குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு மரணதண்டனை வரை வழங்க வழிசெய்வது தான் போக்சோ சட்டம் எனப்படுகிறது. குழந்தைகளை பாலியல் குற்றங்களில் இருந்து பாதுகாக்கும் சட்டமே போக்சோ சட்டம் ஆகும். குழந்தைகளுக்கு எதிராக செயல்களில் ஈடுபட்டவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் மற்றும் குழந்தைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் 2012 ஆம் ஆண்டு போக்சோ சட்டம் கொண்டுவரப்பட்டது. இந்த சட்டத்தின் மூலம் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோர் மீதான வழக்கை 3 மாதங்களுக்குள் முடித்து தண்டனை வழங்க வேண்டும். குழந்தைகளுக்கு எதிராக இத்தகைய குற்றங்களில் ஈடுபடுவோர் தொடர்பான வழக்கை வெளிப்படையாக விசாரிக்க தேவையில்லை. மேலும் பாதிக்கப்பட்ட குழந்தையின் எதிர்கால நலன் கருதி வழக்கு விசாரணை ரகசியமாக நடத்தப்படும். குற்றம் தொடர்பாக எப்.ஐ.ஆர். பதிவு செய்த பிறகு தான் விசாரிக்க வேண்டும் என்பதில்லைஇ புகார் வந்த உடனையே காவல்துறையினர் விசாரணையை தொடங்கலாம். பாதிக்கப்பட்ட குழந்தையின் வீட்டிற்கே சென்று காவல்துறையினர் விசாரணை மேற்கொள்ள வேண்டும். குற்றம் சாட்டப்பட்டவரை வைத்துக் கொண்டு பாதிக்கப்பட்ட குழந்தைகளிடம் கண்டிப்பாக விசாரிக்க கூடாது. காவல்நிலைய எல்லைப் பிரச்சனையை காரணம் காட்டி வழக்கு விசாரணையை அதிகாரிகள் தட்டிக்கழிக்கவும் கூடாது. இந்த விதிகளை காவல்துறை அதிகாரிகள் மீறினால் அவர்கள் மீதும் வழக்குபதிவு செய்வதற்கு போக்சோ சட்டம் வழிவகை செய்துள்ளது. பாதிக்கப்பட்ட குழந்தைக்கு உடனடியாக சிகிச்சை வழங்க வேண்டும் மற்றும் மருத்துவப் பரிசோதனைகளும் மேற்கொள்ளப்படவேண்டும். நீதிபதியின் முன்னிலையில் பாதிக்கப்பட்ட குழந்தையிடம் ரகசிய வாக்குமூலம் பெறப்பட்ட வேண்டும். வாக்குமூலமும் உடல் பரிசோதனை அறிக்கையும் வழக்கிற்கு தேவையான முக்கிய ஆதாரங்கள் ஆகும். 2012 முதல் போக்சோ சட்டம் உள்ளிட்ட கடுமையான சட்டங்கள் இருந்தபோதும், அண்மைக் காலமாக குழந்தைகள் மீதான பாலியல் துன்புறுத்தல்கள் அதிகரித்தே கொண்டு சென்றதால் கடந்த ஏப்ரலில் புதிய சட்ட திருத்தும் கொண்டுவரப்பட்டது. இதன் மூலம் 12 வயதிற்க்குட்பட்ட சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவுகள் கொடுப்பவர்களுக்கு போக்சோவின் கீழ் உச்சபட்ச தண்டனையானா தூக்கு தண்டனை விதிக்கவும் நீதிமன்றங்களுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அவசர சட்டத்திற்கு கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து அந்த மசோதா நாடாளுமன்ற இரு அவைகளிலும் சட்டமாக நிறைவேற்றப்பட்டு அமலுக்கு கொண்டுவரப்பட்டது.
Recent posts
தமிழர் DNA ஆய்வுகள் குறித்த அதிர்ச்சிகரமான உண்மைகள்
தமிழர்களின் மரபணு வரலாறு குறித்து உலகம் முழுவதும் உள்ள விஞ்ஞானிகள் தொடர்ச்சியாக ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்தியாவின் தமிழ்நாடு மற்றும் இலங்கையில் வாழும் தமிழ் மக்களின் DNA-க்களை...
கனேடிய தரை எல்லையில் ஐரோப்பா: “விஸ்கி போரின்” விளைவு
டென்மார்க்குடனான 49 ஆண்டு கால ஹான்ஸ் தீவு பிரச்சினை முடிவுக்கு வந்ததன் மூலம், கனடா-ஐரோப்பா இடையே முதல் தரை எல்லை உருவாகியுள்ளது. இந்த வரலாற்று சம்பவம், தற்போது...
கனடாவின் “இரும்புத் தண்டுவடம்” வாஷிங்டனை அதிரவைக்கிறது
கனடியப் பிரதமர் மார்க் கார்னி, நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்தவும், அமெரிக்காவைச் சார்ந்திருப்பதைக் குறைக்கவும் $1 டிரில்லியன் (C$1 டிரில்லியன்) மதிப்பிலான முதலீட்டை ஈர்க்கும் மகத்தான திட்டத்தை அறிவித்துள்ளார்....
ட்ரம்பின் $5,000 அறிவிப்பு பரபரப்பு
2026 செப்டம்பர் 11 — இன்று அமெரிக்கா 9/11 தாக்குதலின் 25 ஆவது ஆண்டு நினைவு தினத்தை அனுசரிக்கிறது. இந்த நினைவு தினத்தை முன்னிட்டு அதிபர் டொனால்ட்...
நூற்றாண்டு கூட்டாண்மை பிறந்தது
2026 செப்டம்பர் 10 ஆம் தேதி, கனடாவின் ஆல்பர்ட்டா மாகாணத்தில் உள்ள கல்கரி நகரில் ஒரு வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வு நடைபெற்றது. கனடா பிரதமர் மார்க் கார்னியும்,...
டிரம்பின் வர்த்தகப் போர் உடைந்து விழுகிறது
டொனால்ட் டிரம்பின் வர்த்தகப் போர் முன்பு நினைத்ததைப் போல வெற்றிகரமாக நடக்கவில்லை. “பெரிய புலி எப்போதும் வெற்றி பெறும்” என்ற அவரது கோட்பாடு தோல்வியடைந்து வருகிறது. கனடா...
கனடா அமைச்சர்கள் முக்கிய ஆலோசனை
அமெரிக்காவுடனான வர்த்தகப் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், பிரதமர் மார்க் கார்னி தலைமையிலான கனடிய அமைச்சரவை, ஆல்பர்ட்டா மாகாணத்தின் பான்ஃப் நகரில் இரண்டு நாள் ஆலோசனைக் கூட்டத்தை...
கனடா புதிய வர்த்தக கூட்டணிகளை அமைக்கும் நிலையில் ட்ரம்பிற்கு கார்னி எச்சரிக்கை
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் வர்த்தக அச்சுறுத்தல்களுக்கு மத்தியில், கனடா பிரதமர் மார்க் கார்னி தனது நாட்டின் பொருளாதார உத்தியில் முக்கியமான மாற்றத்தை அறிவித்துள்ளார். அமெரிக்காவை சார்ந்திருப்பதில்...
கனடா அலுமினிய விலை உயர்வு: அமெரிக்க தொழில் துறையில் அதிர்ச்சி!
அமெரிக்காவிற்கு கனடா அலுமினியத்தின் புதிய விலை நிர்ணயம் அமெரிக்க தொழில் துறையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 50% இறக்குமதி வரி மற்றும் உலகளாவிய விநியோக தடங்கல்கள் காரணமாக...




