
👉 முறுக்கு, மிக்ஸர் போன்ற பலகாரங்கள் செய்ய எண்ணெய் மிதமான காய்ச்சலில் இருக்க வேண்டும். அப்பொழுதுதான் மொறுமொறுப்பாக இருக்கும்.
👉 இனிப்பு சோமாஸ் செய்யும்போது பூரணத்தில் சிறிது பால் பவுடர் கலந்து செய்தால் அருமையான சுவை கிடைக்கும்.
👉 ஜவ்வரிசி, ரவை இரண்டையும் சம அளவு எடுத்து வறுத்து, அதில் பால் சேர்த்து வேகவிட்டு, வெல்லப்பாகு சேர்த்து, நெய்விட்டுக் கிளறினால், சுவையான சர்க்கரைப் பொங்கல் தயார்.
👉 ஓட்ஸ் லட்டு பிடிக்கும்போது சர்க்கரைக்குப் பதில் தேன் கலந்தால் அருமையாக இருக்கும்.

👉 அரிசியில் பலகாரங்கள் செய்யும் போது அரிசியை களைந்து, காய வைத்து அரைத்து, பலகாரங்கள் செய்தால், பலகாரங்கள் நல்ல சுவையுடன், உடையாமல் இருக்கும்.
👉 காராபு+ந்தி தேய்க்கும் பொழுது எண்ணெய் நன்கு காய்ந்திருக்க வேண்டும். அப்பொழுதுதான் உருண்டையாக வரும்.
👉 கேரட் அல்வா கிளறும்போது பால் ஊற்றுவதற்குப் பதிலாக பால்கோவா போட்டுக் கிளறி, ஏதாவது ஒரு எசென்ஸ் சில துளிகள் சேர்த்தால் சுவையாக இருக்கும்.
👉 கேசரி கிளறும்போது முந்திரி, பாதாம், பிஸ்தா பொடித்து வறுத்துச் சேர்க்கலாம். அல்லது பாதாம் பவுடர் சேர்த்தால் சுவை அதிகமாக இருக்கும்.
👉 முறுக்கு மாவு பிசையும் பொழுது சிறிது சிறிதாக மாவு எடுத்து பிசைந்து செய்தால் வெள்ளை நிறத்தில் சிவக்காமல் இருக்கும்.
👉குலாப் ஜாமூன் ஜீரா மிகுந்துவிட்டால், அதில் மைதாவை கொஞ்சம் சேர்த்துப் பிசைந்து சப்பாத்தி போல் திரட்டி, சதுர துண்டுகளாக வெட்டி எண்ணெயில் பொரித்தால் சுவையான பிஸ்கட் ரெடி.