நவீன இலக்கிய எழுத்தாளரான தி.ஜானகிராமன் 1921ஆம் ஆண்டு பிப்ரவரி 28ஆம் தேதி திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே உள்ள தேவக்குடியில் பிறந்தார்.

இவர் கல்லூரியில் படித்தபோதே, விடுதலைப் போராட்ட கூட்டங்களில் கலந்துக்கொண்டார். அதுதொடர்பாக பல கதை, கட்டுரைகளை எழுதியுள்ளார். தனது பயண அனுபவங்களை ‘உதயசூரியன்”, ‘கருங்கடலும் கலைக்கடலும்” என்ற தலைப்புகளில் கணையாழி என்ற தன்னுடைய வார இதழில் எழுதினார்.
1964ஆம் ஆண்டு வெளியான இவரது ‘மோகமுள்” நாவல், இலக்கிய உலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர் அது திரைப்படமாக தயாரிக்கப்பட்டது. அதில் ‘சக்தி வைத்தியம்” என்ற சிறுகதை தொகுப்புக்காக சாகித்ய அகாடமி விருது பெற்றார். இவரது எழுத்தில் இசைக்கு முக்கிய இடம் இருக்கும்.
இசையை எழுத்தாக்கிய அபூர்வ எழுத்தாளர் என போற்றப்பட்டவரும், ‘தி.ஜா.” என இலக்கிய உலக நண்பர்களால் அன்போடு அழைக்கப்பட்டவருமான இவர் 1982ஆம் ஆண்டு மறைந்தார்.