ஆன்மீகம் கிறிஸ்தவம்

ஒரு வார்த்தை போதும்

ஜெருசலேம், கப்பர்நாகூம், சமாரியா உள்ளிட்ட பெரிய நகரங்களின் சட்டம் ஒழுங்கைக் காத்துவந்த ரோமானியப் படையணியில், யூதர்கள் அல்லாத பிற இனத்தைச் சேர்ந்தவர்களும் உயர்ந்த பொறுப்புகளில் இருந்தனர். நூறு படை வீரர்களுக்குத் தலைவராக இருப்பவர்களை ‘நூற்றுவர் தலைவர்’ எனப் பெயரிட்டு அழைத்தனர். அப்படியான ‘நூற்றுவர் தலைவர்’ ஒருவர், இயேசுவைத் தேடி வந்தார். இயேசுவை நோக்கி… “ஐயா, என் மகன் முடக்கு வாதத்தால் மிகுந்த வேதனையுடன் படுத்த படுக்கையாகக் கிடக்கிறான்” என்றார். இயேசு அவரிடம், “நான் உங்கள் வீட்டுக்கு வந்து அவனைக் குணமாக்குவேன்” என்றார்.

நூற்றுவர் தலைவர் மறுமொழியாக, “ஐயா, நீர் என் வீட்டுக்குள் அடியெடுத்து வைக்க நான் தகுதியற்றவன். ஆனால், ஒரே ஒரு வார்த்தை மட்டும் சொல்லுங்கள், என் மகன் நலமடைவான். நான் அதிகாரத்துக்கு உட்பட்டவன். என் அதிகாரத்துக்கு உட்பட்ட படைவீரர்கள் உள்ளனர். நான் அவர்களுள் ஒருவரிடம் ‘செல்க’ என்றால் செல்கிறார். வேறு ஒருவரிடம் ‘வருக’ என்றால் வருகிறார். என் பணியாளரைப் பார்த்து ‘இதைச் செய்க’ என்றால் அவர் செய்கிறார்” என்றார்.

இதைக் கேட்ட இயேசு, தம்மைப் பின்தொடர்ந்து வந்தவர்களை நோக்கி, “உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். இஸ்ரவேல் மக்கள் யாரிடமும் இத்தகைய நம்பிக்கையை நான் கண்டதில்லை. கிழக்கிலும் மேற்கிலும் இருந்து பலர் வந்து ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகியோருடன் விண்ணரசின் பந்தியில் அமர்வார்கள். அரசுக்கு உரியவர்களோ புறம்பாக உள்ள இருளில் தள்ளப்படுவார்கள். அங்கே அழுகையும் அங்கலாய்ப்பும் இருக்கும்” என்றார்.

பின்னர் இயேசு நூற்றுவர் தலைவரை நோக்கி, “நீர் போகலாம், நீர் நம்பியவண்ணமே உமக்கு நிகழும்” என்றார். நூற்றுவர் தலைவர் வீட்டுக்குத் திரும்பிச் சென்றபோது அவரது மகன் குணமடைந்துவிட்ட அதிசயம் நிகழ்ந்திருந்தது. அதன்பின் இயேசு பேதுருவின் வீட்டுக்குள் சென்றபோது, பேதுருவின் மாமியார் காய்ச்சலால் படுத்திருப்பதைக் கண்டார். இயேசு அவரது கையைத் தொட்டதும் காய்ச்சல் நீங்கிற்று. அவரும் எழுந்து இயேசுவுக்குப் பணிவிடைசெய்தார்.

பேய் பிடித்த பலரை மாலை வேளையில் இயேசுவிடம் கொண்டு வந்தனர். அவர் ஒரு வார்த்தை சொல்ல தீய ஆவிகள் ஓடிப்போயின. மேலும் எல்லா நோயாளிகளையும் அவர் குணமாக்கினார். இவ்வாறு, ‘அவர் நம் பிணிகளைத் தாங்கிக்கொண்டார்; நம் துன்பங்களைச் சுமந்துகொண்டார்’ என்று இயேசுவுக்கு முன்பு வாழ்ந்த இறைவாக்கினர் எசாயா உரைத்த தீர்க்க தரிசனம் நிறைவேறியது.

