Featured கனடா செய்திகள் புதிய செய்திகள்

ஒரு பயங்கர சம்பவம் கனடாவில் வளர்த்தவரையே கடித்துக்குதறிய நாய்…

கனடாவின் வான்கூவரில் அதிகாலை 1.30 மணிக்கு ஒருவர் அலறும் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தவர்கள் பதறிப்போய் என்ன நடக்கிறது என பார்க்க விரைந்துள்ளனர்.

அப்போது, தங்கள் பக்கத்து வீட்டில் வாழும் ஒருவரை, அவர் வளர்த்த நாயே துரத்துவதை அவர்கள் கண்டுள்ளனர். அவர் வீட்டிலிருந்து தப்பி வெளியே ஓடிய நிலையிலும், அந்த நாய் விடாமல் அவரைத் துரத்தியுள்ளது.

உடனே பொலிசாருக்கு தகவலளிக்கப்பட்டுள்ளது. பொலிசார் வந்து பார்க்கும்போது, அந்த நாய் அவரது கையைக் கடித்துப் பிய்ப்பதையும், எங்கும் சதைத்துணுக்குகள் தெறிப்பதையும் கண்டு, ஷாக் கொடுக்கும் டேஸர் என்ற கருவி மூலம் அந்த நாயைக் கட்டுப்படுத்த முயன்றுள்ளார்கள். ஆனால், அந்த நாய் அடங்கவில்லையாம்.

ஆகவே பொலிசார் ஒருவர் அந்த நாயை துப்பாக்கியால் சுட்டிருக்கிறார். என்றாலும், அது வீட்டுக்குள் ஓடிவிட்டிருக்கிறது. பல மணி நேரத்திற்குப்பின், வன விலங்கு நிபுணர் ஒருவர் வந்து அந்த நாய் மீது மயக்க ஊசியை துப்பாக்கி மூலம் செலுத்தியிருக்கிறார்.

அதன் பிறகே அந்த நாய் அங்கிருந்து அகற்றப்பட்டுள்ளது. அந்த நாயின் உரிமையாளர், கையில் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வளர்த்த நாயே அதன் எஜமானரை கடித்துக்குதறிய இந்த சம்பவம், அப்பகுதி மக்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

Recent posts

கனடா புதிய வர்த்தக கூட்டணிகளை அமைக்கும் நிலையில் ட்ரம்பிற்கு கார்னி எச்சரிக்கை

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் வர்த்தக அச்சுறுத்தல்களுக்கு மத்தியில், கனடா பிரதமர் மார்க் கார்னி தனது நாட்டின் பொருளாதார உத்தியில் முக்கியமான மாற்றத்தை அறிவித்துள்ளார். அமெரிக்காவை சார்ந்திருப்பதில்...
Thamil Paarvai

கனடா அலுமினிய விலை உயர்வு: அமெரிக்க தொழில் துறையில் அதிர்ச்சி!

அமெரிக்காவிற்கு கனடா அலுமினியத்தின் புதிய விலை நிர்ணயம் அமெரிக்க தொழில் துறையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 50% இறக்குமதி வரி மற்றும் உலகளாவிய விநியோக தடங்கல்கள் காரணமாக...
Thamil Paarvai

உலகப் பொருளாதாரம் திரும்பியது

உலகப் பொருளாதாரம் திரும்பியது: BRICS இப்போது G7-ஐ விடப் பெரியது! உலகப் பொருளாதாரத்தில் ஒரு வரலாற்று மாற்றம் நிகழ்ந்துள்ளது. இரண்டாம் உலகப் போருக்குப் பின் மேற்கத்திய நாடுகளால்...
Thamil Paarvai

“இதுதான்”

“இதுதான்”: கனடா $1 டிரில்லியன் திட்டத்தை உறுதிப்படுத்துகிறது – கார்னி டிரம்பின் வர்த்தகப் போரை முடக்குகிறார் ஒட்டாவா, செப்டம்பர் 5: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் வர்த்தக...
Thamil Paarvai

அமெரிக்க நிறுவனங்கள் என்று நீங்கள் நினைக்கும் கனடிய நிறுவனங்கள்

“அமெரிக்கர் எதிர்வினையாற்றுகிறார்: அமெரிக்க நிறுவனங்கள் என்று நீங்கள் நினைக்கும் 7 கனடிய நிறுவனங்கள்” என்ற தலைப்பில் ஒரு குறிப்பிட்ட ஆழமான தமிழ்க் கட்டுரை இல்லை. இருப்பினும், இந்தத்...
Thamil Paarvai

கனடா டிரம்பிற்கு கட்டணம் விதிக்கிறது

‘இலவசத் தண்ணீர் இல்லை’: கனடா டிரம்பிற்கு ஒவ்வொரு துளி தண்ணீருக்கும் கட்டணம் விதிக்கிறது ஒட்டாவா, செப்டம்பர் 5: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடனான வர்த்தகப் போர் மேலும்...
Thamil Paarvai

ஒரு புதிய அமெரிக்காவை உருவாக்கும் அதிர வைக்கும் திட்டம்.

அமெரிக்காவின் Project 2025: ஒரு புதிய அமெரிக்காவை உருவாக்கும் அதிர வைக்கும் திட்டம்! 2024 ஆம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக, அமெரிக்க அரசியல் வட்டாரங்களில்...
Thamil Paarvai

சீன-ரஷ்யா-இந்திய கூட்டணி: டிரம்பிற்கு ஆபத்தா?

2025 ஆம் ஆண்டு, உலக அரசியலில் ஒரு முக்கிய திருப்புமுனை ஏற்பட்டுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் கடுமையான வரிக் கொள்கைகளும், ஏகபோக போக்கும், உலகின் மூன்று...
Thamil Paarvai

ஒன்டாரியோவில் கடும் புயல்: சேதம் விளைவிக்கும் காற்று, கனமழை, மற்றும் சூறாவளி அபாயம்

தெற்கு ஒன்டாரியோவில் செப்டம்பர் 2, 2026 அன்று கடுமையான புயல்கள் தாக்கின. இந்தப் புயல்கள் கனமழை, சேதம் விளைவிக்கும் காற்று, பெருங்கற்கள், மற்றும் சூறாவளி (tornado) அபாயத்தை...
Thamil Paarvai

Leave a Comment