ஜம்மு காஷ்மீரின் குல்காம் பகுதியில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி பொலிஸ் அதிகாரிகள் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஜம்மு காஷ்மீரின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள குல்காம் பகுதியில் பனிச்சரிவு ஏற்பட்டது. இதன்போது பனிப்பாறைகள் வேகமாக உருண்டு வந்ததில் பத்து பொலிஸ் அதிகாரிகள் அதில் சிக்கியுள்ளனர்.
பனிப்பாறைகளுக்குள் சிக்கிய மூவர் பாதுகாக்கப்பட்ட போதிலும், ஏழு பேர் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளனர்.
ஜம்மு காஷ்மீரின் சில பகுதிகளில் பெய்த திடீா் பனி மழையால் வீதிகள் தோறும் 5 அடிகள் உயரத்திற்கு பனிப் படா்ந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.