
💫 கடந்த சில ஆண்டுகளில், பிளாக்செயின் (Block Chain) மென்பொருள் வழியாகப் பயன்படுத்தப்படும் டிஜிட்டல் நாணயங்கள் (Digital Currency) அதிகம் பிரபலமடைந்து வருகின்றன. இந்த டிஜிட்டல் நாணயங்கள் குறியாக்கம் செய்யப்படுகின்றன. அதாவது குறியீடுகளால் அறியப்படுபவை. எனவே அவை கிரிப்டோகரன்சி (CryptoCurrency) என்றும் அழைக்கப்படுகின்றன.
💫 உலகெங்கிலும், நாணயங்கள் அந்தந்த நாட்டின் மத்திய வங்கிகளால் கட்டுப்படுத்தப்படுகின்றன, ஆனால் கிரிப்டோகரன்சிகளின் விஷயத்தில் அப்படி இல்லை. இவற்றை கட்டுப்படுத்தும் அதிகாரம் அதை வாங்கி விற்கும் பொதுமக்களின் கைகளில் உள்ளது.
💫 பெரும்பாலான நாடுகளின் அரசாங்கங்கள் அவற்றை சட்டவிரோதமாகக் கருதுகின்றன அல்லது அவற்றை ஏதேனும் ஒரு வடிவத்தில் கட்டுப்படுத்த முயற்சிக்கின்றன.

💫 ஆனால் இப்போது தென் அமெரிக்க நாடான எல் சால்வடோர் (El Salvador) இப்போது அதன் பயன்பாட்டை சட்டப்பூர்வமாக அங்கீகரித்துள்ளது. இதனைச் செயல்படுத்தத் தேவையான தொழில்நுட்ப உதவியை எல் சால்வடோர் உலக வங்கியிடம் கோரியது.
💫 அதை மறுத்த உலக வங்கி, இது குறித்து, வெளிப்படைத்தன்மை மற்றும் சுற்றுச்சூழல் விவகாரங்கள் பரிசீலிக்கப்பட வேண்டியுள்ளது என்று கூறிவிட்டது.
கிரிப்டோகரன்சி என்றால் என்ன?
🎊 உலகில் ரூபாய், டாலர் மற்றும் யூரோ போலப் பல நாணயங்கள் கடந்த 10-12 ஆண்டுகளில் மெய்நிகர் உலகில் தோன்றியுள்ளன.
🎊 அவற்றின் புகழ் மற்றும் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. அவை குறிப்பாக இளைய தலைமுறையினரிடையே மிகவும் பிரபலமாக உள்ளன.
🎊 பரவலாகப் பார்த்தால், கிரிப்டோகரன்ஸிகள், டோக்கன்கள் அல்லது டிஜிட்டல் ‘நாணயங்கள்” வடிவத்தில் இருக்கும் மெய்நிகர் அல்லது டிஜிட்டல் பணம்.
🎊 கிரிப்டோகரன்சிகள் அரசாங்க விதிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகளிலிருந்து விடுபடும் நோக்கில் வடிவமைக்கப்பட்டுள்ளன.

🎊 அத்தகைய நாணயங்களில் மிகவும் பிரபலமானது பிட்காயின் (BitCoin). கடந்த வாரம் ஒரு பிட்காயினின் விலை சுமார் 30 லட்சம் ரூபாயாக இருந்தது.
🎊 உலகெங்கிலும் சுமார் 2 கோடி பிட்காயின்கள் புழக்கத்தில் உள்ளன. அவற்றில் இரண்டாயிரம் இந்தியாவில் இருப்பதாக கூறப்படுகிறது.
🎊 அவற்றின் மதிப்பு தொடர்ந்து பெரிய அளவிலான ஏற்ற இறக்கத்துடன் தான் காணப்படுகிறது. அடுத்த சில மாதங்களில் அதன் மதிப்பு 50 சதவீதம் குறையக்கூடும் என்று சில நிபுணர்கள் கூறுகிறார்கள், வேறு சில நிபுணர்கள் இது 30 லட்சத்திலிருந்து 75 லட்சமாக உயரக்கூடும் என்று நம்புகிறார்கள்.
🎊 அத்தகைய மறைகுறியாக்கப்பட்ட அல்லது குறியிடப்பட்ட நாணய வகைகளின் எண்ணிக்கை சுமார் நான்காயிரம் ஆகும், ஆனால் பொது மக்களுக்கு பிட்காயின் என்ற பெயர் மட்டுமே தெரியும்.