திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய நடிகை சமந்தா நேற்று வந்தார். முன்னதாக அவர் நேற்றிரவு அலிபிரியில் இருந்து பாதயாத்திரையாக திருமலைக்கு நடந்து வந்தார்.
பாதயாத்திரையாக நடந்து வந்த நடிகை சமந்தாவை பார்த்த பக்தர்கள் மற்றும் ரசிகர்கள் அவருடன் செல்போனில் புகைப்படம் எடுக்க முயன்றனர். ஆனால், அவருடன் வந்த பாதுகாவலர்கள் புகைப்படம் எடுக்க அனுமதிக்கவில்லை.
இதையடுத்து இன்று நடிகை சமந்தா தனது கணவரும் நடிகருமான நாகசைதன்யாவுடன் சுவாமி தரிசனம் செய்தார்.