மேஷம்

செய்யும் செயல்களில் பல வெற்றி பெறும். பண வரவுகள் மனதிற்கு மகிழ்ச்சி தரும். உத்தியோகத்தில் உயரதிகாரிகளின் எண்ணம் போல் வேலையொன்றை விரைவாக செய்திடுவீர்கள். தொழில் சிறப்புடனே நடந்துவரும். புதிய நபர் வருகை, பொருள் வரவு சேர்க்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி குறைவின்றி நிறைந்திருக்கும்.
இந்த வாரம் வியாழக்கிழமை குரு பகவானுக்கு நெய் தீபமிட்டு வழிபடுங்கள்.
ரிஷபம்

வேலைகளில் நெருக்கடி வந்து தொல்லை அளித்திடும். உத்தியோகத்தில் உள்ளவர், அதிகாரிகள் ஒப்படைத்த பணிகளை கவனமுடன் செய்து களிப்படைவீர்கள். தொழிலில் ஏற்றமும், புது நபர்கள் வருகையும் மகிழ்வு தந்திடும். குடும்பத்தில் சீரான முன்னேற்றம் காணப்படும். பெண்களுக்கு குடும்பத்தில் கவுரவம் அதிகரிக்கும்.
இந்த வாரம் திங்கட்கிழமை விநாயகருக்கு அருகம்புல் மாலை சூட்டுங்கள்.
மிதுனம்

எடுத்த காரியங்கள் வெற்றியில் முடியும். உத்தியோகஸ்தர்களில் சிலருக்கு வேலைப்பளுவால் நெருக்கடி உருவாகலாம். தொழிலைச் செய்பவர், சுறுசுறுப்பால் வெற்றி காண்பார்கள். குடும்ப வாழ்க்கை மேம்படும். பணவரவு தடங்கள் இன்றி கிடைக்கும். தம்பதிகள் ஒற்றுமை பலம் பெறும். மங்கல நிகழ்ச்சிகள் மனையில் இன்பம் சேர்க்கும்.
இந்த வாரம் வெள்ளிக்கிழமை மகாலட்சுமிக்கு நெய் தீபமிடுங்கள்.
கடகம்

புதிய நபரால் சில பிரச்சினைகள் தீர வாய்ப்பு உண்டு. உத்தியோகம் செய்பவர், உயர்ந்த பணி ஒன்றில் அதிகக் கவனம் செலுத்தி, பாராட்டு பெறுவீர்கள். சொந்தத் தொழிலில் பணிச்சுமை கூடும். வேலையை விரைந்து முடித்திட, உதவியாளர் துணையை நாடுவீர்கள். குடும்பத்தில் இருக்கும் பிரச்சினைகளை, பெண்களே சமாளித்துவிடுவர்.
இந்த வாரம் புதன்கிழமை பெருமாளுக்கு அர்ச்சனை செய்யுங்கள்.
சிம்மம்

பழைய பிரச்சினைகளை சுமுகமாக தீர்ப்பீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்கள், சக ஊழியரின் பணியையும் சேர்த்து செய்ய வேண்டிய நிலை உருவாகும். தொழில் செய்வோருக்கு, புதுநபர் வரவால் பணம் சேரும். வேலைப்பளுவால் உடல் சோர்வு ஏற்படும். குடும்பத்தில் சிறுசிறு பிரச்சினை இருந்தாலும், பெரிய பாதிப்பு ஏற்படாது.
இந்த வாரம் திங்கட்கிழமை அம்மனுக்கு நெய் தீபம் ஏற்றி வழிபடுங்கள்.
கன்னி

உங்களின் முயற்சிக்கும், திறமைக்கும் பலன் கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள், உயர் அதிகாரியின் எண்ணப்படி வேலையை முடிப்பார்கள். தொழில் செய்பவர்கள், வெற்றிக்காக அதிக நேரம் உழைக்க வேண்டியதிருக்கும். குடும்பத்தில் இருந்து வந்த சிறுசிறு கடன் தொல்லைகள் நீங்கும். இல்லத்தில் மங்கல காரியங்கள் நடைபெற வழிபிறக்கும்.
இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை சூரிய பகவானை வழிபடுங்கள்.
துலாம்

