சிறுகதை மொழி இலக்கியம்

மனித ஊனம்

ராமு தன் மனைவி செல்விக்கு பிரசவ வலி ஏற்பட்டதால் மருத்துவமனையில் சேர்க்கிறான் இது மூன்றாவது பிரசவம்.ஏற்கனவே இரு பெண்பிள்ளைகள் உள்ளனர். பெரிய மகள் புவனாவிற்கு பத்து வயதாகிறது.சிறிய மகள் சந்தியாவிற்கு ஐந்து வயதாகிறது. மூன்றாவதாக மகன் பிறக்கவேண்டும் என்று ஆசைப்படுகிறான் ராமு. மருத்துவமனை வெளியே காத்திருந்த ராமை அழைத்து உங்களுககு பெண் குழந்தை பிறந்துள்ளது என்று செவிலியர் கூறுகிறார்.ராமு வருத்தமாக மனைவியை பார்க்க உள்ளே செல்கிறான் .செல்வியின் கண்கள் கலங்கியிருந்தன.ராமு தன் மனைவியிடம் வருத்தத்தை வெளிப்படுத்தாமல் சிரித்துக்கொண்டே குழந்தையைப் பார்க்கிறான். மிகவும் அழகாக இருந்தாள் பெண் குழந்தை.மூன்று நாள் கழிதது வீட்டிற்கு அழைத்துப்போனான்.தன் தங்கையைப் பார்த்து புவனா,சந்தியா இருவரும் மகிழ்ந்தனர்.செல்வியின் தாய் ஊரிலிருந்து வந்து மகளையும்,பேத்தியையும் கவனித்துக்கொண்டாள்.ராமு பணிக்குச் சென்றான். பதினோராம் நாள் பெயர்ச் சூட்டுவிழா நடத்தி அருந்ததி என்று பெயர் வைத்தார்கள்.ராமுவிற்கு எதிர்காலம் நினைத்து வருந்தினான் மகள்களை எப்படி வளர்த்து ஆளாக்குவது வேலையும் நிரந்தரமில்லை என்று கலங்கினான். அவனது மனைவி செல்வி அவனிடம் எப்படியாவது தன் மகள்களை நன்றாக படிக்கவைக்க வேண்டுமென கூறுகிறாள். நாட்கள் செல்கிறது.ஒரு நாள் அருந்ததிக்கு காய்ச்சல் வருகிறது.மருத்துவரிடம் செல்கிறாள் செல்வி அருந்ததியைப் பரிசோதித்த மருத்துவர் தடுப்பூசியெல்லாம் போட்டீர்களா என்று கேட்டார்.செல்வி தடுப்பூசி அட்டவணை அட்டையைப் எடுத்து பார்க்கிறாள் போலியோ ஊசி போடவில்லை என்று கூறினாள். போலியோ பற்றி விழிப்புணர்வு இல்லாத காலம் அது.மருத்துவர் இரத்தப்பரிசோதனை செய்ய வேண்டுமென கூறுகிறார்.இரத்த மாதிரியை பரிசோதித்த மருத்துவர் அருந்ததிக்கு போலியோ அட்டாக் ஆகியிருப்பதை பெற்றோரிடம் தெரிவிக்கிறார்.செல்வியும் ,ராமுவும் கதறி அழுகின்றனர். தம்முடைய அஜாக்கிரதையால் தன் குழந்தையின் இரு கால்களும் செயலிழந்து விட்டதே என்று வருந்தினர். ராமுவின் நண்பர்கள் அவனுக்கு ஆறுதல் கூறினர்.நம்பிக்கை இழக்கமால் மகள்களை நன்றாக படிக்கவைத்தான்.அருந்ததி நன்றாக படித்தாள்.அவள் வகுப்பில் முதல் மதிப்பெண் எடுத்தாள்.ராமு அவளுக்கு ஊக்கப்படுத்தி படிக்க வைத்தான்.புவனாவும்,சந்தியாவும் பட்டப்படிப்பு முடித்து வங்கி வேலைக்குச் சென்றனர்.மூன்று வருடம் கழித்து புவனாவிற்கு திருமணம் நடத்தினான் ராமு. சந்தியாவின் வருமானத்தில் அருந்தியைப் பட்டப் படிப்பு படிக்கவைத்தான். சந்தியாவுக்கு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்தார்கள்.அருந்ததியின் தோழிகள் அனைவரும் சேர்ந்து அவளுக்கு மோட்டார் வண்டி வாங்கிக் கொடுத்தனர். அந்த வண்டியில் கல்லூரிச் செல்வாள் . இறுதி தேர்வில் கல்லூரியிலேயே முதல் மதிப்பெண் எடுத்து தேர்ச்சியானாள். கல்லூரியில் நடந்த வேலைவாய்ப்பு முகாமில் பிரபல கம்பெனியில் பணிபுரிய தேர்ந்தெடுக்கப்பட்டாள். ராமுவும்,செல்வியும் மிகவும் மகிழ்ந்தனர். ஆறுமாதம் கழித்து சந்தியாவுக்கு திருமணம் முடிந்தது.