2020-ஆம் ஆண்டு தமிழ் திரையுலகில் மட்டும் பல தமிழ் திரைப்படங்கள் வெளியாகியுள்ளன. இதில் அறிமுக நடிகர்களின் திரைப்படங்களும், சிறு பட்ஜெட் திரைப்படங்களும் இந்த பட்டியலுக்குள் அடங்கும். தமிழில் முன்னணி நடிகர்கள் நடிப்பில் வெளியான திரைப்படங்கள் பெரும்பாலும் ரசிகர்கள் மத்தியில் அறியப்பட்டிருந்தாலும், சிறு பட்ஜெட் திரைப்படங்களும் அதிக படங்கள் வெளியாகியுள்ளது. இந்த தொகுப்பில் 2020-ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்களின் கவனம் பெறுவது முதல் விமர்சனம், வசூல் என அனைத்திலும் சிறந்தோங்கி விளக்கியுள்ள திரைப்படங்கள், பாக்ஸ் ஆபீஸ்க்கு சென்ற திரைப்படங்கள் என 2020-ஆம் ஆண்டில் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட சிறந்த தமிழ் திரைப்படங்கள் இந்த தொகுப்பில் பட்டியலிடப்பட்டுள்ளன.
- தர்பார்

2020-ஆம் ஆண்டின் பொங்கல் பண்டிகைக்கு வெளியான இப்படம், சில சர்ச்சையான விமர்சனங்கள் ஏற்படுத்தியிருந்தாலும் இறுதியில் அதிக வசூல் சாதனையில் பிளாக்பஸ்டர் திரைப்படமாக புகழ் பெற்றுள்ளது. இப்படம் குடும்பம் மற்றும் அதிரடி படமாக வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது.வெளியீட்டு தேதி : 09 Jan 2020. நடிகர்கள் : ரஜினிகாந்த்,நயன்தாரா.
2.பட்டாஸ்

விமர்சன ரீதியாக தோல்வியை சந்தித்தாலும் வர்த்தக ரீதியாக பெரும் வரவேற்பினை பெற்று வசூல் சாதனை படைத்து வெற்றி பெற்றுள்ளது. மிகவும் எதார்த்தமான திரைக்கதையில் ரசிகர்கள் எளிதில் கணிக்கப்படக்கூடிய திரைக்கதையில் இப்படம் உருவாகினாலும் வசூல் சாதனை படைத்துள்ளது.வெளியீட்டு தேதி : 15 Jan 2020.நடிகர்கள் : தனுஷ்,மெஹ்ரீன் பிர்சடா
3.ஓ மை கடவுளே

எதார்த்தமான திரைக்கதை மற்றும் வலுவான கதைக்கருவில் நகைச்சுவை மற்றும் குடும்ப படமாக இப்படம் வெளியாகி பல ரசிகர்களை கவர்ந்து பிரபலமாகியுள்ளது.வெளியீட்டு தேதி : 14 Feb 2020 . நடிகர்கள் : அசோக் செல்வன்,ரித்திகா சிங்
4.பாரம்

2019-ஆம் ஆண்டின் தேசிய விருது பெற்ற திரைப்படம். பல திரைப்படங்கள் வெளியாகி வசூல் சாதனை படைத்த நிலையில் சிறந்த திரைக்கதைக்காக இப்படம் தேசிய விருது வென்று சாதனை படைத்துள்ளது.வெளியீட்டு தேதி : 21 Feb 2020.நடிகர்கள் : ஆர் ராஜு,ஸ்டெல்லா கோபி
5. திரௌபதி

“ஃகிரௌட் ஃபண்டிங்” என்னும் தயாரிப்பில் பல பிரபலங்கள் சேர்ந்து தயாரித்துள்ள இப்படம், விமர்சனம் ரீதியாக பல சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. இப்படம் பல தடைகளை கடந்து வெளியாகி தமிழ் திரையுலகில் ஒரு வெற்றி திரைப்படமாக புகழ் பெற்றுள்ளது.வெளியீட்டு தேதி : 28 Feb 2020. நடிகர்கள் : ரிச்சர்ட் ரிஷி,ஷீலா
6.கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்.

