சிறுகதை சிறுவர் பக்கம் பொதுவானவை

மூன்று வகையான மக்கள்

ஆசிரியர் மாணவர்களிடம் மூன்று பொம்மைகளை காட்டி, அதில் உள்ள வேறுபாடுகளை மாணவ்ரகளை கண்டுபிடிக்கும்படி கேட்டார். மூன்று பொம்மைகளும் ஒரே மாதிரி வடிவம், அளவை கொண்டது. மிகுந்த கவனிப்புக்குப் பிறகு, மாணவர்கள் பொம்மைகளில் உள்ள துளைகளை கவனித்தனர். முதல் பொம்மையின் காதுகளில் துளைகள் இருந்தன. 2 வது பொம்மையின் காது மற்றும் வாயில் துளைகள் இருந்தன. 3 வது பொம்மையின் ஒரே காதில் ஒரே ஒரு துளை இருந்தன.

பின்னர் மாணவர்கள் ஊசியை முதலாவது பொம்மையின் ஒரு காது வழியாக விட்டு மற்றொரு காது வழியாக எடுத்தனர், ஊசியை இரண்டாவது பொம்மையின் காது வழியாக விட்டு வாய் வழியாக வெளியே எடுத்தனர். மூன்றாவது பொம்மையில் ஊசியை விட்ட போது அது வெளிவரவில்லை. இதை வைத்து ஆசிரியர் மாணவரக்ளுக்கு ஒரு கருத்தை புரியவைக்க நினைத்தார்.

பின்பு ஆசிரியர் மாணவர்களிடம், முதல் பொம்மை உங்களைச் சுற்றியுள்ளவர்களைக் குறிக்கிறது, அவர்கள் உங்களுக்குச் செவிசாய்க்கிறார்கள் என்ற எண்ணத்தைத் தருகிறார்கள், எனவே உங்களைச் சுற்றியுள்ள இந்த வகை மக்களுடன் பேசும்போது கவனமாக இருங்கள்.

இரண்டாவது பொம்மை, நீங்கள் சொல்வதை கேட்கும் மக்கள் உங்கள் வார்த்தைகளை பயன்படுத்தி மற்றவர்களிடம் தவறான கூற்றை தெரிவிக்கலாம், இதனால் இருபாலரிடையே பிரச்சனைகள் கூட ஏற்படலாம் என்ற கருத்தை தெரிவிக்கிறது.

சிலவகையான மக்கள் உங்களின் நம்பக தன்மையை காப்பாற்றுவார்கள். அவர்களே நீங்கள் நம்பக்கூடியவர்கள் என்ற கருத்தை மூன்றாவது பொம்மை தெரிவிக்கிறது.

நீதி : எப்போதும் விசுவாசமும் நம்பிக்கையும் உள்ளவர்களையே துணையாக வைத்திருங்கள்.

Three Types of People

A teacher shows three toys to a student and asks the student to find out the differences. All the three toys are seemed to be identical in their shape, size. After keen observation, the student observes holes in the toys. The 1st toy has holes in the ears. The 2nd toy has holes in ear and mouth. The 3rd toy has only one hole in one ear.

Then the student puts the needle in the ear hole of the 1st toy. The needle comes out from the other ear. In the 2nd toy, when the needle was put in the ear, the needle came out of a mouth. And in the 3rd toy, when the needle was put in the toy, it did not come out. By this teacher decided to teach a concept to the students.

The first toy represents those people around you who gives an impression that they are listening to you, so be careful while you are speaking with this type of people around you.

The second toy represents those people who listen to you all your things, will use your words and tell others against you. It will bring issues.

The third toy represents some kinds of people will keep the trust you have in them. They are the ones who you can count on.

Moral : Always stay in a company of a people who are loyal and trustworthy.

Recent posts

வார்த்தைகளை புத்திசாலித்தனமாகத் தேர்ந்தெடுங்கள்

ஒரு காலத்தில் முதியவர் ஒருவர் தனது அண்டை வீட்டுக்காரரை திருடன் என்று வதந்தியை பரப்பினார். இதன் விளைவாக அந்த இளைஞர் கைது செய்யப்பட்டார். நாட்கள் ஓடின, இளைஞனும்...
Thamil Paarvai

ஓநாய்.. ஓநாய்..

ஒரு கிராமத்தில், ஆடு மேய்க்கும் சிறுவன் ஒருவன் வாழ்ந்து வந்தான். ஒருமுறை அவன் ஆடு மேய்த்து கொண்டிருந்த போது, கிராமவாசிகளுக்கு விளையாட்டு காட்ட நினைத்தான். உடனே “ஓநாய்.....
Thamil Paarvai

முட்டாள்தனமான நாரை

ஒரு நாள் நாரை மிகுந்த பசியுடன் இருந்தது, அதற்கான உணவைத் தேடி கூட்டிலிருந்து வெளியே வந்தது. நாரை, மீன் பிடிக்க ஆற்றங்கரைக்கு சென்று மீனுக்காக காத்துக்கொண்டிருந்தது. நாரை...
Thamil Paarvai

ஆழம் தெரியாமல் காலை விடாதே

ஒரு நரி கிணற்றின் பக்கமாக நடந்து சென்றது. அப்போது எதிர்பாராத விதமாக அது கிணற்றினுள் விழுந்தது. அது தன்னால் முடிந்த வரை வெளியே வர முயற்சித்தது, அதனால்...
Thamil Paarvai

தவறு யாருடையது?

எலியும், தவளையும் நண்பர்களாக இருந்தனர். ஒவ்வொரு காலையிலும் தவளை தன் குளத்தில் இருந்து வெளியேறி தனது நண்பனை சந்திக்கச் செல்லும். எலி அதற்கும் நீச்சல் கற்றுக்கொடுக்க தவளையிடம்...
Thamil Paarvai

மூன்றாவது மீனுக்கு என்ன ஆச்சு?

ஒரு கிராமத்தில் உள்ள குளத்தில் மூன்று மீன்கள் மிகவும் நெருங்கிய நண்பர்களாக இருந்தன. ஒரு நாள், அந்த குளத்தின் வழியாக சென்ற சில மீனவர்கள், அங்கே நிறைய...
Thamil Paarvai

மறைக்கப்பட்ட புதையல்

ஒரு விவசாயிக்கு ஐந்து மகன்கள் இருந்தனர். அவர்கள் அனைவரும் சோம்பேறிகளாக இருந்தனர். அவர்களை கடுமையாக உழைக்கும் இளைஞர்களாகப் பார்க்க அந்த விவசாயி விரும்பினார். அவர்களின் எதிர்காலத்தைப் பற்றி...
Thamil Paarvai

பேராசை கொள்ளாதீர்கள்

ஒருமுறை ஒரு நாய் மிகவும் பசியாக இருந்தது. அது எல்லா இடங்களிலும் உணவுக்காக அலைந்தது, கடைசியில் ஒரு எலும்பு துண்டை கண்டது. அது தன் வாயில் எலும்பு...
Thamil Paarvai

உங்களுக்குத் தெரியுமா? 07

1. பூச்சி இனங்களில் அறிவு மிக்கது எறும்பு. In the species of insects, ant has high knowledge. 2. ஆச்சரியமான விஷயங்களை பார்க்கும் போது...
Thamil Paarvai

Leave a Comment