அருந்ததிக்கு வருமானம் கூடியது.ராமுவுக்கு வயதானதால் சரியாக பணிக்கு செல்ல முடியவில்லை.அருந்ததியின் வருமானத்தில் குடும்பத்தை நடத்தினாள் செல்வி.அருந்ததியின் அலுவலகத்தில் பணிபுரியும் ஒரு கால் சற்று ஊனமுற்ற சுரேஷ் அவளை விரும்புவதாக கூறினான்.அவளுக்கு தயக்கமாக இருந்தது.இரு கால்களும் செயலிழந்த என்னை உங்கள் வீட்டில் ஏற்பார்களா எனக் கேட்டாள். நான் என் பெற்றோரிடம் எப்படியாவது சம்மதம் வாங்குகிறேன் என்றான்.அருந்ததி தன் பெற்றோரிடம் சுரேஷ் தன்னை விரும்புவதைக் கூறினாள்.ராமுவும்,செல்வியும் அச்சமுற்றனர். பிறகு ஒருநாள் சுரேஷ் தன் பெற்றோருடன் வந்தான்.அருந்தியின் கால் ஊனத்தைப் பார்த்தவுடன் சுரேஷின் தந்தை திருமணத்திற்கு ஒப்புக்கொள்ள மனமில்லை. சுரேஷின் தாய் தன் மகனுக்கும் உள்ள ஒரு கால் ஊனத்தை எடுத்துரைத்தாள். அவரும் ஒப்புக்கொண்டார்.தாம்பூலம் மாற்றிக்கொண்டனர். ஆறு மாதம் கழித்து திருமணம் வைத்துக்கொள்ளலாம் எனப் பேசி முடிவெடுத்தனர்.இரண்டு மாதம் கழிந்தது.அருந்ததி மோட்டார் வண்டியில் அலுவலகம் செல்லும் போது எதிரே வந்த பேருந்து மோதி விபத்து நடக்கிறது. அருந்ததியின் கால்களில் அடிப்பட்டு இரத்தம் வருகிறது.அங்கிருந்தவர்கள் அவளை மருத்துவமனைக்கு தூக்கிச் செல்கின்றனர்.பெற்றோருக்கு தகவல் வந்ததும் அலறி அடித்து ஓடினர்.மருத்துவர் உடனே அறுவைச்சிகிச்சை செய்யவேண்டுமெனக் கூறுகிறார்.ராமுவால் தாங்கமுடியவில்லை.சுரேஷ் அருந்ததிக்கு நடந்த விபத்தால் நொறுங்கிப்போனான். தன் பெற்றோரிடம் தெரிவிக்கவில்லை.அறுவைச்சிகிச்சை முடிந்து வீடு திரும்பினாள் அருந்ததி. செல்வி அவளைப் பார்த்து அழுதவண்ணம் இருந்தாள்.சுரேஷ் ஆறுதல் கூறினான் .திடிரென்று ஒருநாள் சுரேஷின் பெற்றோர் அருந்ததி வீட்டிற்கு வருகிறார்கள் அவள் கால்களில் உள்ள கட்டைப் பாராத்தும் அதிர்ச்சியாக என்ன நடந்தது என்கிறார்கள்.செல்வி அழுதுக்கொண்டே நடந்ததைக் கூறுகிறாள்.சுரேஷின் பெற்றோர்கள் தங்களிடம் ஏன் மறைத்தீர்கள் எனக் கேட்டுவிட்டு கோபத்துடன் சென்று விட்டனர். சுரேஷ் எவ்வளவு எடுத்துச்சொல்லியும் கேட்பதாக இல்லை. திருமணத்தை நிறுத்த வேண்டுமெனக் கூறுகிறார்.மகன் கேட்பதாக இல்லை. மனமுடைந்த தந்தை விஷமருந்ததுகிறார் காப்பாற்ற முடியவில்லை. சுரேஷின் தாய் கதறுகிறார்.சுரேஷும் அம்மாவிடம் மன்னிப்பு கேட்கிறான். நான் பார்க்கும் பெண்ணைத்தான் திருமணம் செய்யவேண்டுமெனவும் இல்லாவிடில் நானும் இறந்துவிடுவேன் என்கிறாள். சரி என்று ஒப்புக்கொள்கிறான் சுரேஷ்.தாய் பார்த்த பெண்ணையே மணமுடிக்கிறான். இதைப் பற்றி தெரியாத அருந்ததி சுரேஷை தொலைப்பேசியில் அழைக்கிறாள் அவன் தொலைப்பேசி எண் செயலிழந்ததாக தெரிகிறது.நண்பர்களை விசாரித்துப போது அவனுக்கு திருமணம் ஆகிவிட்டது தெரிகிறது. அவளும் ,பெற்றோரும் அதிர்ச்சியடைந்தனர்.அழுது அழுது ஓய்ந்தார்கள் புவனாவும்,சந்தியாவும் உடன் இருந்து ஆறுதல் கூறினர்.மனதைத் தேற்றிக்கொண்டாள் அருந்ததி இரண்டு மாத ஓய்வுக்குப் பிறகு அலுவலகம் சென்றாள்.வழக்கம் போல தன் பணியாற்றி தன் பெற்றோர்கள்க் கவனித்துக் கொள்கிறாள் அருந்ததி.