எதிர்பாராத பல திருப்பங்களை கொண்டுள்ள திரைக்கதையில் இப்படம் வெளியாகி இளைஞர்களால் கொண்டாடப்பட்டு நல்ல விமர்சனங்கள் மூலம் புகழ் பெற்றுள்ள திரைப்படமாகும். இப்படம் திரையரங்களுக்கு பின்னர் ஆன்லைன் ஓ.டி.டி பக்கத்தில் திரையிடப்பட்டு புகழ் பெற்றுள்ளது.வெளியீட்டு தேதி 28 Feb 2020.நடிகர்கள் : துல்கர் சல்மான்,ரித்து வர்மா
7. தாராள பிரபு

ஹிந்தி திரைப்படமான “விக்கி டோனர்” என்ற திரைப்படத்தின் தமிழ் ரீமேக் படமாக இப்படம் வெளியாகி பிரபலமானது. இப்படம் திரையில் வெளியிடப்பட்ட சில நாட்களிலையே திரையரங்குகள் மூடப்பட்ட நிலையில் இணையதள ஆன்லைன் ஓ.டி.டி யில் இப்படம் வெளியாகி பல ரசிகர்களை கவர்ந்து புகழ் பெற்றுள்ளது.வெளியீட்டு தேதி : 13 Mar 2020.நடிகர்கள் : ஹரிஷ் கல்யான்,தன்யா ஹோப்
8. பொன்மகள் வந்தாள்.

தியேட்டர் மூடப்பட்ட நிலையில் நேரடியாக பல எதிர்ப்புகளை தாண்டி ஓடிடியில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை கவர்ந்து பிரபலமான திரைப்படம். வசூல் மற்றும் விமர்சனம் ரீதியாக இப்படம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.வெளியீட்டு தேதி : 29 May 2020.நடிகர்கள் : ஜோதிகா,கே பாக்யராஜ்.
9.க/பெ. ரணசிங்கம்

ஆன்லைன் ஓடிடியில் வெளியான திரைப்படங்களில் நல்ல விமர்சனங்கள் பெற்று ரசிகர்களால் கொண்டாடப்பட்ட திரைப்படம். தனக்கென ஒரு அங்கீகாரத்தினை பெற்று பிரபலமான இப்படம், சிறந்த திரைக்கதை மற்றும் அழுத்தமான வசனங்களால் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது.வெளியீட்டு தேதி : 02 Oct 2020.நடிகர்கள் : விஜய் சேதுபதி,ஐஸ்வர்யா ராஜேஷ்.
10.சூரரைப் போற்று.

சூர்யா நடிப்பில் உருவான ஏர் டெக்கான் நிறுவன அதிபரின் வாழ்க்கை வரலாற்று திரைப்படம். தியேட்டர் உரிமையாளர்களின் எதிர்ப்பை மீறி ஓடிடியில் வெளியான, இத்திரைப்படம் பல ரசிகர்களால் காணப்பட்டு உலகளவில் பிரபலமாகி புகழ் பெற்றுள்ளது.வெளியீட்டு தேதி : 12 Nov 2020 நடிகர்கள் : சூர்யா சிவகுமார்,அபர்ணா பாலமுரளி.
11. மூக்குத்தி அம்மன்

2020-ஆம் ஆண்டின் தீபாவளி பண்டிகைக்கு டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் இப்படம் வெளியாகி, கோடிக்கணக்கான தமிழ் ரசிகர்களால் காணப்பட்டு மாபெரும் வெற்றி பெற்றுள்ள திரைப்படம். திரைக்கதை மற்றும் விமர்சனங்களில் இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.வெளியீட்டு தேதி : 14 Nov 2020.நடிகர்கள் : நயன்தாரா,ஆர் ஜே பாலாஜி