உத்தியோகத்தில் உள்ள சிலர் உயர்ந்த பதவிகளைப் பெறுவீர்கள். அலுவலகத்தில் கேட்டிருந்த கடன்கள் கைக்கு கிடைக்க வாய்ப்பு உள்ளது. தொழிலில் வேலைப்பளு அதிகரிக்கும். ஓய்வின்றி பணி செய்வதால் வருமானம் பெருகும். குடும்பத்தில் சிறுசிறு குறைகள் தலைகாட்டும். பழைய கடன்களை புதிய கடனால் சரி செய்வீர்கள் .
இந்த வாரம் புதன்கிழமை பெருமாளுக்கு துளசி மாலை சூட்டி வழிபடுங்கள்.
விருச்சகம்

காரியங்களில் தீவிரமாக செயல்பட்டு முன்னேற்றமான பலன்களை அடைய பாடுபடுவீர்கள். உத்தியோகம் செய்பவர்கள், பொறுப்பில் உள்ள பதிவேடுகளை மிகவும் பாதுகாப்பாக வைத் திருப்பது அவசியம். தொழில் செய்பவர்கள், தங்கள் பணியில் சுறுசுறுப்பாய் வேலை செய்யக்கூடும். குடும்பத்தில் சில குறைகள் காணப்படும்.
இந்த வாரம் வெள்ளிக்கிழமை சுக்ர பகவானுக்கு தீபமிட்டு வழிபடுங்கள்.
தனுசு

எடுத்த காரியங்களில் சாதிக்க கடின முயற்சி தேவை. உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணியில் உற்சாகமாக செயல்பட்டாலும், கவனக்குறைவால் சில தவறுகள் நடைபெறலாம். தொழில் செய்பவர்கள், பணியில் சுறுசுறுப்பாக இருந்தாலும், பலன் விலகிப் போகும். குடும்பத்தில் நிலவும் சிறு குறைகளை போக்குவீர்கள்.
இந்த வாரம் செவ்வாய்க்கிழமை முருகப்பெருமானுக்கு நெய் தீபமிடுங்கள்.
மகரம்

உத்தியோகஸ்தர்கள், பணியில் உற்சாகமாக செயல்பட்டு, மேலதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். தொழில் செய்பவர்கள், பணிகளில் ஏற்பட்ட குறைகளை நிவர்த்தி செய்து கொடுக்க வேண்டிய நிலை உருவாகும். குடும்பத்தில் காணப்படும் குறையை, நல்ல முறையில் எடுத்துச் சொல்லி அதனைத் தீர்க்க முயற்சிப்பீர்கள்.
இந்த வாரம் வியாழக்கிழமை தட்சிணாமூர்த்திக்கு வில்வ மாலை சூட்டுங்கள்.
கும்பம்

உத்தியோகத்தில் உயரதிகாரியின் ஆணைப்படியே அவசர வேலையை உடனடியாக செய்து முடிப்பீர்கள். அலுவலகத்தில் சக ஊழியர்களுடன் வாக்குவாதம் செய்வதை தவிர்ப்பது நல்லது. தொழில் நல்ல முறையில் நடக்கும். பணவரவும், தொழில் வளர்ச்சியும் கூடும். குடும்பத்தில் சிறுசிறு பிரச்சினை இருந்தாலும், பெரிய பாதிப்பு ஏற்படாது.
இந்த வாரம் சனிக்கிழமை சனீஸ்வரனுக்கு நல்லெண்ணெய் தீபமிடுங்கள்.
மீனம்

உத்தியோகஸ்தர்கள், தங்கள் பொறுப்பை கவனமுடன் செய்ய வேண்டும். மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்க வாய்ப்பு உண்டு. தொழில் செய்பவர்கள், பணிகளில் கடின முயற்சியுடன் ஈடுபட வேண்டியதிருக்கும். குடும்ப வாழ்க்கை சிறுசிறு குறைகளோடு நடந்திடும். மறைமுக எதிர்ப்புகள் தோன்றும். வாக்குறுதிகளை தவிர்ப்பது நல்லது.
இந்த வாரம் சனிக்கிழமை ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை சூட்டுங்கள்.