Recent posts

மனிதன் இன்னும் முழுமையாக அறியாத மர்ம உலகம்

பிரபஞ்சத்தின் மகத்துவத்தின் முன் மனித அறிவு ஓர் அணுவின் அளவே. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் வளர்ந்திருந்தாலும், இன்னும் மனிதன் முழுமையாக அறியாத மர்மங்கள் ஏராளம். இந்தக்...
Thamil Paarvai

அமேசானின் மருத்துவப் பொக்கிஷங்கள்

அமேசான் மழைக்காடு, உயிரியல் பன்முகத்தன்மையின் களஞ்சியமாக மட்டுமல்லாமல், பழங்குடி மருத்துவ அறிவின் விலைமதிப்பற்ற தொகுப்பையும் கொண்டுள்ளது. பாரம்பரிய மற்றும் நவீன அறிவியல் ஆய்வுகள் இணையும் இந்த எல்லையில்,...
Thamil Paarvai

அமேசான் மழைக்காடு: அறியாத மர்ம உலகம்

“பூமியின் நுரையீரல்” என்று அழைக்கப்படும் அமேசான் மழைக்காடு, நமது கிரகத்தின் மிக முக்கியமான மற்றும் மர்மமான பகுதிகளில் ஒன்றாகும். தென் அமெரிக்காவில், கிட்டத்தட்ட 5.5 மில்லியன் சதுர...
Thamil Paarvai

அமேசான் மழைக்காட்டின் தாவரங்கள், மரங்கள், பூச்சிகள், பறவைகள் மற்றும் பாலூட்டிகள்

அமேசான் மழைக்காடு உலகின் மிகப் பெரிய பல்லுயிர் பெருக்கம் கொண்ட சூழலமைப்பாகும். இங்கு கோடிக்கணக்கான உயிரினங்கள் வாழ்கின்றன. இந்தக் கட்டுரையில், அமேசானின் மிக முக்கியமான மற்றும் ஆச்சரியமான...
Thamil Paarvai

காலம் மாறலாம்… மனிதர்கள் மாறுவதில்லை!

யாழ்ப்பாணத்தின் வடக்கே, கிளிநொச்சியை நோக்கிச் செல்லும் பாதையில், “வன்னிப் பூமி” என்று அழைக்கப்படும் ஒரு சிறிய கிராமம் இருந்தது. அதன் பெயர் ‘முள்ளியவளை’. இந்த ஊரின் மண்ணுக்கும்,...
Thamil Paarvai

தமிழ் நாகரிகத்தின் அழியாச் சின்னம்

சங்கு வெறும் கடல்வாழ் உயிரினத்தின் ஓடு மட்டும் அல்ல; அது தமிழ் அடையாளங்களில் ஒன்று. இது ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக தமிழர் கலாசாரம், மொழி, சமயம் மற்றும் அன்றாட...
Thamil Paarvai

ஒரு ஆழமான பயணம்

மனிதர்களுக்கு எப்போதும் மேலே வானத்தை விட கீழே பூமியின் உட்பகுதியில் ஒரு கட்டுக்கடங்காத ஆர்வம் உண்டு. ஆனால் பூமிக்குள் நாம் எவ்வளவு தூரம் செல்ல முடியும்? உண்மையில்,...
Thamil Paarvai

பிறப்பிற்கும் இறப்பிற்கும் இடைப்பட்ட மர்மப் பயணம்

“நான் யார்? எங்கிருந்து வந்தேன்? எங்கே போகிறேன்?” – இந்த மூன்று கேள்விகளுக்கும் இடையேயே மனித வாழ்க்கையின் முழு மர்மமும் அடங்கிக் கிடக்கிறது. பிறப்பு என்பது ஒரு...
Thamil Paarvai

வெற்றியைத் தாண்டிய வாழ்க்கையின் அர்த்தம்

“வெற்றி” – இந்த ஒற்றை வார்த்தைக்காக மனிதன் தன் முழு வாழ்க்கையையும் அர்ப்பணிக்கிறான். அதிகப் பணம், உயர்ந்த பதவி, பெரிய வீடு, விலையுயர்ந்த கார், புகழ், பட்டங்கள்...
Thamil Paarvai

Leave a Comment