எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் நேர்கொண்ட பார்வை படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிக்கட்ட பணிகள் நடக்கிறது. ஆகஸ்ட் 10-ந்தேதி இப்படம் திரைக்கு வருகிறது. மேலும், பிங்க் ஹிந்தி படத்தின் ரீமேக்கான இந்த படத்தில் அஜித்தின் மனைவியாக வித்யாபாலன் நடித்துள்ளார்.
அதோடு, இப்படத்தில் நடுத்தர வயதுடைய வழக்கறிஞராக சால்ட் அண்ட் பெப்பர் கெட்டப்பில் நடித்துள்ள அஜித், வித்யாபாலனுடன் நடித்துள்ள காட்சிகளில் இளமையான தோற்றத்தில் நடித்துள்ளார். அதோடு, பிங்க் படத்தை விட வித்யாபாலன் கேரக்டருக்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருப்பதோடு, அவருக்கும், அஜித்துக்கும் திருமணம் நடைபெறுவது மற்றும் ரொமான்ஸ் காட்சிகளும் இந்த படத்தில் இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில், படப்பிடிப்பில் அஜித் – வித்யாபாலன் தோன்றும் காட்சிகளின் புகைப்படங்கள் வெளியாகி வரும் நிலையில், அவர்கள் திருமண கோலத்தில் எடுத்துள்ள போட்டோவும் வெளியாகி உள்ளன. இதையும் அஜித் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.