Featured Uncategorized உலகம் கிரிக்கெட் செய்திகள் புதிய செய்திகள் விளையாட்டு

2023 உலகக்கோப்பை இறுதி போட்டியில் இந்திய அணி தோல்வி சோக கடலில் ரசிகர்கள்

ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 2023 உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா தோல்வி அடையக் காரணமே இந்திய அணிக்கு எதிராக போன ஒரு முடிவு தான். இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதிய உலகக்கோப்பை இறுதிப் போட்டி அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்றது.

இந்த மைதானத்தில் இரண்டாவது ஆடும் அணியே வெற்றி பெறும் என கூறப்பட்டது. இந்த உலகக்கோப்பை தொடரிலும் இதற்கு முன் நடந்த நான்கு போட்டிகளில் மூன்று முறை சேஸிங் செய்த அணியே வெற்றி பெற்றுள்ளது. இந்திய அணி, பாகிஸ்தான் அணிக்கு எதிராக இதே மைதானத்தில் ஆடிய போதும், இந்தியா சேஸிங் செய்தே வென்று இருந்தது.

இந்த நிலையில், இறுதிப் போட்டியில் துரதிர்ஷ்டவசமாக ஆஸ்திரேலிய அணி கேப்டன் பாட் கம்மின்ஸ் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தார். அதனால், இந்தியா முதலில் பேட்டிங் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இந்திய அணி முதலில் பேட்டிங் செய்த போது பேட்டிங் செய்யவே ஆடுகளம் கடினமாக இருந்தது. ஆனால், இரண்டாவதாக ஆஸ்திரேலியா பேட்டிங் செய்த போது ஓரளவு பவுண்டரி அடிக்க சாதகமாக சூழ்நிலைகள் மாறின. காற்றில் ஈரப்பதம் அதிகமாக இருந்தது இதற்கு ஒரு முக்கிய காரணம் என கூறப்படுகிறது.

இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து போராடி 240 ரன்கள் வரையே எடுத்தது. இந்தியா 270 – 280 ரன்கள் எடுத்து இருந்தால் இந்தப் போட்டியில் வெற்றி பெற்று இருக்க அதிக வாய்ப்பு இருந்தது. ஆனால், அது நடக்கவில்லை.

DUBAI, UNITED ARAB EMIRATES – NOVEMBER 14: Aaron Finch and Glen Maxwell of Australia applaud the crowd following the ICC Men’s T20 World Cup final match between New Zealand and Australia at Dubai International Stadium on November 14, 2021 in Dubai, United Arab Emirates. (Photo by Matthew Lewis-ICC/ICC via Getty Images)

இந்தியாவின் விராட் கோலி, கே எல் ராகுல் எப்படி டெஸ்ட் போட்டி போல ஆடினார்களோ, அதே போலவே, ஆஸ்திரேலியாவின் மார்னஸ் லாபுஷேன் டெஸ்ட் போட்டி போல 50 ஸ்ட்ரைக் ரேட்டில் பேட்டிங் செய்தார். மறுபுறம் ட்ராவிஸ் ஹெட் அவ்வப்போது பவுண்டரி அடித்து இந்திய அணியிடம் இருந்து போட்டியை பறித்துச் சென்றார்.

ஜாம்பவான்கள் லிஸ்டில் இடம் ஆஸ்திரேலியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஹெட் 137 ரன்கள் குவித்தார். நிதான ஆட்டம் ஆடிய லாபுஷேன் 58 ரன்கள் குவித்தார். ஒருவேளை இந்தியா டாஸ் வென்று இருந்தால் முதலில் பந்து வீசி இருக்கும். அப்போது இதே சம்பவங்கள் இந்தியாவிற்கு நடந்து இந்தியா வெற்றி பெற்று இருக்கும்.

Recent posts

0x1c8c5b6a

0x1c8c5b6a
admin

10 ஆவது நாடாளுமன்றத்தில் இடம்பெறவுள்ள தமிழ் எம்.பிக்கள்

பொதுத்தேர்தலில் மக்கள் ஆணை மூலம் 25 தமிழ் எம்.பிக்கள் தெரிவாகி இருந்தனர்.இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு கிடைக்கப்பெற்ற தேசியப் பட்டியல் ஆசனம் ஊடாக வைத்தியர் ப. சத்தியலிங்கமும் தேசிய...
Thamil Paarvai

ஜனாதிபதி அனுரகுமார தலைமையிலான புதிய அமைச்சரவை இன்று பதவியேற்பு

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் ஆட்சியின் புதிய அமைச்சரவை சற்று முன்னர் அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய நிதி, பாதுகாப்பு மற்றும் டிஜிட்டல் அமைச்சுக்களை சமகால ஜனாதிபதி அநுகுமார திசாநாயக்க தன்வசம்...
Thamil Paarvai

தமிழரசு கட்சி சஜித்துக்கு ஆதரவு வழங்கும் தீர்மானத்தில் எனக்கு உடன்பாடு இல்லை..

தமிழரசு கட்சியின் மத்திய  சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு வழங்குவதாக எடுத்த முடிவு எனக்கு உடன்பாடு இல்லை என தமிழரசு கட்சியின் கொழும்பு கிளை தலைவரும் மத்திய குழு...
Thamil Paarvai

தமிழ்ப் பொதுவேட்பாளர் தமிழரசுக்கட்சிக்கு உதவி

இன்று வவுனியாவில் தமிழரசுக்கட்சியின் மத்திய குழுக்கூட்டம் நடப்பதாக அறிவிக்கப் பட்டிருந்தது. ஆனால் இன்று நடந்த கூட்டத்தில் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா கலந்து கொள்ளவில்லை. அதன் முக்கிய...
Thamil Paarvai

பிரேஸிலின் வோபாஸ் விமான சேவைக்கு சொந்தமான விமானம் சாவோ போலா நகரில் விழுந்து விபத்து ஏற்பட்டதில் 62 பேர் உயிரிழந்தனர்.

இரட்டை எஞ்சின் கொண்ட அந்த விமானம் தெற்கு மாநிலமான பரானாவில் உள்ள காஸ்கேவலில் இருந்து சாவோ பாலோ நகரிலுள்ள குவாருல்ஹோஸ் விமான நிலையத்திற்குப் பறந்து கொண்டிருந்தபோது, ​​வின்ஹெடோ...
Thamil Paarvai

138 ரன்னில் சுருண்ட இந்தியா: 27 ஆண்டுக்கு பிறகு தொடரை வென்ற இலங்கை

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி தற்போது 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி டையில்...
Thamil Paarvai

இலங்கைக்கு 3 வது இடம்

2024 பாரிஸ் ஒலிம்பிக் தொடக்க விழாவிற்கான 11 சிறந்த கலாச்சார ஆடைகள் பெயரிடப்பட்டுள்ளன. அவற்றுள் இலங்கையின் கலாசாரத்தை வெளிக்காட்டி உருவாக்கப்பட்ட ஆடையானது மூன்றாம் இடத்தைப் பெற முடிந்துள்ளது....
Thamil Paarvai

பென்சில்வேனியாவில் நடந்த பிரசார கூட்டத்தில் டிரம்ப் காதில் காயத்துடன் தப்பினார்.

பென்சில்வேனியாவில் நடந்த பிரசார கூட்டத்தில் டிரம்ப், பேசிக் கொண்டு இருந்த போது மர்ம நபர் திடீரென துப்பாக்கியால் சுட்டார். இதில் டிரம்ப் காதில் காயத்துடன் தப்பினார். மருத்துவமனையில்...
Thamil Paarvai

Leave a Comment