Recent posts

வரலாற்றில் முதல் முறையாக மட்டு. ஆயர் இல்லத்தினால் அருட்தந்தையர்களுக்கு எதிராக வழக்கு

மட்டக்களப்பு (Batticaloa) ஆயர் இல்லத்தில் இடம்பெற்ற ஒன்று கூடலை திருட்டுத்தனமாக வீடியோ செய்து முகநூலில் பதிவேற்றம் செய்த சம்பவம் தொடர்பாக ஆயர் இல்லத்தினால் இருவருக்கு எதிராக தொடரப்பட்ட...
Thamil Paarvai

சிலுவையில் இயேசு கிறிஸ்து கூறிய கடைசி ஏழு வார்த்தைகள் யாவை, மற்றும் அவற்றின் அர்த்தம் என்ன?

இயேசு கிறிஸ்து சிலுவையில் கூறிய ஏழு கூற்றுக்கள் இவை தான் (இங்கே எந்த குறிப்பிட்ட வரிசையிலும் இவை கொடுக்கப்படவில்லை): (1) மத்தேயு 27:46 கூறுகையில், ஒன்பதாம் மணி...
Thamil Paarvai

சிலுவையில்இயேசுகூறியஏழுஉபதேசங்கள்

முன்னுரை: கர்த்தராகிய இயேசு கிறிஸ்து சிலுவையில் கூறிய ஏழு வார்த்தைகளை இங்கு உபதேசங்களாக உங்களுக்கு வெளிப்படுத்திக் கொடுக்க விரும்புகிறேன். அவர் சொன்ன ஒவ்வொரு வார்த்தைகளும் ஒவ்வொரு கருத்தை...
Thamil Paarvai

புனித வெள்ளி என்ற பெயர் வருவதற்கான காரணம் என்ன தெரியுமா?

கிறிஸ்தவர்களால் அனுஸ்டிக்கப்படும் ஒரு புனித நாளாக இந்த புனித வெள்ளி எனும் நாள் அனுஸ்டிக்கப்படுகிறது. இது பொதுவாக கத்தோலிக்க மக்களால் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் இயேசுபிரான் உயிர்...
Thamil Paarvai

இயேசு ராஜாவாக வருகிறார்

எருசலேமுக்கு அருகிலுள்ள ஒரு சின்ன கிராமத்திற்கு இயேசு வருகிறார். தம்முடைய சீஷரில் இருவரிடம், நீங்கள் கிராமத்துக்குள் போங்கள், அங்கே ஒரு கழுதைக்குட்டியைப் பார்ப்பீர்கள். அதை அவிழ்த்து என்னிடம்...
Thamil Paarvai

முருகனுக்கு உகந்த தைப்பூச நாளின் சிறப்புகள்..

🦚 முருகப்பெருமானின் அருளை பெற்றுத்தரும் விரதங்களில் தைப்பூசம் விரதமே முதன்மையானதாக கருதப்படுகிறது. சக்தியின் வெளிப்பாடும், தெய்வாம்சமும் பொருந்திய காலம்தான் தை மாதம். தை மாதத்தில் பௌர்ணமியன்று பூசம்...
Thamil Paarvai

தைப்பூசத்திருநாளில் தொட்டதெல்லாம் துலங்கும்”

தைப்பூசத்தின் சிறப்புகள் பூச நட்சத்திர நாள் முருகப்பெருமானுக்கு மிகவும் விசேஷமான நாள் ஆகும். இந்நாளில் தான் முருகப்பெருமான் தாரகாசுரனை வதம் செய்ய தாய் பார்வதியிடம் வேல் வாங்கினார்....
Thamil Paarvai

கோவில்களில் மறந்து கூட இந்த தவறை மட்டும் செய்யாதீர்கள்

1. கோயிலில் தூங்கக் கூடாது.2. தலையில் துணி, தொப்பி அணியக்கூடாது.3. கொடிமரம், நந்தி, பலிபீடம், இவைகளின் நிழல்களை மிதிக்கக் கூடாது.4. விளக்கு இல்லாமல் (எரியாத பொழுது) வணங்கக்...
Thamil Paarvai

வரவிருக்கிறது கிருஷ்ண ஜெயந்தி கிருஷ்ணரை வரவேற்க தயாராவோம்.

கிருஷ்ணஜெயந்தி…!!  ஒவ்வொரு பண்டிகைக்கும் ஒரு புராண கதை உண்டு. அதுபோலவே கோகுலாஷ்டமிக்கும் ஒரு கதை உண்டு. கோகுலாஷ்டமி குழந்தை கிருஷ்ணனின் புகழை சொல்லக்கூடியது.  தசாவதாரத்தில் ஓர் அவதாரம்...
Thamil Paarvai

Leave a Comment