கால்பந்து விளையாட்டு வீரரான ஜான் ஸ்டோன்ஸ் மனைவி குழந்தையை விட்டு பிரிந்து தனியாக வாழ்வது அவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இங்கிலாந்து கால்பந்து விளையாட்டு வீரரான ஜான் ஸ்டோன்ஸ் தனது 15 வயதிலிருந்து மில்லி என்ற பெண்ணை காதலித்து வந்தார்.
கடந்த 2016 ஆம் ஆண்டு ஐான்ஸ்டோன்ஸ்-க்கும் மில்லிக்கும் திருமணம் நடைபெற்ற நிலையில், 2017 ஆம் ஆண்டு பெண் குழந்தை பிறந்தது. ஜான் ஸ்டோன்ஸ் மில்லி மற்றும் மில்லியின் தாயார் மாண்டியுடன் ஆறு படுகையறைகள் கொண்ட வீட்டில் வசித்து வந்தனர்
இந்நிலையில் ஜான் ஸ்டோன்ஸ்னுக்கு ஜெசிகா என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது, ஜெசிகா இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பதிவிட்டுள்ளார்.
தொடர்ந்து, இது குறித்து மில்லிக்கு தெரிய வந்ததும் அவர் கேட்டு கொண்டதன் பேரில் ஜெசிகா தன்னுடைய உறவை முடித்து கொண்டார்.
இந்நிலையில் ஜெசிகா இது குறித்து கூறியது, ஜான் ஸ்டோன்ஸ் மில்லி இருவரும் பிரிவது மிகவும் வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.
எனக்கு ஜான் ஒரு விளையாட்டு வீரர் என்று தெரியாமல் தான் அவருடன் நான் பழகினேன் பின்புதான் அவரை பற்றி தெரிந்தது. இது குறித்து மில்லி என்னிடம் பேசினார். அதன் பின் நான் அவருடன் பழகுவதை நிறுத்தி விட்டேன் என்றார்.
இந்நிலையில் தனது 18 மாத குழந்தையுடன் ஜான், கடந்த டிசம்பர் மாதத்தில் இருந்து மனைவியை விட்டு பிரிந்து தனியாக வாழ்ந்து வருகிறார்.
மேலும் தனது கால் தொடையில் பச்சைகுத்தி கொண்டுள்ள மனைவியின் படத்தை லேசர் சிகிச்சை மூலம் நீக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே தனது குழந்தையை தன்னுடனேயே வைத்துக்கொள்ள கூறி நீதிமன்றத்தை அணுகவுள்ளதாக மில்லி கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.