சிறுகதை சிறுவர் பக்கம் பஞ்ச தந்திரம்

காக்கா ஏன் கறுப்பாச்சு

ரொம்ப காலத்துக்கு முன்னாடி காக்கா வெள்ளையா இருந்துச்சாம். அப்ப எல்லா காக்காவும் ரொம்ப தூரமா சூரியன் வரைக்கும் பறந்து போகுமாம்.

சூரியபூர் நாட்டோட ராஜாவுக்கு ரொம்ப வருஷம் கழிச்சு அழகான இளவரசி பிறந்தாங்கலாம். குழந்தையில இருந்து வீட்டை விட்டே வெளிய வராம பெரியவங்களாகி வெளிய விளையாட வந்தாங்கலாம். அவங்க பேரு அற்புதா.

அவங்க விளையாடறத பாத்த சூரியனுக்கு அவங்களை ரொம்ப பிடிச்சு போச்சாம். இளவரசிக்கும் சூரியனை பிடிச்சிடுச்சாம்.

இரண்டுபேரும் எப்பயும் பேசிட்டே இருபாங்கலாம், ரொம்ப நல்ல நண்பர்களா மாறிட்டாங்க. ஒரு நாள் சூரியன் இந்த இளவரசிக்கு பரிசு கொடுக்க நினைச்சுதாம்.

சூரியன் கிட்ட வரைக்கும் பறக்கிர காக்காவ கூப்பிட்டு பையில சந்தனம், வாசனை திரவியங்கள், முத்து மாலை எல்லாம் கொடுத்து இளவரசி கிட்ட கொடுக்க சொல்லுச்சாம்.

காக்கா அந்த பைய தூக்கிகிட்டு இளவரசி இருந்த அரண்மனைய நோக்கி பறந்து போகும் வழியில் திருமண ஊர்வலம் போயிட்டு இருந்தது. அதில் நிறைய பழங்கள், உணவுப்பொருட்கள் எடுத்துட்டு போனாங்க.

காக்காவுக்கு கொஞ்ச உணவாச்சும் கிடைக்குமேன்னு ஆசப்பட்டு, பைய ஒரு மரத்தில மாட்டிட்டு திருமண ஊர்வலத்துக்கு போச்சாம்.

மரத்துக்கு கீழ இருந்த ஒருத்தன் பையப் பார்த்து மரத்துல ஏறி பைக்குள்ள சூரியன் கொடுத்து அனுப்பின எல்லா பொருளையும் பார்த்து சொக்கி போயிட்டானாம். உடனே எல்லாத்தையும் எடுத்துகிட்டு மரத்தில இருந்த குப்பை எல்லாம் பையில எடுத்து போட்டுட்டு கிளம்பிட்டான்.

காக்கா நல்லா சாப்பிட்டு வந்து, பைய எடுத்துகிட்டு இளவரசி கிட்ட சூரியன் கொடுத்த பைய கொடுத்துச்சாம். திறந்து பார்த்த இளவரசிக்கு அதிர்ச்சி.

இந்த சூரியன் ஏன் இப்படி பண்ணிடுச்சு. என் மேல அன்பே இல்ல. எல்லாம் நடிப்புனு சொல்லிட்டு பைய தூக்கிப்போட்டுச்சாம்.

மறுநாள் காலை, சந்தோஷமா இளவரசிய பார்க்கலாம்ன்னு வந்த சூரியன் அந்த பை கீழ கிடந்ததப் பார்த்து ஏதோ தப்பு நடந்திருக்குதுன்னு புரிஞ்சிடுச்சாம். பயங்கர கோபம் வந்துடுச்சாம்

காக்காவை கோவமா பாத்த உடனே வெள்ளையா இருந்த காக்கா கறுப்பா மாறிடுச்சாம். அதனால தான் சூரியன் கிட்டகூட பறக்க முடியாம போச்சாம். கிட்ட இருந்த சூரியனுக்கும் கோபம் வந்து பூமி மேல தூரமா போயிடுச்சாம்.

