சிறுகதை சிறுவர் பக்கம் பஞ்ச தந்திரம்

பறக்கும் குதிரை

பெர்ஷியாவின் சுல்தான் என்பவர் விந்தையான பொருள்களைக் கண்டால், அதை அடைய விரும்புவார். ஒருநாள் ஓர் இளவரசன் மாயக் குதிரை ஒன்றில் ஏறி அரண்மனை உப்பரிகை மேல் பறந்து கொண்டிருந்தான்.

இந்த அற்புதமான குதிரையின் விலை என்ன? என்று கேட்டார் சுல்தான். அந்த இளவரசன், இளவரசியைக் கை பிடிப்பது! என்று கூறினான்.

சுல்தானும் ஒத்துக்கொண்டார். ஆனால், என்னுடைய மகன் முதலில் இந்தக் குதிரை மீது அமர்ந்து பறப்பதை நான் பார்க்க விரும்புகிறேன்! என்று சுல்தான் கூறினார்.

சுல்தானின் மகன் குதிரை மீது அமர்ந்ததும் அது பறந்து எல்லாருடைய பார்வையிலிருந்தும் மறைந்து விட்டது.

சுல்தானின் மகன் திரும்பி வராததால் சுல்தானும், அமைச்சர்களும் கவலை கொண்டனர். அவர்கள் இளவரசனைக் குற்றம் சாட்டிச் சிறையில் அடைத்தனர்.

சுல்தானின் மகன் காற்றில் பறந்து கொண்டே இருந்தான். அவனால் அந்த மாய குதிரையைக் கட்டுப்படுத்த இயலவில்லை. பல நாட்களுக்கு பிறகு அவன் வந்தான். அரண்மனையில் எல்லாரும் மகிழ்ச்சியடைந்தனர்.

அவன் திரும்பி வந்ததால் அந்த இளவரசனை விடுவித்தனர். ஆனால், அந்த இளவரசனை அவர்கள் அவமானப்படுத்திவிட்டதால், அவர்களை பழிவாங்க வேண்டும் எனச் சபதமிட்டான்.

சுல்தானின் அரண்மனையில் இளவரசிக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இளவரசியைக் குணப்படுத்துபவர்களுக்குச் சிறந்த வெகுமதி அளிக்கப்படும் என்று சுல்தான் கூறினார். இளவரசன் மருத்துவன் போன்று மாறுவேடமணிந்து சுல்தானின் அரண்மனைக்கு சென்றான்.

முதலில் மந்திரக் குதிரையையும், இளவரசியையும் என்னிடம் அழைத்து வாருங்கள்! எனக் கூறினான்.

மந்திரக் குதிரையும், இளவரசியும் வந்த பின்பு தன் மந்திரசக்தியைப் பயன்படுத்தி, இளவரசியைக் குணப்படுத்தி தன்னுடைய மாயக்குதிரை மீது அமர்த்திக் கொண்டு பறந்து சென்று விட்டான்.

யாராலும் எதுவும் செய்ய முடியவில்லை. அவனது சொந்தமான பொருளை அவனே அடைந்து கொண்டான்.

நீதி : நமது சொந்த பொருளை யாருக்கும் விட்டுக்கொடுக்கத் தேவையில்லை.

Recent posts

வார்த்தைகளை புத்திசாலித்தனமாகத் தேர்ந்தெடுங்கள்

ஒரு காலத்தில் முதியவர் ஒருவர் தனது அண்டை வீட்டுக்காரரை திருடன் என்று வதந்தியை பரப்பினார். இதன் விளைவாக அந்த இளைஞர் கைது செய்யப்பட்டார். நாட்கள் ஓடின, இளைஞனும்...
Thamil Paarvai

மூன்று வகையான மக்கள்

ஆசிரியர் மாணவர்களிடம் மூன்று பொம்மைகளை காட்டி, அதில் உள்ள வேறுபாடுகளை மாணவ்ரகளை கண்டுபிடிக்கும்படி கேட்டார். மூன்று பொம்மைகளும் ஒரே மாதிரி வடிவம், அளவை கொண்டது. மிகுந்த கவனிப்புக்குப்...
Thamil Paarvai

ஓநாய்.. ஓநாய்..

ஒரு கிராமத்தில், ஆடு மேய்க்கும் சிறுவன் ஒருவன் வாழ்ந்து வந்தான். ஒருமுறை அவன் ஆடு மேய்த்து கொண்டிருந்த போது, கிராமவாசிகளுக்கு விளையாட்டு காட்ட நினைத்தான். உடனே “ஓநாய்.....
Thamil Paarvai

முட்டாள்தனமான நாரை

ஒரு நாள் நாரை மிகுந்த பசியுடன் இருந்தது, அதற்கான உணவைத் தேடி கூட்டிலிருந்து வெளியே வந்தது. நாரை, மீன் பிடிக்க ஆற்றங்கரைக்கு சென்று மீனுக்காக காத்துக்கொண்டிருந்தது. நாரை...
Thamil Paarvai

ஆழம் தெரியாமல் காலை விடாதே

ஒரு நரி கிணற்றின் பக்கமாக நடந்து சென்றது. அப்போது எதிர்பாராத விதமாக அது கிணற்றினுள் விழுந்தது. அது தன்னால் முடிந்த வரை வெளியே வர முயற்சித்தது, அதனால்...
Thamil Paarvai

தவறு யாருடையது?

எலியும், தவளையும் நண்பர்களாக இருந்தனர். ஒவ்வொரு காலையிலும் தவளை தன் குளத்தில் இருந்து வெளியேறி தனது நண்பனை சந்திக்கச் செல்லும். எலி அதற்கும் நீச்சல் கற்றுக்கொடுக்க தவளையிடம்...
Thamil Paarvai

மூன்றாவது மீனுக்கு என்ன ஆச்சு?

ஒரு கிராமத்தில் உள்ள குளத்தில் மூன்று மீன்கள் மிகவும் நெருங்கிய நண்பர்களாக இருந்தன. ஒரு நாள், அந்த குளத்தின் வழியாக சென்ற சில மீனவர்கள், அங்கே நிறைய...
Thamil Paarvai

மறைக்கப்பட்ட புதையல்

ஒரு விவசாயிக்கு ஐந்து மகன்கள் இருந்தனர். அவர்கள் அனைவரும் சோம்பேறிகளாக இருந்தனர். அவர்களை கடுமையாக உழைக்கும் இளைஞர்களாகப் பார்க்க அந்த விவசாயி விரும்பினார். அவர்களின் எதிர்காலத்தைப் பற்றி...
Thamil Paarvai

பேராசை கொள்ளாதீர்கள்

ஒருமுறை ஒரு நாய் மிகவும் பசியாக இருந்தது. அது எல்லா இடங்களிலும் உணவுக்காக அலைந்தது, கடைசியில் ஒரு எலும்பு துண்டை கண்டது. அது தன் வாயில் எலும்பு...
Thamil Paarvai

Leave a Comment