சிறுகதை சிறுவர் பக்கம் பஞ்ச தந்திரம்

ஆட்டைக் காணோம்

முன்னொரு காலத்தில் கோணங்கி பட்டினம் என்ற ஊரில் மந்தை மேய்ப்பன் ஒருவன் வாழ்ந்து வந்தான். அவனிடம் நிறைய ஆடுகள் இருந்தன. அவற்றை அவனால் காவல்காக்க முடியவில்லை. தினமும் ஒவ்வொரு ஆட்டை ஓநாய்கள் கவர்ந்து சென்றன.

இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் வேட்டை நாய் இரண்டை வாங்கி காவலுக்கு வைத்தான். அவற்றிற்கு தினமும் மாமிச உணவு கொடுக்க வேண்டுமே.. இதற்காக தினமும் இரண்டு எலிகளை அடித்து உணவாக கொடுத்தான்.

அப்படி இருந்தும் தினமும் ஒரு ஆடு காணாமல் போனது. இதனால் மேய்ப்பனுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. வேட்டை நாய்கள் மீது கோபம் கோபமாக வந்தது..

ஒரு நாள் என்ன நடக்கிறது என்பதை மறைந்திருந்து கவனித்தான். அப்பொழுது ஓநாய் ஒன்று வந்து ஆட்டை கொன்று இழுத்து சென்றது. அது சாப்பிட்டுவிட்டு போடும் மீதி ஆட்டை இந்த வேட்டை நாய்கள் இன்பமாக தின்றன. இப்படி நடப்பதை கண்ட அவன் திடுக்கிட்டான். மிகவும் சோகமாக உட்கார்ந்தான்.

அப்பொழுது அந்த வழியாக முனிவர் ஒருவர் வந்தார். அவரிடம் தன் கஷ்டத்தை சொல்லி அழுதான் மந்தை மேய்ப்பவன்.

அதற்கு முனிவர், “மகனே யாருக்கும் வயிறார உணவு கொடுத்தால் தான் வேலை செய்வர். நீயோ இரண்டு எலிகளை மாத்திரம் நாய்களுக்கு உணவாக கொடுக்கிறாய்.

இது அவைகளுக்கு பத்தாது. நீ அவ்வப்போது உன் வீட்டிற்காக ஆட்டை வெட்டுகிறாய் அல்லவா? அந்த மாமிசத்திலிருந்து சிறு துண்டுகளையாவது எடுத்து இந்த நாய்களுக்கு கொடுக்க வேண்டும். அப்படி கொடுத்தால்தான் அவைகள் உனக்காக நன்கு வேலை செய்யும்,” என்றார்.

அதன்படியே செய்வதாக ஒப்பு கொண்டான் மேய்ப்பன். அப்படியே செய்து வந்தான். அதற்கு நல்ல பலன் கிடைத்தது. அன்றிலிருந்து மந்தையில் ஆடுகள் குறையவில்லை.

மறுநாள் ஓநாய்கள் ஆட்டை திண்ண வந்தன. அதை கண்ட வேட்டை நாய்கள் அவைகளை விரட்டின. ” என்ன இத்தனை நாட்களாக நாங்கள் விட்டு சென்ற மாமிசத்தை தின்றீர்கள். இப்பொழுது உங்களுக்கு என்னவாயிற்று?” என்றன.

“உங்களது எச்சில் மாமிசம் எங்களுக்கு வேண்டாம். எங்கள் தலைவர் வயிறு நிறைய எங்களுக்கு மாமிசம் கொடுக்கிறார்,” என்றன.

அவற்றை மீறி ஓநாய்கள் மந்தைக்குள் நுழைந்தன. அவைகள் மீது பாய்ந்து கிழித்து கொன்றன வேட்டை நாய்கள். மிகவும் மகிழ்ச்சி அடைந்தான் மந்தை மேய்ப்பன்.