நீதி : கொடுக்கும் வேலையை சரியாக செய்தல் வேண்டும்.

Recent posts

வார்த்தைகளை புத்திசாலித்தனமாகத் தேர்ந்தெடுங்கள்

ஒரு காலத்தில் முதியவர் ஒருவர் தனது அண்டை வீட்டுக்காரரை திருடன் என்று வதந்தியை பரப்பினார். இதன் விளைவாக அந்த இளைஞர் கைது செய்யப்பட்டார். நாட்கள் ஓடின, இளைஞனும்...
Thamil Paarvai

மூன்று வகையான மக்கள்

ஆசிரியர் மாணவர்களிடம் மூன்று பொம்மைகளை காட்டி, அதில் உள்ள வேறுபாடுகளை மாணவ்ரகளை கண்டுபிடிக்கும்படி கேட்டார். மூன்று பொம்மைகளும் ஒரே மாதிரி வடிவம், அளவை கொண்டது. மிகுந்த கவனிப்புக்குப்...
Thamil Paarvai

ஓநாய்.. ஓநாய்..

ஒரு கிராமத்தில், ஆடு மேய்க்கும் சிறுவன் ஒருவன் வாழ்ந்து வந்தான். ஒருமுறை அவன் ஆடு மேய்த்து கொண்டிருந்த போது, கிராமவாசிகளுக்கு விளையாட்டு காட்ட நினைத்தான். உடனே “ஓநாய்.....
Thamil Paarvai

முட்டாள்தனமான நாரை

ஒரு நாள் நாரை மிகுந்த பசியுடன் இருந்தது, அதற்கான உணவைத் தேடி கூட்டிலிருந்து வெளியே வந்தது. நாரை, மீன் பிடிக்க ஆற்றங்கரைக்கு சென்று மீனுக்காக காத்துக்கொண்டிருந்தது. நாரை...
Thamil Paarvai

ஆழம் தெரியாமல் காலை விடாதே

ஒரு நரி கிணற்றின் பக்கமாக நடந்து சென்றது. அப்போது எதிர்பாராத விதமாக அது கிணற்றினுள் விழுந்தது. அது தன்னால் முடிந்த வரை வெளியே வர முயற்சித்தது, அதனால்...
Thamil Paarvai

தவறு யாருடையது?

எலியும், தவளையும் நண்பர்களாக இருந்தனர். ஒவ்வொரு காலையிலும் தவளை தன் குளத்தில் இருந்து வெளியேறி தனது நண்பனை சந்திக்கச் செல்லும். எலி அதற்கும் நீச்சல் கற்றுக்கொடுக்க தவளையிடம்...
Thamil Paarvai

மூன்றாவது மீனுக்கு என்ன ஆச்சு?

ஒரு கிராமத்தில் உள்ள குளத்தில் மூன்று மீன்கள் மிகவும் நெருங்கிய நண்பர்களாக இருந்தன. ஒரு நாள், அந்த குளத்தின் வழியாக சென்ற சில மீனவர்கள், அங்கே நிறைய...
Thamil Paarvai

மறைக்கப்பட்ட புதையல்

ஒரு விவசாயிக்கு ஐந்து மகன்கள் இருந்தனர். அவர்கள் அனைவரும் சோம்பேறிகளாக இருந்தனர். அவர்களை கடுமையாக உழைக்கும் இளைஞர்களாகப் பார்க்க அந்த விவசாயி விரும்பினார். அவர்களின் எதிர்காலத்தைப் பற்றி...
Thamil Paarvai

பேராசை கொள்ளாதீர்கள்

ஒருமுறை ஒரு நாய் மிகவும் பசியாக இருந்தது. அது எல்லா இடங்களிலும் உணவுக்காக அலைந்தது, கடைசியில் ஒரு எலும்பு துண்டை கண்டது. அது தன் வாயில் எலும்பு...
Thamil Paarvai

Leave a Comment