இணையத்தில் சிறார் ஆபாச படங்களை பதிவேற்றம் செய்த வழக்கில் ரொறன்ரோ பொலிசார் பள்ளி ஆசிரியர் ஒருவரை கைது செய்துள்ளனர்.
ரொறன்ரோவை சேர்ந்த 32 வயது Sean Done என்ற ஆசிரியரே குறித்த வழக்கில் மே 27ம் திகதி பொலிசாரால் கைதாகியுள்ளார். அவர் மீது 5 பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டுள்ளது.
Central Toronto Academy என்ற பள்ளியில் குறித்த நபர் உயர்நிலைப் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றியுள்ளார். அவரிடம் இருந்து கைப்பற்ற புகைப்படங்களின் எண்ணிககையை ஒப்பிடுகையில்,
அவருக்கு கண்டிப்பாக பல மாணவர்களுடன் தொடர்பு இருக்கலாம் எனவும், குறிப்பாக இணையத்தில் அதற்கான வாய்ப்புகள் அதிகம் எனவும் பொலிசார் தெரிவிக்கின்றனர்.
இந்த விவகாரம் தொடர்பிலும், ஆசிரியர் Sean Done குறித்தும் தெரியவரும் பொதுமக்கள் அல்லது பாதிக்கப்பட்டவர்கள் பொலிசாரை நாட கேட்டுக்கொண்டுள்ளனர்.