நீதி : நம்மிடம் வேலை செய்பவர்களுக்கு நாம் வயிறு நிறைய சாப்பாடு கொடுக்க வேண்டும். தகுதியான சம்பளம் கொடுக்க வேண்டும். அப்பொழுதுதான் நமக்கு உண்மையாக உழைப்பர்.

Recent posts

வார்த்தைகளை புத்திசாலித்தனமாகத் தேர்ந்தெடுங்கள்

ஒரு காலத்தில் முதியவர் ஒருவர் தனது அண்டை வீட்டுக்காரரை திருடன் என்று வதந்தியை பரப்பினார். இதன் விளைவாக அந்த இளைஞர் கைது செய்யப்பட்டார். நாட்கள் ஓடின, இளைஞனும்...
Thamil Paarvai

மூன்று வகையான மக்கள்

ஆசிரியர் மாணவர்களிடம் மூன்று பொம்மைகளை காட்டி, அதில் உள்ள வேறுபாடுகளை மாணவ்ரகளை கண்டுபிடிக்கும்படி கேட்டார். மூன்று பொம்மைகளும் ஒரே மாதிரி வடிவம், அளவை கொண்டது. மிகுந்த கவனிப்புக்குப்...
Thamil Paarvai

ஓநாய்.. ஓநாய்..

ஒரு கிராமத்தில், ஆடு மேய்க்கும் சிறுவன் ஒருவன் வாழ்ந்து வந்தான். ஒருமுறை அவன் ஆடு மேய்த்து கொண்டிருந்த போது, கிராமவாசிகளுக்கு விளையாட்டு காட்ட நினைத்தான். உடனே “ஓநாய்.....
Thamil Paarvai

முட்டாள்தனமான நாரை

ஒரு நாள் நாரை மிகுந்த பசியுடன் இருந்தது, அதற்கான உணவைத் தேடி கூட்டிலிருந்து வெளியே வந்தது. நாரை, மீன் பிடிக்க ஆற்றங்கரைக்கு சென்று மீனுக்காக காத்துக்கொண்டிருந்தது. நாரை...
Thamil Paarvai

ஆழம் தெரியாமல் காலை விடாதே

ஒரு நரி கிணற்றின் பக்கமாக நடந்து சென்றது. அப்போது எதிர்பாராத விதமாக அது கிணற்றினுள் விழுந்தது. அது தன்னால் முடிந்த வரை வெளியே வர முயற்சித்தது, அதனால்...
Thamil Paarvai

தவறு யாருடையது?

எலியும், தவளையும் நண்பர்களாக இருந்தனர். ஒவ்வொரு காலையிலும் தவளை தன் குளத்தில் இருந்து வெளியேறி தனது நண்பனை சந்திக்கச் செல்லும். எலி அதற்கும் நீச்சல் கற்றுக்கொடுக்க தவளையிடம்...
Thamil Paarvai

மூன்றாவது மீனுக்கு என்ன ஆச்சு?

ஒரு கிராமத்தில் உள்ள குளத்தில் மூன்று மீன்கள் மிகவும் நெருங்கிய நண்பர்களாக இருந்தன. ஒரு நாள், அந்த குளத்தின் வழியாக சென்ற சில மீனவர்கள், அங்கே நிறைய...
Thamil Paarvai

மறைக்கப்பட்ட புதையல்

ஒரு விவசாயிக்கு ஐந்து மகன்கள் இருந்தனர். அவர்கள் அனைவரும் சோம்பேறிகளாக இருந்தனர். அவர்களை கடுமையாக உழைக்கும் இளைஞர்களாகப் பார்க்க அந்த விவசாயி விரும்பினார். அவர்களின் எதிர்காலத்தைப் பற்றி...
Thamil Paarvai

பேராசை கொள்ளாதீர்கள்

ஒருமுறை ஒரு நாய் மிகவும் பசியாக இருந்தது. அது எல்லா இடங்களிலும் உணவுக்காக அலைந்தது, கடைசியில் ஒரு எலும்பு துண்டை கண்டது. அது தன் வாயில் எலும்பு...
Thamil Paarvai

Leave a Comment