சிறுகதை மொழி இலக்கியம்

கனவு

காலை எழுந்ததும் தினசரி வேலைகள் செய்தால் அவள். தன் இரண்டு வயது குழந்தை எழுவதற்கு முன் கணவரை அலுவலகம் அனுப்பி வைக்க வேண்டும்.  அவசரம் அவசரமாக செய்தால் அந்த பரபரப்பான நேரத்திலும் அவள் மனதில் ஓடியது அந்த விஷயம் தான்,

 ஒரு வாரமாகவே அவள் மனதில் வலியை கொடுத்தது.

அவர் அப்படி என்னிடம் பேசியிருக்க கூடாது, அவர் இப்படியெல்லாம் பேசுவார் என்பதே அவளுக்கு அன்றுதான் தெரியும் இவ்வளவு நாள் நான் ஏமாந்து போனேனா இல்லை அவர் ஏமாற்றினாரா! அவர் அன்பு காட்டுவது போல் நடித்தாரா! என்று யோசிக்கும் போதே கணவர் அழைத்தார், கனி என்று,

இதோ வந்துட்டேன் என்று சொல்லி கொண்டே காலை உணவு வைத்து விட்டு சமையலறை  சென்றால். 

கணவர் சாப்பிட்டு கிளம்பும் போது அன்பாக,. பாத்திரமா இரு, கடைக்கு பாத்து போ, ரோடு பாத்து கிராஸ் பண்ணு என்று எப்போதும் சொல்லும் அறிவுரை சொல்லி விட்டு கிளம்பினார்.

அவள் கோபகமா இருப்பது தெரிந்தும் அவன் கடமைக்காக சொல்லி விட்டு சென்றான்.

மீண்டும் மீண்டும் அவளுக்கு ஓடியது மனதில் நான் செய்தது தவறா?  

அதற்காக என் அப்பா என் அம்மாவை எப்படி பேசிநாரோ அதே வார்த்தைகளை திரும்ப கேட்டது போல் ஒரு வார்த்தை!  

உன்னால எனக்கு  எந்த உபயோகம் இல்லை, பத்து பைசா பிரயோஜனம் இல்லனு என் அம்மாவை, அப்பா சொன்ன வார்த்தையை மறுபடி அவர் கணவர் சொல்லி கேட்டது அவள் மனதை பின்னோக்கி தள்ளியது, ஆம் கனிக்கு  அப்பா நல்ல அப்பாவாக இருந்தார், ஆனால் அவளது அம்மாவிற்கு நல்ல கணவராக இல்லை.

எப்போதும்  திட்டி கொண்டும், அம்மா வேலைக்கு செல்லாத காரணத்தில் அவளுக்கு எதுவும் தெரியாது,.. என்ற மன நிலையில் வார்த்தைகளை வீசுவார் 

இதை பார்த்து  வளர்ந்த அவள் கண்டிப்பாக திருமணத்திற்கு பின் வேலைக்கு செல்ல வேண்டும் என்ற குறிக்கோளுடன் இருந்தால், படித்தால் பட்டம் பெற்றால், வேலைக்கும் சென்றால்,  இரண்டு வருடம் மட்டுமே.

அடுத்து திருமணம், அடுத்த ஐந்து வருடம் குழந்தைகாக மருத்துவமனைக்கு அலைந்தால் கனி,  அதில் அவள் கனவு கரைந்து போனது,

இப்போது முப்பதிரண்டு வயதாகும் கனி தன் கணவர் பேசிய பேச்சில், தன் அம்மாவின் வலியை மீண்டும் உணர்ந்தாள்.

கனி எழுந்தாள் கண்ணாடி முன் நின்றாள்!

என்ன கனி சோகமா இருக்க எனக்கு தெரியும் நீ ஒருநாள் இப்படி  என் முன்னாடி நிப்பனு, உன் ஆசை உன் அம்மா ஆசை கனவு எல்லாம் மறந்துட்டியா இல்லை உனக்கு அது தேவை படலையா?

உன் கணவர் உன்ன ரொம்ப நல்லா பாத்துக்குறாருனு பெருமிதம் பட்ட இன்னைக்கு உன் அம்மாவோட சிகிச்சைகாக ஒரு ஐம்பதாயிரம் எடுத்து குடுத்ததுக்கு எப்படி பேசிட்டாரு பாத்தியா!

என்னைக்கு இருந்தாலும் ஆண்கள் அப்படித்தான் கனி, 

அவர் கேட்டது சரிதானே அவர் உழைப்பில் வந்த பணத்தை நீ ஏன் இஷ்டத்துக்கு செலவு பண்ற,  இதுவரை நீ செலவு செய்தது அவர் குடும்பத்துக்கு அதுனால அவர் கேள்வி கேக்கல,

உன் வீட்டுக்கு செய்யணும்னா நீ சம்பாரிச்சு செய்,

நீ மறந்துட்டியா நீ ஆசைப்பட்டதே உங்க அம்மாவை பைனான்சியலா நல்லா வச்சிருக்கணும் அதுக்கு நாம வேலைக்கு போகணும்னு,. இப்போ எங்க போச்சு உன் ஆசை, கனவு எல்லாம் . 

குழந்தையை காரணம் காட்டாத. 

நீ படிக்குறப்போ மல்டி talented,.. ஒரே நேரத்துல டான்ஸ்,ஸ்போர்ட்ஸ்,படிப்புனு சாதிச்சுருக்க

சரி விடு நீ முடிவு பண்ணு, நீ கணவரே உலகம் வாழ போறியா இல்லை, உன் கனவுக்கு உயிர் கொடுக்க போறியா?

