சிறுகதை சிறுவர் பக்கம் பொதுவானவை

வார்த்தைகளை புத்திசாலித்தனமாகத் தேர்ந்தெடுங்கள்

ஒரு காலத்தில் முதியவர் ஒருவர் தனது அண்டை வீட்டுக்காரரை திருடன் என்று வதந்தியை பரப்பினார். இதன் விளைவாக அந்த இளைஞர் கைது செய்யப்பட்டார். நாட்கள் ஓடின, இளைஞனும் நிரபராதி என்று நிரூபிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டார். இளைஞர் விடிவிக்கப்பட்டு வீட்டிற்கு சென்ற போது மிகவும் அவமானமாக உணர்ந்தார். தன் மீது தவறாக குற்றம் சாட்டியதற்காக முதியவர் மீது வழக்கு தொடர்ந்தார்.

வழக்கு நீதிமன்றத்தில் தீர்ப்புக்கு வந்தது. நீதிமன்றத்தில் முதியவர் நீதிபதியிடம் “அவை அனைத்துமே கருத்துக்கள் தான், யார் மனதையும் புண்படுத்த அல்ல” என்று கூறினார். அதற்கு நீதிபதி முதியவரிடம், நீங்கள் அந்த இளைஞனை பற்றி என்ன கூறினீர்களோ அவை அனைத்தையுமே ஒரு துண்டு காகிதத்தில் எழுதுங்கள். துண்டுக் காகிதத்தைக் கிழித்து வீட்டிற்குச் செல்லும் வழியில் தனித்தனியாக எறிந்து விடுங்கள் என்று கூறிவிட்டு, நாளை மறுபடியும் தீர்ப்புக்காக வருமாறு உத்தரவிட்டார்.

அடுத்த நாள், நீதிபதி முதியவரிடம், “தீர்ப்பைப் பெறுவதற்கு முன்னர், நீங்கள் வெளியே சென்று எறிந்த அனைத்து துண்டு காகிதங்களையும் சேகரிக்க வேண்டும்.” என்று கூறினார், முதியவர், “என்னால் செய்ய முடியாது! காற்றில் அந்த துண்டு சீட்டுகள் பரவியிருக்கும் அவற்றை எங்கே கண்டுபிடிப்பது என்று எனக்கு தெரியாது” என்று முதியவர் பதிலளித்தார்.

நீதிபதி முதியவரிடம் “அதே போல தான் எளிய கருத்துக்கள் ஒரு மனிதனின் மரியாதையை சரிசெய்ய முடியாத அளவுக்கு அழிக்கக்கூடும்” என்று கூறினார். முதியவரும் தன்னுடைய தவறை உணர்ந்து அந்த இளைஞரிடம் மன்னிப்பு கேட்டார்.

நீதி : உண்மையை தெரிந்துக் கொள்ளாமல் ஒருவரை பழிக்கக் கூடாது. உங்களுடைய வார்த்தைகள் தவறுதலாக யாருடைய நற்பெயரையாவது அழிக்கக்கூடும்.

Choose Your Words Wisely

Once upon a time, an old man spread rumors that his neighbor was a thief. As a result, the young man was arrested. Days later, the young man was proven innocent. After being released, the young man felt humiliated as he walked to his home. He sued the old man for wrongly accusing him.

Case has come for judgement. In court, the old man told the Judge, “They were just comments, didn’t harm anyone..” The judge told the old man, “Write all the things you said about him on a piece of paper. Tear them up and on the way home, throw the pieces of paper separately. Tomorrow, come back to hear the sentence”.

The next day, the judge told the old man, “Before receiving the sentence, you will have to go out and gather all the pieces of paper that you threw out yesterday”. The old man said, “I can’t do that! The wind must have spreads them and I won’t know where to find them”.

The judge then replied, “The same way, simple comments may destroy the honor of a man to such an extent that one is not able to fix it”. The old man realized his mistake and asked for forgiveness.

Moral: Do not malignant or blame anyone without knowing the fact or a truth. Your words may ruin someone’s reputation without any fault of theirs.

Recent posts

மூன்று வகையான மக்கள்

ஆசிரியர் மாணவர்களிடம் மூன்று பொம்மைகளை காட்டி, அதில் உள்ள வேறுபாடுகளை மாணவ்ரகளை கண்டுபிடிக்கும்படி கேட்டார். மூன்று பொம்மைகளும் ஒரே மாதிரி வடிவம், அளவை கொண்டது. மிகுந்த கவனிப்புக்குப்...
Thamil Paarvai

ஓநாய்.. ஓநாய்..

ஒரு கிராமத்தில், ஆடு மேய்க்கும் சிறுவன் ஒருவன் வாழ்ந்து வந்தான். ஒருமுறை அவன் ஆடு மேய்த்து கொண்டிருந்த போது, கிராமவாசிகளுக்கு விளையாட்டு காட்ட நினைத்தான். உடனே “ஓநாய்.....
Thamil Paarvai

முட்டாள்தனமான நாரை

ஒரு நாள் நாரை மிகுந்த பசியுடன் இருந்தது, அதற்கான உணவைத் தேடி கூட்டிலிருந்து வெளியே வந்தது. நாரை, மீன் பிடிக்க ஆற்றங்கரைக்கு சென்று மீனுக்காக காத்துக்கொண்டிருந்தது. நாரை...
Thamil Paarvai

ஆழம் தெரியாமல் காலை விடாதே

ஒரு நரி கிணற்றின் பக்கமாக நடந்து சென்றது. அப்போது எதிர்பாராத விதமாக அது கிணற்றினுள் விழுந்தது. அது தன்னால் முடிந்த வரை வெளியே வர முயற்சித்தது, அதனால்...
Thamil Paarvai

தவறு யாருடையது?

எலியும், தவளையும் நண்பர்களாக இருந்தனர். ஒவ்வொரு காலையிலும் தவளை தன் குளத்தில் இருந்து வெளியேறி தனது நண்பனை சந்திக்கச் செல்லும். எலி அதற்கும் நீச்சல் கற்றுக்கொடுக்க தவளையிடம்...
Thamil Paarvai

மூன்றாவது மீனுக்கு என்ன ஆச்சு?

ஒரு கிராமத்தில் உள்ள குளத்தில் மூன்று மீன்கள் மிகவும் நெருங்கிய நண்பர்களாக இருந்தன. ஒரு நாள், அந்த குளத்தின் வழியாக சென்ற சில மீனவர்கள், அங்கே நிறைய...
Thamil Paarvai

மறைக்கப்பட்ட புதையல்

ஒரு விவசாயிக்கு ஐந்து மகன்கள் இருந்தனர். அவர்கள் அனைவரும் சோம்பேறிகளாக இருந்தனர். அவர்களை கடுமையாக உழைக்கும் இளைஞர்களாகப் பார்க்க அந்த விவசாயி விரும்பினார். அவர்களின் எதிர்காலத்தைப் பற்றி...
Thamil Paarvai

பேராசை கொள்ளாதீர்கள்

ஒருமுறை ஒரு நாய் மிகவும் பசியாக இருந்தது. அது எல்லா இடங்களிலும் உணவுக்காக அலைந்தது, கடைசியில் ஒரு எலும்பு துண்டை கண்டது. அது தன் வாயில் எலும்பு...
Thamil Paarvai

உங்களுக்குத் தெரியுமா? 07

1. பூச்சி இனங்களில் அறிவு மிக்கது எறும்பு. In the species of insects, ant has high knowledge. 2. ஆச்சரியமான விஷயங்களை பார்க்கும் போது...
Thamil Paarvai

Leave a Comment