உலகம் செய்திகள் தலைப்பு புதிய செய்திகள்

அமெரிக்காவில் வெளிநாட்டு பணியாளர்களுக்கு வழங்கப்படும் எச்-1பி விசா மீதான தடையை மார்ச் 31-ந் தேதி வரை நீட்டிப்பு

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. இதனால் கோடிக்கணக்கானோர் வேலைகளை இழந்தனர்.

இதையடுதது அமெரிக்கர்களுக்கு வேலைவாய்ப்பை அதிகரிக்க அதிபர் டிரம்ப் நிர்வாகம் அதிரடி நடவடிக்கையை எடுத்தது.

வெளிநாட்டு பணியாளர்களுக்கு வழங்கப்படும் எச்-1பி விசா உள்ளிட்ட வேலைக்கான விசாக்களுக்கு கடந்த ஏப்ரல் 22-ந்தேதி தடை விதித்தார்.

ஜூன் 22-ந்தேதி மேலும் சில விசா கட்டுப்பாடுகளை விதித்தார். அதன்பின் விசா தடையை இந்த ஆண்டு இறுதி வரை நீட்டித்து உத்தர விட்டார்.

அமெரிக்காவில் எச்-1 பி விசாவில் அதிக அளவில் இந்தியர்கள் பணியாற்றுகிறார்கள். விசா தடையால் இந்தியர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

எச்1பி விசாவில் பணியாற்றி வந்த வெளிநாட்டு பணியாளர்கள் பலர் கொரோனா நெருக்கடியால் வேலைகளை இழந்தனர்.

அங்குள்ள சட்டப்படி வேலை இழந்ததும் வெளிநாட்டு நபர் 60 நாட்களுக்குள் வேறு வேலையில் சேர வேண்டும்.

இல்லையென்றால் சொந்த நாட்டுக்கு திரும்ப வேண்டும். அப்படி செய்யாமல் மீறுவோரை அழைத்து கொள்ளாத நாடுகளுக்கு விசா வழங்க டிரம்ப் தடை விதித்தார். விசா தடை நேற்றுடன் நிறைவடைந்தது.

இந்த நிலையில் விசா மீதான தடையை மார்ச் 31-ந் தேதி வரை மேலும் நீட்டித்து டிரம்ப் உத்தரவிட்டார்.

இதுகுறித்து டிரம்ப் கூறும் போது, விசா தடை விதித்ததற்கான காரணங்கள் மாறாததால் தடை நீட்டிக்கப்படுகிறது” என்றார்.

Recent posts

10 ஆவது நாடாளுமன்றத்தில் இடம்பெறவுள்ள தமிழ் எம்.பிக்கள்

பொதுத்தேர்தலில் மக்கள் ஆணை மூலம் 25 தமிழ் எம்.பிக்கள் தெரிவாகி இருந்தனர்.இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு கிடைக்கப்பெற்ற தேசியப் பட்டியல் ஆசனம் ஊடாக வைத்தியர் ப. சத்தியலிங்கமும் தேசிய...
Thamil Paarvai

ஜனாதிபதி அனுரகுமார தலைமையிலான புதிய அமைச்சரவை இன்று பதவியேற்பு

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் ஆட்சியின் புதிய அமைச்சரவை சற்று முன்னர் அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய நிதி, பாதுகாப்பு மற்றும் டிஜிட்டல் அமைச்சுக்களை சமகால ஜனாதிபதி அநுகுமார திசாநாயக்க தன்வசம்...
Thamil Paarvai

தமிழரசு கட்சி சஜித்துக்கு ஆதரவு வழங்கும் தீர்மானத்தில் எனக்கு உடன்பாடு இல்லை..

தமிழரசு கட்சியின் மத்திய  சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு வழங்குவதாக எடுத்த முடிவு எனக்கு உடன்பாடு இல்லை என தமிழரசு கட்சியின் கொழும்பு கிளை தலைவரும் மத்திய குழு...
Thamil Paarvai

தமிழ்ப் பொதுவேட்பாளர் தமிழரசுக்கட்சிக்கு உதவி

இன்று வவுனியாவில் தமிழரசுக்கட்சியின் மத்திய குழுக்கூட்டம் நடப்பதாக அறிவிக்கப் பட்டிருந்தது. ஆனால் இன்று நடந்த கூட்டத்தில் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா கலந்து கொள்ளவில்லை. அதன் முக்கிய...
Thamil Paarvai

பிரேஸிலின் வோபாஸ் விமான சேவைக்கு சொந்தமான விமானம் சாவோ போலா நகரில் விழுந்து விபத்து ஏற்பட்டதில் 62 பேர் உயிரிழந்தனர்.

இரட்டை எஞ்சின் கொண்ட அந்த விமானம் தெற்கு மாநிலமான பரானாவில் உள்ள காஸ்கேவலில் இருந்து சாவோ பாலோ நகரிலுள்ள குவாருல்ஹோஸ் விமான நிலையத்திற்குப் பறந்து கொண்டிருந்தபோது, ​​வின்ஹெடோ...
Thamil Paarvai

138 ரன்னில் சுருண்ட இந்தியா: 27 ஆண்டுக்கு பிறகு தொடரை வென்ற இலங்கை

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி தற்போது 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி டையில்...
Thamil Paarvai

இலங்கைக்கு 3 வது இடம்

2024 பாரிஸ் ஒலிம்பிக் தொடக்க விழாவிற்கான 11 சிறந்த கலாச்சார ஆடைகள் பெயரிடப்பட்டுள்ளன. அவற்றுள் இலங்கையின் கலாசாரத்தை வெளிக்காட்டி உருவாக்கப்பட்ட ஆடையானது மூன்றாம் இடத்தைப் பெற முடிந்துள்ளது....
Thamil Paarvai

பென்சில்வேனியாவில் நடந்த பிரசார கூட்டத்தில் டிரம்ப் காதில் காயத்துடன் தப்பினார்.

பென்சில்வேனியாவில் நடந்த பிரசார கூட்டத்தில் டிரம்ப், பேசிக் கொண்டு இருந்த போது மர்ம நபர் திடீரென துப்பாக்கியால் சுட்டார். இதில் டிரம்ப் காதில் காயத்துடன் தப்பினார். மருத்துவமனையில்...
Thamil Paarvai

வரலாற்றில் முதல் முறையாக மட்டு. ஆயர் இல்லத்தினால் அருட்தந்தையர்களுக்கு எதிராக வழக்கு

மட்டக்களப்பு (Batticaloa) ஆயர் இல்லத்தில் இடம்பெற்ற ஒன்று கூடலை திருட்டுத்தனமாக வீடியோ செய்து முகநூலில் பதிவேற்றம் செய்த சம்பவம் தொடர்பாக ஆயர் இல்லத்தினால் இருவருக்கு எதிராக தொடரப்பட்ட...
Thamil Paarvai

Leave a Comment