என்று அவள் மனசாட்சி கேட்டது.

குழந்தை அழும் சத்தமும் கேட்டது,

வேகமாக ஓடினாள், குழந்தையை அள்ளி எடுத்து முத்தமிட்டாள் 

 என் செல்லக்குட்டி தூங்கி எழுந்தாச்சா!

அம்மா இன்னைலருந்து  அரசு வேலைக்காக படிக்க போறேன் தங்கம் அம்மா சொல் பேச்சு கேட்டு சமத்தா இருக்கியா,

பேசவே தெரியாத தன் இரண்டு வயது பிள்ளை சிரித்து கொண்டே,  ம் என்று தலை ஆட்டியது!

அவளுக்குள் நம்பிக்கை வர வைத்தது,     அவள் தன் அம்மாவின் கனவை நிறைவேற்றுவாள் என்று.

நிதி சுதந்திரம் பெண்ணுக்கு அவசியம்.

Recent posts

பூமிக்குள் மறைந்திருக்கும் பிரம்மாண்ட கடல்… விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

பூமியின் மேற்பரப்பில் நாம் காணும் கடல்கள், ஆறுகள், ஏரிகள் அனைத்தும் சேர்ந்ததை விட பல மடங்கு அதிகமான நீர் நம் காலடிக்கு அடியில், சுமார் 400 முதல் 660 கிலோமீட்டர்...
Thamil Paarvai

உலகின் கையிருப்பு நாணயம் மாறுகிறதா? டாலர் ஆட்சிக்கு ஆபத்தா?

ஆம், உலகின் நாணய முறைமையில் ஒரு குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்பட்டு வருகிறது. அமெரிக்க டாலரின் நிலை சவால்களை எதிர்கொண்டாலும், அதன் ஆதிக்கம் உடனடியாக முடிவுக்கு வரும் நிலை...
Thamil Paarvai

உலகின் முக்கிய நீரிணைகளின் வரலாறு

நீரிணைகள் வெறும் நீர்ப் பரப்புகள் மட்டுமல்ல; அவை உலக வர்த்தகத்தின் நாடிகள், பேரரசுகளின் போர்க்களங்கள், மற்றும் நாகரிகங்களின் சந்திப்பிடங்களாக விளங்குகின்றன. உலகின் மிக முக்கியமான மூன்று நீரிணைகளின்...
Thamil Paarvai

இன்றைய உலக நாணயங்கள்: பாரம்பரிய நாணயங்கள் மற்றும் டிஜிட்டல் நாணயங்கள்

உலக நாணய உலகம் இன்று இரு முக்கிய முகங்களைக் கொண்டுள்ளது: ஒருபுறம் நாடுகளின் பாரம்பரிய நாணயங்கள், மறுபுறம் வேகமாக வளர்ந்து வரும் டிஜிட்டல் நாணயங்கள். 2026-ம் ஆண்டின்...
Thamil Paarvai

பன்முக நாணய முறைமை (Multipolar Currency System) – ஒரு விரிவான பார்வை

பன்முக நாணய முறைமை என்பது உலகப் பொருளாதாரத்தில் ஒரு சக்திவாய்ந்த நாணயம் (தற்போதைய அமெரிக்க டாலர்) மட்டும் ஆதிக்கம் செலுத்தாமல், பல முக்கிய நாணயங்கள் சமமாகவோ அல்லது போட்டியிட்டோ...
Thamil Paarvai

பிரிக்ஸ் நாணயம்: உண்மையில் என்ன நடக்கிறது?

பிரிக்ஸ் (BRICS) நாடுகள் ஒரு புதிய பொதுவான நாணயத்தை உருவாக்கும் முயற்சியில் இருப்பதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. ஆனால், 2026-ம் ஆண்டின் தற்போதைய நிலவரப்படி, “பிரிக்ஸ் நாணயம்” என்ற...
Thamil Paarvai

சீன நாணயத்தின் வரலாறு: கடற்சிப்பிகளில் இருந்து டிஜிட்டல் யுவான் வரை

சீன நாணயத்தின் வரலாறு உலகின் மிகப் பழமையான தொடர்ச்சியான நாணய வரலாறுகளில் ஒன்றாகும். கடற்சிப்பிகள் (sea shells) பயன்பாட்டில் இருந்த காலம் முதல், இன்றைய டிஜிட்டல் யுவான்...
Thamil Paarvai

ரஷ்ய நாணயத்தின் வரலாறு: ரூபிளின் பயணம்

ரஷ்ய நாணயமான ரூபிள் (Ruble) உலகின் மிகப் பழமையான நாணயங்களில் ஒன்றாகும். இது பிரிட்டிஷ் பவுண்டிற்கு அடுத்தபடியாக இன்றும் பயன்பாட்டில் உள்ள மிகப் பழமையான நாணயமாகக் கருதப்படுகிறது. 13-ம் நூற்றாண்டில்...
Thamil Paarvai

டிஜிட்டல் நாணயங்கள்: ஒரு முழுமையான அறிமுகம்

டிஜிட்டல் நாணயங்கள் இன்று உலக நிதி அமைப்பில் ஒரு புரட்சிகரமான மாற்றத்தை ஏற்படுத்தி வருகின்றன. 2026-ம் ஆண்டு நிலவரப்படி, டிஜிட்டல் நாணய உலகம் மூன்று முக்கிய வகைகளாகப்...
Thamil Paarvai

Leave a Comment