இதமாக..!
என்னவளே!..
உன் புன்னகை கண்டு உன்னிடம்
பேசி மகிழ வந்தேன்!
உன் சுடர் விழிப்பார்வையால் சூடாகினாய்..
அதுகூட இதமாகத்தான் இருந்தது..
தற்பொழுது பெய்த மழையின் குளிருக்கு..!
புதுமைப்பெண்
பெண்ணை பெண்ணால் கொல்லும்
இந்த ஆணுலகில் மீண்டு வந்து
இம்மண்ணுலகில் வெற்றிப் பாதையில் தடம்
பதித்து கொண்டிருக்கும் என் பெண்ணினமே நீ
கடந்து வந்த பாதை என்ன பூப்பாதையா..
அல்ல அல்ல அது தீப்பாதை..
முடிந்ததோ அந்தப் பாதை
அல்ல அல்ல முயற்சிப்பாள்
என்றும் என் கோதை..
மேதை என பல மேடைகள் ஏறி
அவள் சாதனை செய்வாள்
சாகசம் புரிவாள்..
வெற்றிக் கனி அது எட்டாக்கனி..
என நினைக்கும் எம் பால் பெண்களுக்கு
வெற்றிப் பாதைகள் பல வழி திறப்பாள்
எடுத்துக்காட்டாய் அவள் என்றுமே இருப்பாள்
அவள் தான் எங்கள் புதுமைப்பெண்
அமைதி!
இறுகிய மனதுடன்
எனது பயணம்
வெளியே தூறல்
மனதுக்குள் குமுறல்
பாசமில்லா உலகில்
பாசாங்குடன் சிலர்
அமைதியை தேடி
அமைதியுடன் நான்…
வேண்டும்..!
பூலோகத்திலே ஒரு தோழி வேண்டும் புதுமைகள் நான் செய்திட
அனுதினமும் ஆனந்தமாய் ஆகிட
சோகத்தில் நான் சாய்கையில் தோளினை நீ தரவேண்டும்
கல்லூரி சாலையிலே கவி பாட வேண்டும்
கவிதையின் உச்சம் எனக்குள் காதலாய் மாற வேண்டும்
வஞ்சகமில்லா நெஞ்சங்கள் வேண்டும்
வாழ்விலே பல மாற்றங்கள் வேண்டும்
உன் புன்முறுவல் சிரிப்பில் புதைந்து போக வேண்டும்
சோகங்கள் எல்லாம் பூவாய் இதழாய் பூத்து குலுங்க வேண்டும்
என் வாழ்நாள் எல்லாம்..
தாய்வழி சொந்தமில்லை நீ எனக்கு..
இந்த தரணியிலே உன்னை அன்றி வேறு பந்தமில்லை நீ எனக்கு..
நாட்கள் எல்லாம் வாரங்கள் ஆகும்..
வாரங்கள் தோறும் மாதங்கள் ஆகும்..
மகிழ்ச்சியில் இன்பம் பொங்கும்!!
கண்ணீர்..!
தினந்தோறும்
அழுகிறேன் – என்
கண்ணீருக்கு பின்னால்
இருப்பது யார் என்று
எனக்கும் – என்
கண்ணீருக்கும் மட்டும் தான்
தெரியும்
அது
நீ என்று…