிரெய்லரில்...
Thamil Paarvai

பூமியை பேராசை பிடித்த மனிதனிடம் இருந்து காப்பாற்ற போராடும் ஏலியன்!

அயலான் விமர்சனம்.. பூமியை பேராசை பிடித்த மனிதனிடம் இருந்து காப்பாற்ற போராடும் ஏலியன்! நடிகர்கள்: சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங், யோகி பாபு இசை: ஏ.ஆர். ரஹ்மான்...
Thamil Paarvai

Mission Chapter/ மிஷன் சாப்டர் 1

நடிகர்கள்: அருண் விஜய், எமி ஜாக்சன், நிமிஷா சஜயன் இசை: ஜி.வி. பிரகாஷ் குமார் இயக்கம்: ஏ.எல். விஜய் ஏ.எல். விஜய் இயக்கத்தில் அருண் விஜய், எமி...
Thamil Paarvai

Merry Christmas/மெரி கிறிஸ்துமஸ்

Merry Christmas  மெரி கிறிஸ்துமஸ் நடிகர்கள்: விஜய் சேதுபதி, கத்ரீனா கைஃப், ராதிகா ஆப்தே இசை: ப்ரீத்தம் இயக்கம்: ஸ்ரீராம் ராகவன் அந்தாதுன் படத்தை இயக்கி ஒட்டுமொத்த...
Thamil Paarvai

மாஸ் காட்டியதா? இல்லையா?

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்திருக்கும் படம் ‘ஜெயிலர்’. பெரிய தயாரிப்பு நிறுவனம், எதிர்பார்ப்புகளை எகிற வைக்கிற இயக்குநர், இந்தியத் திரையுலகின் உச்ச...
Thamil Paarvai

பழைய கதை ஆனால் புதிய வடிவம். திருச்சிற்றம்பலம் திரை விமர்சனம்

உத்தமபுத்திரன் படத்தை இயக்கிய மித்ரன் ஆர். ஜவஹர் ஒரு நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் இயக்கியிருக்கும் படம்தான் திருச்சிற்றம்பலம். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தனுஷ், நித்யா மேனன்,...
Thamil Paarvai

விருமன்- திரை விமர்சனம்

2 டி என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் கார்த்தி, அதிதி ஷங்கர், பிரகாஷ்ராஜ், சூரி.உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி உள்ள இந்த படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா  இசையமைத்துள்ளார். தமிழ் சினிமாவில் உறவுகளின்...
Thamil Paarvai

அதை சரியாகச் செய் கடமையை செய் திரை விமர்சனம்

கணேஷ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் எஸ்ஜே சூர்யா, யாஷிகா ஆனந்த் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி உள்ள இந்த படத்திற்கு அருண் ராஜ் இசையமைத்துள்ளார். தமிழ் சினிமாவில் சொல்லப்படாத கதைகளை...
Thamil Paarvai

துக்ளக் தர்பார்

நடிகர் விஜய் சேதுபதி நடிகை ராஷி கண்ணா இயக்குனர் டெல்லி பிரசாத் தீனதயாளன் இசை கோவிந்த் வசந்தா ஓளிப்பதிவு மனோஜ் பரமஹம்சா சிறுவயதில் தாய், தந்தையை இழந்த...
Thamil Paarvai

Leave a Comment